சுதேசிக் கல்வியே சுயகல்வி-தினமலர் உரத்த சிந்தனை

l

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் (அனுமதி மற்றும் நடைமுறை ஒழுங்குபடுத்தும்) சட்ட வரைவை லோக்சபாவில் அறிமுகப்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வரைவு அனேகமாக இந்த ஆண்டிலேயே, சட்டமாக இயற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களுக்கு, இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கவும், பட்டங்களை அளிக்கவும் இந்த வரைவு அனுமதிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே, பல முனைகளிலிருந்து வந்த எதிர்ப்புகளால், இது கிடப்பில் போடப்பட்டிருந்தது.பின், அரசு செயலர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில பிரிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது கூட, முக்கிய எதிர்கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும், இந்த வரைவை சட்டமாக்கக் கூடாது என, எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆளுங்கட்சியிலேயே கூட, இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டால், நமது மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கென நிறைய பல்கலைக்கழகங்கள் இருக்கும் எனவும், அதனால் இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு, போட்டி அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் கல்வியின் தரம் உயரும் எனவும், கல்வி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலும் பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்த நாடுகளைப் போல, நம் நாட்டிலும் அதிகம் பேர் படிக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

கல்வித்துறை என்பது, நாட்டிலுள்ள மற்ற பல துறைகளைப் போன்றதல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் நிர்ணயித்து, நாட்டின் முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் அடிப்படையான துறை. ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்களது குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்க, துணைபுரியும் கல்வியை கொடுத்து அவர்களின் வாழ்வையும், வளத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, அரசும், அதைச்சார்ந்த சமூகமும், கல்வி குறித்த கொள்கைகளில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றவுடனே, நமது மனதில் தோன்றும் முக்கியமான நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகள் உள்ளிட்டவைதான். அந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரங்களின் தன்மை, அங்குள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி பார்த்தாலே, அவர்களின் உயர்கல்வி பற்றிய நிலைமையை நம்மால் அறிய முடியும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உயர்கல்விக்கு பிரபலமான நாடுகளில், தனிநபர் சுதந்திரம் மேலோங்கி குடும்பங்களும், சமூகங்களும் வெகுவாக சிதைந்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாற்பது சதவீதம் குழந்தைகள், திருமணமாகாத உறவுகளின் மூலம் பிறந்துள்ளன.

உலகின் பல பெரிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்த நாடுகளில், அதிக கல்வி கற்றவர்கள் உயர் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் தவறான வழிமுறைகள் மூலம் தங்களது சுயலாபத்துக்காக அரசையும், மக்களையும் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அதனால், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கல்வி மற்றும் போதனை முறைகள் கூட முழுமையானதாக இல்லையென, அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். 'அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, கடந்த நாற்பது வருடங்களாகத் தாங்கள் போதித்து வந்த தவறான கோட்பாடுகளே காரணம்' என, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற, நிபுணர்கள் தற் போது வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனர்.மேற்கு நாடுகளின் வரலாற்றை பார்த்தோமானால், அவர் களது சமூக மற்றும் பொரு ளாதாரம் குறித்த பல கோட்பாடுகளும், அவர்களது நாடுகளிலேயே தொடர்ந்து தோற்றுப்போய் வருவது தெரியவரும்.

தற்போதைய நெருக்கடியால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம், அவர்கள் இப்போது வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளனர்.அதே சமயம் இந்தியா, பலவிதமான சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு இடையிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதனால், உலகிலேயே அதிகமான வேகத்துடன் வளரக்கூடிய இரண்டாவது நாடாக உருவாகியுள்ளது. பலவிதமான குறைபாடுகள் இருந்தபோதும், இந்தியாவின் பொருளாதார, குடும்பம் மற்றும் சமூக முறைகளை உலகின் பிற நாடுகள் முன்மாதிரியாக பார்க்கின்றன.அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்கள், உலகின் எந்த நாட்டோடும் போட்டிபோட்டு வெற்றி பெருமளவு திறமையுள்ளவர்களை உருவாக்கி வருகின்றன.

தேவையான வசதிகளை அரசால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதெனில், அதை நம் நாட்டிலுள்ள தனியார் துறையிடமே கொடுத்து அவற்றை சரியான முறையில் கண்காணிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை பொருத்தவரையில், அவர்கள் இங்கு லாப நோக்கோடுதான் வருவர். அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், அமெரிக்காவில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான நிதி உதவிகளை பல மாநிலங்கள் வெகுவாகக் குறைத்து வருகின்றன.சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் அவர்களது சில கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொழிலில் தக்கவைத்துக் கொள்ள, வேறு நாடுகளை நோக்க ஆரம்பித்துள்ளன.அதிலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட, வேகமாக வளரும் நாட்டில் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த சமயத்தில் அவர்கள் இங்கு வர முயற்சிப்பது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே .கல்வித் துறையில் நமது நாடு ஆரம்ப காலத்தொட்டு உயர்ந்த நிலையில் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு நடத்திய கணக்கெடுப்புகள் உலகிலேயே அதிக அளவு கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது எனத் தெரிவிக்கிறது. அதற்குப் பின்னர்தான் கல்வித்துறையின் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கல்வியானது கற்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும், நாட்டின் வளத்தையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

தற்போதைய பாடத்திட்டங்களை பெரும்பாலும், மேல்நாட்டு வாழ்க்கை முறை மற்றும் கோட்பாடுகளை சார்ந்தவையாகவே உள்ளன. இதைக் களைய பாடத் திட்டங்களிலும், செயல்பாடு முறைகளிலும், உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும். தேவையான முதலீடுகளை செய்வதற்கு நம் நாட்டில் தனியார் துறை தயாராக உள்ளது. எனவே, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?

- பேராசிரியர் ப.கனகசபாபதி - இயக்குனர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்

வாசகர் கருத்து
அற்புதம் !!!!!!!!!!!!!!!!!
by S Dhasarathan,chennai,India 26-04-2010 20:32:16 IST
அன்னியர்களின் பார்வை நம் நாட்டிற்கு வந்து குவியும் அன்னியச்செலவானியின் மீது பட்டு விட்டது! எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை இந்திய மண்ணில் கால் பதிக்க விடக்கூடாது.பிரபலமான பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.ஏற்கனவே கல்வி என்பது சாமானியர்களுக்கு கனவாக மாறி வரும் இந்த வேளையில் புதிய வரவு நடுத்தர மக்களை நிலை குழையச்செய்து அவர்களை ஆண்டியாக்கி அலைய வைத்து விடும்.தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தியைப் பெருக்கித் தரும் நிறுவனங்களுக்கு அனுமதி தரலாம்.இதன் மூலம் படித்து விட்டு வீட்டுக்கு இரண்டு பொறியாளர்கள் வேலை வாய்ப்புக்காக தவம் கிடக்கும் அவலநிலை மாறிவிடும்
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates 25-04-2010 23:32:06 IST
தனிமனித வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைகளிலும் பெருமளவு தோல்வியை தழுவி வரும் மேல் நாட்டினரிடமிருந்து எந்த விதமான உயர்கல்வியை நாம் எதிர்பார்க்க முடியும்? மற்ற பிற நாடுகளை விடவும் வலுவான ஆதாரங்களைப் பெற்றுள்ள நம்மால் ஏன் தேவையான மாற்றங்களை செய்ய முடியாது?ஒரு பானை சோறுக்கு இது போதும்--மிக நன்று--
by S.R. SEKHAR,coimbatore,India 25-04-2010 19:12:44 IST
நாம் நமது அடையாளங்களையும், புராதன வாழ்வியல் நெறிகளையும் அன்னியருக்கு தேவையான கல்விமுறையால் இழந்துவிட்டு நிற்கிறோம். புதிய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால் அப்படியுள்ள புராதன அறிவையும், நமது நிலா அமைப்பு சார் வாழ்வியலையும் தொலைத்து விடுவோம் என்ற நிலையை வரவேற்பதுபோல் உள்ளது.
by M Siva,KUWAIT,India 25-04-2010 17:07:38 IST
நம் நாட்டு கல்வியே மேல், அயல் நாட்டு கல்வி வெறும் படிப்பை மட்டுமே அளிக்கும், ஆனால் நம் நாட்டு கல்வியோ படிப்புடன் ஒழுக்கத்தையும், குடும்ப உறுதியையும் அதன் மென்மையும் நிலைநாட்டும்.
by கணேஷ் ,Maldives,Maldives 25-04-2010 16:30:05 IST
This article proves that the foreign institutes are always money minded and that too they only come to India to survive in this recession period. So, you never get good education and this would not give us benefit. Please don''t allow foreign institutions.
by R செந்தில்குமார்,zurich,Switzerland 25-04-2010 15:23:11 IST
Prof.KanagaSababathy is right in his opinion that permitting foriegn universities to have their campuses in India alone could not deliver the desired results promised by the HRD ministry. In fact, we in India do have a lot of fascination for foreign university degrees because of lack of adequate information about such universities and also a lot of myths about UK, US degrees.Education as such is culture specific in particular and nation-specific in general and so should be rooted to a nation''s legacy and future development; it is in a broader sense empowering the citizens with the objective of building the society and the nation.In this sense I wish to state that foriegn universities can only cater to our elite population''s fancy to have a foreign degree without contributing anything towards bettering the intellectual growth of our younger generation and thereby our nation in a holistic manner.Our HRD minister Kapil Sibel is right when he opines that we need more and more universities and colleges prportionate to our population. To fulfill this requirement and also to prevent a large number of students traveling abroad for education, the ministry has decided to permit foriegn iniversities. But all these attempts seem to undermine certain factors relating to the nature of Indian education providers and that of those abroad. In my experience as a university teacher abroad, brushing shoulders with other nationals and teachers mostly trained in UK, US and Australia, I can declare with conviction that Indians are second to none in professional skills, brilliance, education or work culture. What ails the Indian educational sector is lack of infrastructural facilities to carry out focussed research on specialised areas due to lack of funds. As such we end up as jack of all trades and master of none whereas our foriegn counterparts excell in their specialised areas. Hence, instead of permitting foriegn universities our government should encourage the private players along with the government to establish more universities with a very strong apolitical constitutionally constituted regulatory body to enforce stipulations and with emphasis on infrastructral facitities for research. Individualizing our syllabus content and keeping the student-teacher ratio to an efficient level and keeping our objective on empowering our people and therby building India will elevate our universities on a par or even superior to the universities abroad.
by Dr swami D. Francis,Libya,India 25-04-2010 14:13:42 IST
Now it is very clear why they want to close the Deemed Universities. Do you know in one of the government colleges there are two different classes - one for capitation students and another one for government quota students? Instead of allowing foreign universities in our soil - help the present Universities both government and private - give them advice - follow up - do something to improve the quality constructively. Othewise the foreign universities will function here only to widen the gap between an ordinary Indian and mega rich indian - and will make some people''s pockets fat by draining our pockets.
by N R,Sana'a,Yemen 25-04-2010 13:25:30 IST
நல்ல கருத்து மேலும் உண்மை யான கருத்து! எங்கு தான் பிரச்சனை! இந்திய அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்! we have tremendous private university people, but why dont to create new more IITS, NITs, IISC''c to stat up on US people sudents are willing to do their PHD in IISCs and IITs. By keep in mind that Govt of India Can have very good policy with all the Hingher Education to be with them only and Separate special wing to be incorp[orated in this scenes. Its may provide, JOBS to Some educated one, People, Culture, Educations and upligt ment of people can have in thier own regions.
by n வெங்கட்குமார்,trichy,India 25-04-2010 12:13:38 IST
மிகவும் சிந்திக்ககூடிய கட்டுரை. உயர் கல்விகளில் மட்டும் தான் அரசு நிறுவனம் தரமான கல்வியை கொடுக்கிறது உதாரணம் அண்ணா பல்கலைகழகம் மண்டல பொறியியல் கல்லூரி .பனிரெண்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் தனியார் பள்ளிகளே தரமான கல்வியை கொடுக்கிறது.குறிப்பாக மாணவர்களின் disclipne ,punctuality போன்ற நற்குணங்கள் தனியார் பள்ளிகளில் மட்டுமே உள்ளது .எப்படி இருந்தாலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்ககூடாது .இந்தியாவின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்விதரம் ,பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பார்த்து பொறாமைகொண்டு எந்தெந்த வழிகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கவேண்டுமோ அந்தந்த வழிகளில் வளர்ந்தநாட்டினர் முயற்சி செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போக கூடாது .சேதுராமன் நன்னிலம்
by p சேதுராமன் நன்னிலம் ,Dubai,UnitedArabEmirates 25-04-2010 11:29:49 IST
தயவுசெய்து இந்த கட்டுரையின் நகலை மத்திய அரசுக்கு அனுப்பவும். நன்றி.
by சாமிமுத்து சிவகுமார் ,singaporeanthivayal,India 25-04-2010 10:55:48 IST
நம்மால் ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். கையேந்தி நின்றதெல்லாம் போதும். இனியாவது சுயமாக முடியு எடுப்போம்.
by g அழகுநம்பி,qatar,India 25-04-2010 08:44:11 IST
QUALITY EDUCATION CAN BE ONLY GIVEN BY THE GOVT. BEEING A NON PROFITAL ORGANISATION GOVT ALONE GIVE A GOOD EDUCATION TO ITS PEOPLE. THE BEST INSTITUTES OF INDIA LIKE ANNA UNIVERSITY, JIPMER, REC ARE GOOD EXAMPLES OF GOVT INSTITUES. PRIVATE ORGANISATIONS ARE PROFITE MINDED AND THEY NEVER BOTHER ABOUT QUALITY. TO GET 100% RESULTS WE KNOW HOW PRIVATE MATRIC AND HS SCHOOLS ABUSE STUDENTS. HOW CAN WE EXPECT QUALITY FROM PRIVATE MEDICAL COLLEGES WHO BRIBED DESAI AROUND Rs 30 CRORES TO HAVE AUTHORISATION SO STOP FURTHER PRIVATE AND FORGIEN EDUCATIONAL INSTITUATIONS..
by Paris EJILAN,-,France 25-04-2010 04:30:30 IST
சிறந்த கட்டுரை அளித்த தினமலருக்கு மிக்க நன்றி
by k சுப்புராஜ்,Sharjah,India 25-04-2010 01:19:08 IST
.