நிமிர்ந்து பறக்கும் இந்தியக் கொடி


அமெரிக்காவில் நிதி நெருக்கடி பெரிதாக உருவெடுத்து ஒரு வருட காலம் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பெரிய காப்பீடு மற்றும் வங்கி நிறுவனங்கள் மீள முடியாத சிக்கல்களில் இருப்பதாக அறிவித்தன. நிதி சார்ந்த துறைகளைத் தொடர்ந்து, உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளையும் அந்த நெருக்கடி பாதித்தது. வேகமாகப் பரவிய நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, பின், உலகின் பல பாகங்களுக்கும் சென்றது. அதனால், அமெரிக்க நிதி நெருக்கடி உலகின் பொருளாதார நெருக்கடியாக மாறியது.நிறுவனங்களை அழிவிலிருந்து தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகைகளை ஒதுக்கியது. சிக்கலில் இருந்த பெரிய கம்பெனிகளில் அரசே பங்குகளை வாங்கி, அவற்றைத் தத்தெடுத்துக் கொண்டது. பாதிப்புக்குள்ளான நாடுகள் பலவற்றிலும், அவர்களுக்குப் பொருத்தமான வகைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆயினும், நெருக்கடியின் தாக்கம் மேற்கத்திய நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளன. அதனால், வளர்ச்சி விகிதங்கள் மிகவும் குறைந்தும், எதிர்மறையாகவும் உள்ளன. காலாண்டு வளர்ச்சி விகிதங்களை கணக்கிட்டுப் பார்த்தால், நெருக்கடிக்குப் பிந்தைய கடந்த ஒரு வருட காலத்தில், பெரும்பாலான நாடுகளில் குறைந்தது ஒரு காலாண்டிலாவது பூஜ்யத்துக்கும் கீழே வளர்ச்சி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு, அந்த நாடுகளை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது. வேலை இழப்புகளும், நிறுவனங்கள் மூடப்படுதலும் இன்னமும் குறைந்தபாடில்லை. அமெரிக்க நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் 10ஐ நெருங்கியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் 90க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. அதனால், மக்களின் வாழ்க்கை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது.அதே சமயம், இந்த நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த விவரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள், சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன. முக்கியமாக பொருளாதார நெருக்கடி அவர்களையும் பாதித்திருந்தாலும், அதனால் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சிக்கனமான நடைமுறைகளும், குடும்ப அமைப்பு முறையும், திட்டமிட்ட வாழ்க்கையும் அவர்களை ஆபத்திலிருந்து காத்துள்ளன. அங்கு தொழில் செய்யும் சில இந்தியர்கள் தற்போது, தங்களது தொழில்களை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாகவே அதிக அளவில் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். நெருக்கடிக்கும் பின்னரும் அது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.கடந்த 2008 - 09ல் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இங்கு அனுப்பப்பட்ட தொகை, 46 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. (இந்திய நாணய மதிப்பில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) இது, அதற்கு முந்தைய ஆண்டில் அனுப்பப்பட்ட தொகையை விட, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம். அதனால், வெளிநாட்டு வாழ் மக்கள் தமது தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில் இந்தியர்கள் அனுப்புவது தான் உலகிலேயே அதிகமான தொகை.மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சிக்கல்களில் உழலும் போது, அங்கு வாழ்வதற்காகச் சென்ற இந்தியர்கள் பெரிய பிரச்னைகளின்றி தொடர்ந்து முன்னேறுவதற்கான காரணம் என்ன? நிதி நெருக்கடிக்குப் பின், கடந்த ஒரு வருட காலத்தில் முக்கியமான நாடுகள் பலவற்றில் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவும், பூஜ்யத்துக்கு கீழேயும் சென்று விட்டபோது, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு காலாண்டிலும் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமும் அதற்கு மேலும் இருக்கக் காரணம் என்ன?
இதற்கான விடை தற்கால பொருளாதாரக் கோட்பாடுகளில் இல்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறைகளில் தான் உள்ளது. நவீன பொருளாதார கோட்பாடுகள் கடந்த 250 வருட காலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவானவை. அவை அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.காலனி ஆதிக்க காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வந்த இயற்கையான வழிமுறைகளை ஐரோப்பியர்கள் அழித்தனர். பின்னர், அவர்களது முறைகளை காலனி நாட்டு மக்கள் மேல் திணித்து, அவையே உயர்ந்தது என்ற எண்ணத்தையும் பரப்பினர். ஐரோப்பிய முறைகளே எல்லாவிதத்திலும் மேலானவை என்றும், அவையே உலக முழுமைக்கும் சரியானதாக இருக்கும் என்றும் கருத்துக்களை உருவாக்கினர். உலகின் பெரும்பகுதி, அப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அது பெருமளவு சாத்தியமானது.பின்னர், ஐரோப்பிய பொருளாதாரம் சரிந்து அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதாரமாக உருவெடுத்த போது, அமெரிக்க கருத்துக்களே உயர்வானவை என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டது. அதனால், கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்க கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.ஆனால், சென்ற வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்த எண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்து விட்டது.
ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு ஆகியவையே கூட அமெரிக்க முறைகள், தங்களது நாடுகளுக்குப் பொருத்தமாக அமையாது எனச் சொல்கின்றன. அமெரிக்க கோட்பாடுகள், உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில வருடங்களாகவே பெருமளவு தோல்வியைத் தழுவி வருகின்றன.அதேசமயம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளும், வேகமான வளர்ச்சியும் உலகைத் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. இனி, உலகப் பொருளாதாரம் மீண்டெழுவதே கூட இவ்விரு நாடுகளின் தலைமையில் தான் நடக்கும் என, சர்வதேச நிபுணர்கள் கணித்து சொல்கின்றனர்.வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், கடந்த இரண்டாயிர வருட காலத்தில், உலகின் முதல் நிலை பொருளாதாரமாக இந்தியா விளங்கி வந்ததை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பின்னர், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களாலும், சுயநலக் கொள்கைகளாலுமே இந்தியாவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய அணுகுமுறைகள் நம்மிடம் பல நூற்றாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளது புலனாகிறது.சுதந்திரம் வாங்கும் போது, இந்தியா ஒரு ஏழை நாடாக, கல்வியறிவு குறைந்த, தொழில் வளமில்லாத நாடாகவே இருந்தது. அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை இல்லை. ஆனால், ஒரு 60 வருட காலத்தில் எத்தனையோ சிரமங்கள் மற்றும் பிரச்னைகளுக்கிடையிலும், உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாக உருவாகி உள்ளது.மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளைக் கூட எதிர்கொண்டு, முன்னேறும் அளவுக்கு வலுவான தன்மையை கொண்டுள்ளது. அதனால் பொருளாதாரம், வளர்ச்சி என்பது பற்றியெல்லாம் தங்களுக்குத் தான் முழுவதும் தெரியும் என்று இதுவரை மார்தட்டிக் கொண்டிருந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், இந்தியாவின் பொருளாதார நிலைமை நன்றாக உள்ளது என இப்போது சான்றிதழ்களை கொடுக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்?அது, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் பின்னிப் பிணைந்து அவர்களை வழி நடத்துகிறது. ஆம்... அது தான் இந்திய கலாசாரம். கடின உழைப்பு, எளிய வாழக்கை, அதிக சேமிப்பு, குடும்பமும், சமூகமும் சார்ந்த வாழ்வியல் முறைகள், பாசம், அர்ப்பணிப்பு, தொழில் முனையும் தன்மை இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.அன்னிய சக்திகள் நம்மை சிதைத்த போதும், அரசுகளும், கொள்கைகளும் மாறி மாறிப் போகும் போதும், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்து அதை வழிநடத்தி செல்வது நமது நாட்டின் அடிப்படையான கலாசாரமே.சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.

- ப.கனகசபாபதி -கட்டுரையாளர், மேலாண்மை பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

DINAMALAR 13.12.2009

வாசகர் கருத்து

இந்திய தேசத்தைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் கட்டுரையாசிரியர் புதிய கண்ணோட்டத்தையும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளார். இது போன்ற கட்டுரைகளை தினமலர் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
by V.S. Bharathanban,kovai,India 12/14/2009 6:42:46 PM IST

வணக்கம் மேலும் நன்றி ஐயா இந்த கருதுத்களுக்கு
by கணேஷ் ,maldives,Maldives 12/13/2009 3:18:34 PM IST

முற்றிலும் உண்மை. ஒன்று அதிகமான மனித ஆற்றல், இரண்டு கூட்டு குடும்பமுறை, மூன்று எதிலும் சிக்கனம் பார்த்து செயல்படும் குணம், நான்கு எல்லாவிதமான வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது, அரசு என்ற இயந்திரம் சரியானவர்களின் கையில் இருந்தால் உலகமே மூக்கில் கைவைத்து இந்தியாவை பார்த்து வியக்க வைக்கலாம். சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை அது நடக்காது. ஆதங்கத்துடன் அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
by G. அப்துல் ரஹ்மான் ,Alkhobar, Saudi Arabia ,Saudi Arabia 12/13/2009 12:01:08 PM IST

சேமிப்பு சார்ந்த இந்திய பொருளாதாரம்

பேரா. ப.கனகசபாபதி


தினமணி 14.10.2006


உலகின் முதல் நிலை பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக வங்கியின் கணக்குப்படி வாங்கும் திறனின் அடிப்படையில் 2005 ம் ஆண்டு இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருமானம் 3.7 டிரில்லியன் டாலர்களுக்கு ÷
மல் (ரூபாய் மதிப்பில் 1,74,20,200 கோடி) உள்ளது. 2007 ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெருளாதார நாடாக இந்தியா இருக்கும் என கணிக்கப்பட்டள்ளது. இந்தியவைச் சேர்ந்த பல கம்பனிகள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றில் பல வெளி நாடுகளுக்குச் சென்று, அங்கும் தொழில்களை பெருக்கி வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜீன் வரையிலான ஆறு மாதங்கள் மட்டும் இந்தியக் கம்பனிகள் 6 பில்லியன்
டாலர் (ரூபாய் 27,600 கோடி) முதலீடு செய்து எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியும் அல்லது தம்முடன் இணைத்தும் உள்ளன. உலகின் மிக வேகமாக வளரக்கூடிய 12 நாடுகளில் இருந்து உள்நாட்டில் செயல்படும் நூறு கம்பெனிகளை பாஸ்டன் ஆராய்ச்சி மையம் பட்டியலிட்டுள்ளது. அதில் இருபத்தியோரு கம்பெனிகள் இந்தியாவை சேர்ந்தவை.நமது நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் உள்ளன. இம் மையங்கள் ஒவ்வொன்றிலும் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்காண தொழில் நிறுவனங்கள் செயல் படுகின்றன.உதாரணமாக சூரத், ராஜ்கோட், லூதியான,திருப்பூர்,சிவகாசி ஆகியவற்றை சொல்லலாம் இவை ஒவ்வென்றும் பல இலட்சங்களில்
இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தியை ஈட்டுபவை. இம்மாதிரி தொழில் மையங்களில் பல உலக அளவில் முக்கிய துவம்பெற்று, சர்தேச வியாபாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் பெயர் பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? நமது மக்களின் அதிகமான சேமிப்பும் அதையொட்டிய மூலதனமும். சேமிப்பு என்பது நமது நாட்டில் அத்தியாவசியக் கடமையாக தொன்றுதொட்டே போதிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி குன்றி மக்களின் தனிநபர் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 1860 களில் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம் வெறும் முப்பது ரூபாயாக இருந்ததாக தாதபாய் நௌரோஜி கணக்கிட்டார். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டதால் நிறைய சேமிப்பு செய்ய வாய்ப்புகள் இல்லை. சுதந்திரம் பெற்றவுடனேயே மக்கள் தனக்குக்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் உழைக்கவும் அதன் மூலம் முடிந்தவரை சேமிக்கவும் தலைப்பட்டனர். 1951 மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 9 விழுக்காடு சேமிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலையில் இது மிகவும் அதிகமான சேமிப்பாகும். ஏனெனில் அந்தச் சமயத்தில் 45 விழுக்காடு மக்கள் வருமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். படிப்பறிவு பெற்றவர்கள் 18 விழுக்காடு மட்டுமே. சராசரி ஆயுள் 32 வருடம். அந்தச் சூழ்நிலையிலும் 9 விழுக்காடு சேமிப்பு. இன்றைக்கு வசதியான நாடுகளாகப் பேசப்படுகிற பல மேற்கத்திய நாடுகளில் இந்த அளவு சேமிப்பு இல்லை. இந்தச்சேமிப்பில் சராசரியாக நான்கில் மூன்று பங்குக்கு மேல் குடும்பங்களும் குடும்பம் சார்ந்த தொழில்களும் கொடுக்கின்றன. கம்பனி மற்றும் அரசுத் துறைகள் மீதியை சேமிக்கின்றன. அதிலும் அரசத் துறையின் பங்கு மிகக் குறைவு. இவ்வகை சேமிப்பு மூலம் பல்வேறு நிலைகளில் தொழில்களை ஏற்படுத்த மூலதனம் உருவாகிறது. அதனால் நிறைய அளவில் தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. மேலும் கம்பனி மற்றும் அரசுத் துறைகளும் வங்கிகள் மூலமாக இவ்வகை சேமிப்பகளைத் தங்கள் மூலதனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. சுதந்திரம் பெற்றது முதல் சேமிப்பும் மூலதனமும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் அரசு கணக்குப்படி அதிகாரப் பூர்வ சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.1 சதவீதம் ஆகும். இந்த அதிகாரப்பூர்வ சேமிப்பு முழுமையானதல்ல. ஏனெனில் நமது மக்கள் பல்வேறு வழிகளில் சேமிப்புகளில் ஈடுபடகின்றனர். உதாரணமாக உலகில் உற்பத்தியாகும் தங்கத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு நமது மக்களால் வருடாவருடம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த முதலீடு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சேமிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இது மட்டுமின்றி சிட்பண்டுகள் போன்ற முறைகள் மூலமும், உறவுகள் அடிப்படையிலும் சேமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடியுமானால், நமது சேமிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும். அமைப்பு சாரா துறையின் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் நாடு முழுவதும் உள்ளதாக மத்திய அரசின் 1998 பொருளாதாரக் கணக்கெடுப்பு கூறுகிறது. இவற்றில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றிலும் சொந்தப்பணத்தில் மூலதனம் போட்டு நடத்தப்படுபவை. 5 சதவீத அமைப்பகள் மட்டுமே அரசு மற்றும் நிதி நிறுவன உதவியைப் பெறுபவை. சிறு தொழில் துறையில் கீழ் 1 கோடியே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 96 சதவீதம் தனிநபர் அமைப்புகளாகவும், கிட்டத்தட்ட 2 சதவீதம் பங்குதாரர் அமைப்புகளாகவும் நடத்தப்படும் தொழில்கள். மொத்தத்தில் சுமார் 98 சதவீத எண்ணிக்கை நிறுவனங்கள் தனிநபர்களும் பங்குதாரர்களும், முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தப்படும் தொழில்கள் ஆகும். இந்த விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், இந்தியப் பொருளாதாரம் சொந்த சேமிப்பு மூலமே நடத்தப்படுகிறது என்பதாகும். சிறிய தொழில்கள் மிகப்பெரும்பாலும் சொந்த சேமிப்பிலேயே நடத்தப்படுகின்றன. அவைகளில் நிறைய தொழில்களுக்கு தாங்கள் விரும்பியபோதும் வங்கிகள் மூலம் போதிய நிதி கிடைக்க மிகுந்த சிரமங்கள் உள்ளன. பெரிய கம்பெனிகளை பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் எளிதாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியம். அதனால் தொழில் துறைக்கான கடன்களில் முக்கியப்பங்கு கம்பனிக்கே செல்கின்றன. ஆயினும் உலக நாடுகளில் தனியார் துறைக்கு கிடைக்கின்ற வங்கிக் கடன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் கிடைக்கும் கடன் விகிதம் குறைவாகும். இதன் முலமாக ஒட்டு மொத்தமாக நமது பொருளாதாரம் சுயசார்பு மிக்க பொருளாதரமாக விளங்குவது நமக்குப் புரியும். வெளிநாட்டு மூலதனம் கடந்த 1992 முதல் இந்தியாவுக்குள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வகை மூலதனம் குறித்த கட்டுப்பாடுகள் கடந்த வருடங்களில் பல நிலைகளில் தளர்த்தப்பட்டு, இன்று குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற துறைகளில் பெரிய கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை, இந்தியாவில் பொருளாதாரம் சொந்த நிதியையே ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இன்று உலகில் சேமிப்பு அதிகமாக இருப்பதே சீனா, இந்தியா உள்ளிட்ட முன்னேறும் நாடுகளிடமும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடமும்தான். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சேமிப்பு மிகக்குறைந்தும் இல்லாமலும் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் சேமிப்பு என்பது இல்லை. அவர்கள் எதிர்காலத்தில் வர உள்ள வருமானத்தை கூட கணக்குப்போட்டு, அதை வைத்து கடன் வாங்கி, இப்போதே செலவு செய்து விடுகின்றனர். அதனால் அவர்களின் மூலதனமும் குறைந்து வருகின்றது. இந்திய மக்கள் இயற்கையாகவே சேமிப்ப குணம் உள்ளவர்களாதலால், சேமிப்பை உக்குவிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை எல்லாத் துறைகளிலும் வரவேற்கவேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு மூலதனம் இங்கு வரும்போது பெரிய அளவில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.அந்தச் சலுகைகளை உள்நாட்டுத் தொழில் முனைவேருக்கு அளித்தால், நிறைய சமயங்களில் அவர்களே போதிய நிதியை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். உள்நாட்டு மூலதனத்தால் வரக்கூடிய லாபம், மேலும் மேலும் இங்கேயே பயன்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேலும் வலுவடையும். வெளிநாட்டு மூலதனத்தை வைத்து ஒரு நாடு சீராக வளர்ந்ததாக உலகில் எந்த உதாரணமும் இல்லை.

திவாலான நாட்டில் மனித வளம் அதிகமாம்

ஐநா சபையின் ஒரு தலைப்பட்சமான மனிதவள முன்னேற்ற அறிக்கை!


2009ம் ஆண்டுக்கான மனிதவள முன்னேற்ற அறிக்கையை ஐநா சபை அக்டோபர் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. 1990ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் மக்கள் இடம் பெயர்தல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், வாய்ப்புகள் மற்றும் கிராமங்கள் மையக்கருத்தாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது. 


ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது. முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.

அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன. மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட 182 நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

 இந்த ஆண்டு மனிதவள முன்னேற்றத்தில் உலகிலேயே அதிக வளம் பெற்ற நாடாக நார்வே இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளன. இந்தியா 134வது இடத்தில் உள்ளது. 2008ம் ஆண்டு அறிக்கைப்படி ஐஸ்லாந்து முதலிடத்திலும், நார்வே இரண்டாவது இடத்திலும் இருந்தன. மனிதவள அறிக்கைகள் பல்வேறு நாட்டு மக்களின் சராசரி ஆயுள், கல்வித்தகுதி மற்றும் சராசரி வருமானம் ஆகியவற்றை பட்டியலிடுவதால் நாடுகளின் நிலைமை பற்றிய சில முக்கிய விபரங்கள் நமக்கு தெரிகிறது என்பது உண்மை. ஆனால் மனிதவளம் என்பதே மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகளில் மட்டுமே அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவது ஒரு தலைப்பட்சமானதாகும். ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை தவிர மற்ற பகுதிகளில் மனிதவளம் குறைவாக இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது.மனிதவள குறியீட்டை கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும் காரணிகள் முழுமையானவை அல்ல. அவற்றை மட்டுமே வைத்து ஒரு நாட்டின் வளத்தை சரியாக கணக்கிட முடியாது.

 மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான குடும்பம், உறவுகள், வாழ்க்கை முறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையான சேமிப்பு, மூலதனம், தொழில் முனைதல் ஆகியவற்றிற்கும் குறியீட்டில் இடமில்லை. வாழ்வுக்கு ஆதாரமான சுற்றுச்சூழல், அமைதி ஆகியவை அறிக்கைகளில் கருதப்படுவதேயில்லை. எனவேதான் பல நிபுணர்களும், அறிஞர்களும் மனிதவள அறிக்கைகள் குறைபாடுகள் நிறைந்தவை என்றே கருதுகின்றனர்.மனிதவளத்துக்கு ஆதாரமே நிறைவான குடும்பங்கள்தான். பெற்றோர்கள், உறவுகள், சமூகம், அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை மனித வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களாக உள்ளன. குடும்ப அமைப்பு முறையால் சேமிப்பு, முதலீடு ஆகியவை பெருகி கல்வி மற்றும் தொழில்களில் மக்கள் முன்னேறுகின்றனர். அதனால் நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

 மனித வள அறிக்கைகளின் குறைபாடுகளைப் பற்றித் தெரிந்து இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்களில் வந்துள்ள நாடுகளின் மனிதவளம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான விவரங்களை மட்டும் பார்ப்போம். அந்த இரு நாடுகளின் குடும்ப அமைப்புகள் வெகுவாக சிதைந்துள்ளன. 2002ம் ஆண்டு கணக்குப்படி நார்வேயில் 40 சதவீத திருமணங்களும், ஆஸ்திரேலியாவில் 44 சதவீத திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன. உலக அளவில் இந்த விகிதாசாரங்கள் அதிகமானதாகும். அண்மைக்கால நிலவரப்படி நார்வேயில் பிறந்த குழந்தைகளில் 55 சதவீதத்துக்கு மேற்பட்டவை திருமணமாகாத உறவுகள் மூலம் பிறந்தவை ஆகும். 12 சதவீத குழந்தைகள் எவ்வித உறவுகளுமில்லாமல் தனியாக வாழ்ந்துவரும் பெண்களுக்கு பிறந்தவை. உறவுகள் அற்றுப்போய் மனிதர்கள் இருப்பதால் அந்நாட்டில் 17 சதவீத மக்கள் தனிநபர் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் அங்கு பிறக்கும் குழந்தைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் திருமணமாகாத பெண்களுக்கு பிறந்தவை. 15 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வாழும் குடும்பங்களில் 22 சதவீதம் ஓரே ஒரு பெற்றோறை கொண்டவை. அதில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தனியாக தாயை மட்டுமே கொண்டவை. குழந்தை மற்றும் தகப்பனை மட்டுமே கொண்ட குடும்பங்களும் அங்கு கணிசமாக உள்ளன.

 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில் தனி ஒருவரை மட்டுமே பெற்றோராக கொண்ட குடும்பங்கள் 53 சதவீதம் அதிகரித்துள்ளன. அத்தகு குடும்பங்களின் வளர்ச்சி தாய், தந்தை என இருவரையும் கொண்ட குடும்பங்களைவிட 14 மடங்கு அதிகமாக உள்ளது. அங்கெல்லாம் குடும்பங்கள் சிதைவதால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க உறவுகள் இல்லை. எனவே அந்தப் பொறுப்பினை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது அரசுகள் பெரும் தொகைகளைசெலவு செய்கின்றன. நார்வேயில் அந்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 16 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 8.3 சதவீதமும் அவ்வாறு செலவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அங்கு சேமிப்பு என்பதே ஏறத்தாழ இல்லை. நார்வேயில் 2007ம் ஆண்டில் சேமிப்பு சுத்தமாக இல்லை. மாறாக வருமானத்தை விடவும் அதிகமாக ஒரு சதவீதத்துக்கும் மேல் அந்நாட்டு மக்கள் செலவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ந்து சேமிப்பு என்பதே இல்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகள்தான் மனிதவள அறிக்கையில் முதல் இரண்டு இடத்தையும் பெற்றுள்ளன. அதற்குக்காரணம் மனிதவளம் குறித்த மேற்கத்திய நாடுகளின் குறுகிய கண்ணோட்டமேயாகும்.

 அவர்களது அளவு கோல்களை மட்டுமே வைத்து வெவ்வேறு விதமான பின்னணிகளை கொண்ட உலக நாடுகள் அனைத்தையும் பட்டியலிடுவதுதான் மனிதவள அறிக்கைகள். அதில் கலாச்சாரம் மிகுந்த உறவுகளை அடிப்படையாக கொண்ட இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த தாய் தந்தையரின் தியாகம், அவர்களது எளிய வாழ்க்கை முறை, அதிக சேமிப்பு, தொழில் முனையும் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள எவ்விதமான காரணிகளும் இல்லை. மேலும் அந்த அறிக்கைகள் உலக நாடுகளின் மக்கள் தொகை மற்றும் வரலாற்று பின்னணி என எதையும் எடுத்துக்கொள்ளமல் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் மிகச்சிறிய நாடுகளும் ஒரே நிலையில் வைக்கப்படுகின்றன. நார்வேயின் மக்கள் தொகையே 48 லட்சத்துக்கு சற்று அதிகம். அதாவது சென்னையின் மக்கள் தொகையை விட குறைவு. ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை தமிழக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்குதான். மூன்றாவது இடத்திலுள்ள ஐஸ்லாந்தின் மக்கள் தொகை வெறும் 3 லட்சத்து சொச்சம். எனவே அந்த நாடுகளின் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஐஸ்லாந்து நாடே திவாலாகிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் தொலைக்காட்சிகளில் அறிவித்தார். ஆக இந்த அறிக்கைகளின்படி திவாலான நாட்டின் மனிதவளம் உலகின் முன்னணியில் இருந்து வருகிறது.

அறிக்கை தயாரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பல நாடுகளின் பெயர்கள் அதிகம் படித்தவர்களுக்கு தெரியாத அளவு சிறியவை. அன்போர்ரா, லைச்டென்ஸ்டீன் என்பனவெல்லாம் நாடுகள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டு அதிவேகமாக வளர்ந்துவரும் நாடு சீனா மனிதவள அறிக்கையில் 92வது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நாடு செயிண்ட் வின்சென்ட் அன் தி கிரெனடீஸ் என்பது. அது எங்குள்ளது. நீண்ட வரலாறு கொண்ட சீனாவையும், அடையாளம் தெரியாத நாட்டையும் எப்படி ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியும்.இந்தியா உலகின் முதன்மை பொருளாதாரமாக பல நுõற்றாண்டுகள் சிறப்பாக விளங்கி வந்தது. தொன்மையான கலாச்சாரத்தை கொண்டது. ஐரோப்பியர்களால் பலவழிகளிலும் சிதைக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளில் முன்னேறி உலகில் இரண்டாவது வேகமாக வளரும் நாடாக உருவெடுத்து வருகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியா நாடு அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கையை அழித்து, அவர்களது வாழ்க்கை முறைகளை சிதைத்து அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்.

 ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களின் முந்தைய காலனிகளும், அவற்றை சுரண்டிக் கொழுத்த ஐரோப்பிய நாடுகளும் இணையாகுமா.எனவே மனிதவளக் குறியீடுகள் அந்த அறிக்கையே குறிப்பிடுகின்ற மாதிரி மனிதவள முன்னேற்றத்தை கணக்கிடும் முழுமையான அளவுகோல்கள் அல்ல. அது மேற்கத்தியவர்களின் நோக்கில் சில காரணிகளை மட்டும் வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆகவே அதைவைத்து நாடுகளின் ஒட்டுமொத்த மனிதவளத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நம் நாட்டு மனிதவளம் குறித்து கருத்துக்களை தெரிவிப்பதும், விமர்சிப்பதும் தேவையில்லாதது.

தினமலர் - பேட்டி , அக்டோபர் 19, 2009

இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்இந்திய வரலாற்றுக்கு புத்துயிர் தந்தவர்


1931ம் வருடம் அக்டோபர் மாதம் லண்டன் நகரம். மகாத்மா காந்தி பேசுகிறார்: "நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இந்தியாவின் பழைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல் இருந்தது. அந்த மரம் இப்போது அழிந்து விட்டது.' ஆங்கிலேயர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி. கல்வி அறிவை உலகுக்கு கொடுத்ததாக பறைச்சாற்றிக் கொண்டிருந்த அவர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. அவர்கள் சவால் விட்டனர். "உங்கள் பேச்சு உண்மையென நிரூபியுங்கள். அல்லது மன்னிப்பு கேளுங்கள்.' காந்திஜி தன்னால் இதை நிரூபிக்க முடியுமென சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுதந்திர இயக்கப்பணிகள் மற்றும் வேலைப்பளு காரணமாக அவரால் அதற்காக நேரம் கொடுக்க இயலவில்லை. எனவே அந்தப்பணி முடியாமலேயே காந்திஜி அமரரானார்.
அதற்கு பின் ஒரு இருபது ஆண்டுகளுக்கு அப்புறம் காந்திஜியின் ஆயுளில் நிறைவேறாத அந்தப்பணியை நிறைவு செய்யப்புறப்படுகிறார் அவரது சீடர். அந்த சீடரின் பெயர் தரம்பால். 1922 ம் வருடம் பிறந்த இவர் முதன்முதலாக தனது எட்டுவயதில் காந்திஜியை லாகூரில் பார்க்கிறார். கல்லூரிக் காலங்களிலேயே காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு தேசப்பணிக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கத் துவங்குகிறார். அதன்பின் கிராம முன்னேற்றம் மற்றும் ஆய்வுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். தரம்பாலின் ஆய்வுகள் காந்திஜியின் கல்வி குறித்த கருத்துக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்தது மட்டுமன்றி இந்திய தேசத்தின் பொருளாதார மற்றும் சமுதாய ஆதாரங்களை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் அமைந்தன. இவை மூலம் ஆங்கிலேயேர் இங்கு வருவதற்கு முன்னரே கல்வி, விவசாயம், தொழில், அறிவியல் எனப்பல துறைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது தெரிய வருகின்றது.
1960 களில் தொடங்கி தமது ஆய்வுகளை மேற்கொண்ட தரம்பால், புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் ஆவணங்கள் மூலமே சேகரிக்கின்றார். அதற்காகப் பல ஆண்டுகள் லண்டன் மியூசியம் உள்ளிட்ட இடங்களில் செலவு செய்கின்றார். அதிக வருமானம் ஏதும் இல்லாமல் பிரதி எடுப்பதற்கே கஷ்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆவணங்களைப் பார்த்து கையாலேயே எழுதுகின்றார். அதன் மூலம் இந்திய தேசம் சம்மந்தமான பல விசயங்களை தொகுக்கின்றார். பின்னர் இவற்றை பல்வேறு புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிடுகின்றார். சொற்பொழிவுகள் ஆற்றுகின்றார். இவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்திய நாட்டின் பாரம்பரியங்களையும், பழைய அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. இதன் மூலம் வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும், பொருளாதார மற்றும் அறிவியல் கண்டறிய தவறிய பல அடிப்படை உண்மைகள் நமக்கு தெரிய வருகின்றன.
அவரது ஆய்வுகள் குறித்துக் குறிப்பிடும் போது முதலில் கல்வி குறித்த அவரது பணியினை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆங்கிலேயேர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியாவில் எடுத்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்தவை. பம்பாய் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சிகளில் 1820 களிலும், வங்காள பிரசிடென்சியில் 1830 களிலும் இந்த கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடமும், வங்காளத்தில் மாவட்டத்திற்கு பத்து என்ற கணக்கில் பிரசிடென்சி முழுவதும் 1800 உயர் கல்வி நிலையங்களும் இருந்திருக்க வேண்டுமென ஆடம்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தரம்பால் எடுத்துரைக்கின்றார்.
பம்பாய் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடமும், பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும் இருந்ததாக மூத்த ஆங்கிலேயே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளி இருந்ததாக தாமஸ் மன்ரோ குறிப்பிட்டுள்ளார்.1850 வாக்கில் பஞ்சாபிலும் இதே சூழ்நிலை நிலவியுள்ளது.
இந்த பள்ளிகள் அனைத்தும் கிராம மக்களின் நிதி உதவிகளாலேயே நடத்தப்படுவதாக மேற்கூறிய அறிக்கைகள் கூறியுள்ளன. மேலும் சென்னை பிரசிடென்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து தரம்பால் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜமுந்திரி மாவட்டத்தில் 173, தஞ்சை பகுதியில் 109 என உயர்கல்வி நிறுவனங்கள் பல பகுதிகளிலும் செயல்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். இந்தக் கல்வி நிறுவனங்கள் எந்தவித ஜாதி மத வேறுபாடுமின்றி செயல்பட்டு வந்ததாகவும் அவர் புள்ளி விபரங்களுடன் குறிப்பிடுகிறார். அதேசமயத்தில் இங்கிலாந்து நாட்டில் பள்ளிக் கல்விமுறை பரவலாக மக்களுக்குக் கிடைக்காமல் இருந்ததாகவும், இந்திய முறையை வைத்தே அவர்களின் பள்ளிக் கல்வி முறை பின்னர் அமைக்கப்பட்டதாகவும் தரம்பால் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாடு கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்ததாகச் சொல்லுகின்றார். கல்வி குறித்த தமது புத்தகத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு காந்திஜி லண்டனில் உபயோகப்படுத்திய வார்த்தைகளை வைத்தே அமைந்தது. "அழகிய மரம்; பதினெட்டாம் நூறறாண்டின் இந்திய கல்வி'.
கல்வி மட்டுமன்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய அரசியலும் பஞ்சாயத்து ராஜ்ஜியமும், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து அவர் புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பாரம்பரிய முறைகள் பற்றி ஆங்கிலேயர் இங்கு கண்டு எழுதிய விசயங்களையும் தரம்பால் தொகுத்துத் தந்துள்ளார். மேலும் இரும்பு தயாரிக்கும் முறைகள் பரவலாக இருந்ததையும், ஐரோப்பியயர்களுக்கு தெரியாத மருத்துவ முறைகள் இங்கு சாதாரணமாக மக்களிடையே பிரபலமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை பிரசிடென்சி பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் பெரும்பாலான வருடங்களில் நிலவரியானது விவசாய விளைச்சலை விட அதிகமாக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1800 முதல் 1850 வரையான ஐம்பது வருடங்களில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்வதையே விட்டுவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1820 களுக்குப் பின்னர் விவசாயமும், கிராமப் பொருளாதாரமும், உற்பத்தித்துறையும் ஆங்கிலேயேர்களின் வரிச்சுமைகளாலும், தவறான கொள்கைகளாலும் சிதைக்கப்பட்டதாக தரம்பால் எடுத்தச் சொல்லியுள்ளார்.
இந்திய நாட்டின் கொள்கைள் மற்றும் திட்டங்கள் நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் ஒட்டியே அமைய வேண்டும் எனவும், மேற்கத்திய நாடுகளின் முறைகளை அப்படியே பின்பற்றுவது தவறு எனவும் தரம்பால் அறிவுறுத்துகின்றார். மாணவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதன் மூலம், ஆர்வத்தையும், நேரடி தொடர்பையும் உண்டாக்கி, அதன்மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனச் சொல்கின்றார்.
இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் பல உண்மைகளை வெளிகொணர்ந்து இந்தியாவுக்கு எனத் தனியான சிந்தனை முறை உண்டு என உணர்த்திய தரம்பால் சென்ற அக்டோபர் மாதம் வார்தா ஆசிரமத்தில் காலமானார்.
அன்னாரது முயற்சி நமது தேச வரலாற்றுக்கு ஒரு புத்துயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. நூறு கோடி மக்களுக்குப் பெருமை அளிக்கும் பல விசயங்களை தரம்பால் வெளிக்கொணர்ந்து உள்ளார். பள்ளி, கல்லூரிகளில் அவரது ஆய்வுகள் புத்தகங்களாக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். இந்திய நாடு, தனது வேர்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

தினமணி 2.12.2006வெற்றிக்கதைகள் தொடர் - வாசகர் கடிதம்

வெற்றிக்கதைகள் தொடர் தினமலர் நாளிதழில் 26 வாரங்கள் வெளிவந்தது. இதற்கு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. வாசகர்களிடமிருந்து தொடரைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்தன. அவற்றில் சில....
இரா.ஆறுமுகம் அருள்குமரன்,
நாகை மாவட்ட செயலாளர் ஐஎன்ஆர்எல்எப்,
மயிலாடுதுறை.
நாள்:5.4.2009
இருட்டு அறைவீட்டு சுவர்களில் மாட்டப்பட்ட ரசம் போன கண்ணாடிகளில் முகம்பார்த்து தலைவாரி பழக்கப்பட்ட நமக்கு, கம்ப்யூட்டர் டிஜிட்டல் கலர் புகைப்படமாக நம் முகத்தை நமக்கே காட்டும் முயற்சியில் பேராசிரியர் கனகசபாபதி ஈடுபட்டு வருகிறார்.நம் முகத்தை பார்க்க நமக்கே பொறாமை வந்துவிடுகிறது. பேராசிரியர் அவர்களின் நூல்கள் கிடைப்பதும், அதைப்படிக்க நேரம் கிடைப்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் மூன்றரை ரூபாயில் தினமலர் வாரந்தோறும் வெளியிடுகிறது. இதற்கு நன்றிகள்.
படிப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாக உள்ளது
"புளியம்பட்டி இல்லையில்லை பொள்ளாச்சி போய் திரும்பவும் புளியம்பட்டி' என்ற சூர்யவம்ச சினிமா வசனம் போன்ற ஊதாரித்தனமான அமெரிக்க நிர்வாக முறையை இங்கேயும் சிலர் அறிமுகம் செய்யவும், கடைப்பிடிக்கவும் தொடங்கும் காலக்கட்டத்தில் இக்கட்டுரை மிக அவசியமானது.பாரசீகர்கள் முதல் பிரிட்டீஷ் வரை வரிசை வரிசையாக வந்தவர்களிடம் எல்லாவற்றையும் பறிகொடுத்து சொந்த வீட்டிலேயே அகதியானோம். அடிமையானோம் என்பதை தெளிவாக பேராசிரியர் பட்டியலிட்டுள்ளார்.
கட்ச் காம்பே வளைகுடா பகுதியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சோழமண்டல கடற்கரையிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் வணிகம் செய்த வணிக குழுக்கள் நசுக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டன. மிச்சம் மீதி இருந்ததை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு வர சென்ற தலைமுறைகள் இருந்தது மிக அதிகம்.மூன்றாம் தலைமுறைக்கும் தனத்தையும், தர்மத்தையும் சேர்த்து வைக்கும் நிதித்துறை மேலாண்மையை பேராசிரியர் அவர்கள் விளக்குவதைப் பார்க்கும் போது நம் மீதே நமக்கு பொறாமையை அதிகமாக்கின்றது.
தங்கள் உண்மையுள்ள,
.அருள்குமரன்.

உலகுக்கே வழிகாட்டும் இந்தியா


நம் நாட்டில் உள்ள தொழில் மையங்களின் வெற்றிக்கதைகளை பார்த்தோம். இந்த மையங்களின் வெற்றிக்கு தனி மனிதர்கள், அவர்களின் குடும்பம், அவர்கள் சார்ந்த சமுதாயம் போன்றவையே காரணமாக இருந்துள்ளதையும் பல ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இந்த தொழில் மையங்களின் வளர்ச்சி, பொருளாதார வீழ்ச்சியில் உலகத்தின் முன்னணி நாடுகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா ஸ்திரமான வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் நம் நாட்டில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் உயர்ந்த காலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறை தான். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்தது. எந்தவொரு செயல்பாட்டையும் தனித்துப்பார்க்க இயலாது. ஒவ்வொன்றுக்கான தாக்கம் இன்னொன்றிலிருந்து வந்திருக்கும். அதனால் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுமே ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.குடும்பம், சமூகம், சுற்றுப்புறம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒட்டியே மனிதனின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைகள் அமைகின்றன. மற்ற அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மனித வாழ்க்கையும் சரியாக அமையும். அதனால் தான் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள பிற உயிர்கள், செடி கொடிகள், இயற்கை என்று எல்லாமே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை அமையப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நமது பண்டைய பொருளாதார முறைகள் அமைக்கப்பெற்றன.சோம்பலின்றி மனிதன் தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். பொருள் உற்பத்தியும் செழிப்பும் அதிக அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நம் நாட்டில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அது நமது ஜீன்களில் இரண்டற கலந்து விட்டதால் மற்ற நாடுகளைக் காட்டிலும் தனி மனித தொழில் முனையும் தன்மை நம்மிடம் அதிகம் உள்ளது. இது தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணம்.இதைத்தவிர நாம் செய்யும் தொழில் நியாயமான முறையில் செய்யப்படவேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தவறான முறையில் பணம் சம்பாதிக்க முனையக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைப் பின்பற்றிய காரணத்தால் தான் சூரத் முதல் திருச்செங்கோடு வரை நம் நாட்டு தொழில் முனைவோர் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் தொழில் தர்மத்தை கைவிட்டு பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு செயல்படும் போது அந்த தொழிலே அழிந்து போயிருப்பதையும் நாம் பார்க்க முடியும். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போல கிளம்பி மேலை நாட்டு சிந்தனையோடு செயல்பட்ட நிதிநிறுவனங்களின் உதாரணங்களை கூறலாம்.நம் நாட்டில் குடும்பங்களும், சமூகங்களும் தொழிலில் ஈடுபட்ட போது அரசுகள் தேவையான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. அதே சமயம் தவறுகளை தண்டிப்பதற்கான கடுமையான வழிமுறைகளையும் அரசுகள் வைத்திருந்தன. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைக்குத் தொழில்களும், வியாபாரமும் எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்காமல் செயல்படும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்ட போது தொழில்கள் வெற்றி பெற்றன. சில பிரிவினருக்கு மட்டும் நன்மை பயப்பதாகவும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் தொழில்கள் அமையவில்லை.இந்திய நாட்டின் வரலாற்றில் தனது வளர்ச்சிக்காக எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தி வைத்திருந்ததையோ, சுரண்டியதையோ காணமுடியாது. சொந்த திறமைகளைகளால், வளங்களால் ஏற்படுத்திய அதிக உற்பத்தியை வைத்தே பொருளாதார வல்லரசாக விளங்கவந்தது. தற்போதும் வளர்ந்து வருகிறது. சமூகத்தில் சீரழிவுகள் வரும், அதனால் சமூகங்கள் அழியும். ஆனால் இந்தியா பல நூற்றாண்டுகளாக செழிப்பான நாடாகவே விளங்கி வந்துள்ளது. அதற்கு காரணம் மக்களின் கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறைதான். ஒரு பக்கம் செல்வம் இருந்த போதும், மறுபக்கம் கட்டுப்பாடும், ஒழுக்கமும், சிக்கனமும் வலியுறுத்தப்பட்டன. மிதமிஞ்சிய வாழ்க்கை முறை சமூகத்தால் வெறுக்கப்பட்டது. அதனால் தான் உலகிலேயே நீடித்த தன்மையுடன் இன்றளவும் வாழ்ந்து வரும் தன்மையை இந்தியா பெற்றுள்ளது. ஆனால் மேற்கத்திய பொருளாதார முறைகள் அப்படியல்ல. கடந்த 500 ஆண்டுகளில் நில உடமை முறை, வணிகத்துவ முறை, முதலாளித்துவ முறை, கம்யூனிச முறை, சந்தைப் பொருளதார முறை எனப் பலவித முறைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை எவற்றிலுமே பெரும்பான்மையான மக்கள் அமைதியுடனும், வளமாகவும் வாழக்கூடிய தன்மைகள் இல்லை. எனவே அவை ஒவ்வொன்றாகத் தோற்றுப்போய்க் கொண்டே வந்துள்ளன.ஒரு காலத்தில் சூரியனே மறையாத நாடுகளை வைத்திருந்த நாடு இங்கிலாந்து. ஆனால் இன்று பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. கடந்த நூற்றாண்டின் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்த நாடு அமெரிக்கா. அதனால் உலக முழுமைக்கும் தமது கொள்கைகளை சரியென்று சில மாதங்களுக்கு முன்பு வரை மார்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று மீளமுடியாத பிரச்னைகளில் மாட்டிக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியிலுள்ள நாடுகளை தமது காலனிகளாக்கிக் கொள்ளையடித்து வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சிரமங்களில் மூழ்கியுள்ளன.அவர்களின் பொருளாதார முறைகள் அஸ்திவாரமற்றவை. ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைமுறையை உயர்த்தும் நோக்கம் அவற்றில் இல்லை. பிற உயிர்களை தமது போல் நேசிக்கும் பண்பு இல்லை. இயற்கையை தாயாக பாவிக்கும் தன்மை இல்லை. அதனால் தம்முடைய நுகர்வுக்கு எதையும் செய்யத்துணிகின்ற பக்குவற்ற தன்மை உள்ளது.நான் வேறு, குடும்பம் வேறு, சமூகம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தன்மையினால் பொருளாதாரம் சார்ந்த அனைத்து சிந்தனைகளும் அவர்களது தனிமனித நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பகட்டு, ஆடம்பர வாழ்க்கை நோக்கில் அமைந்துள்ள பொருளாதார முறை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. குடும்பம், சமூகம், கலாச்சாரம் ஆகியவற்றிற்கும் பொருளாதாரத்திற்கும் சம்மந்தமில்லை என்று அவர்கள் நம்பினர். தங்களின் ஆதிக்கக் கொள்கைகளால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரங்களை வளப்படுத்த முடியும் என்று எண்ணி வந்தனர். அதனால் தொடர்ந்து தோல்விகளையும் சரிவுகளையும் சந்தித்து வருகின்றனர்.மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவு சமூகங்களிலும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது தனிமனித சிந்தனை, குடும்ப மற்றும் சமூக உறவுகளை பெருமளவு அழித்துவிட்டது. அதனால் பொருளாதாரமும் சீரழிந்து கடும் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சாரங்கள், அதையொட்டிய சமூக அமைப்புகள், வாழ்வியல் நோக்குகள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பொருளாதாரங்களின் போக்கில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. மேற்கத்திய நாடுகள் தற்போது இந்த நோக்கில் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. நமது நாட்டை சரியாக புரிந்திருந்த சில மேற்கத்திய சிந்தனையாளர்கள், உலகுக்கே இந்திய நாடு தான் வழிகாட்ட முடியும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். அண்மைக் காலங்களில் இந்த கருத்து வலுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சமூகவியல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மேலாண்மைத்துறை நிபுணர்கள் பலரும் நமது நாட்டை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். இந்திய வழிமுறைகள் குறித்து பல வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பகவத்கீதையும், கர்மவினை குறித்த பாடங்களும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.எனவே உலகின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் நம்மை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நம் எண்ணங்களை ஆக்கிரமித்துள்ள மேற்கத்திய சிந்தனைகளை வைத்து நமது வழிமுறைகளையும் கோட்பாடுகளையும் எடைபோடக்கூடாது. நமக்கே உரித்தான வாழ்க்கை முறை, சிந்தனைகள் ஆகியவற்றை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசவேண்டும். மேற்கத்திய பொருளாதார சிந்தனைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக சிக்கல்களை தந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்ற போதும் அதனால் முழுமையடைவில்லை. விவசாயம் பெரிய சிரமங்களில் சிக்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன.அதற்கெல்லாம் தீர்வு, மகாத்மா காந்தியடிகள் கூறியது போல நமது நாட்டிலிருந்தே பாடம் கற்று நமக்குத் தேவையான திட்டங்களை நாமே தீட்டிக் கொள்ளும் பக்குவம் தான்.உயர்தரமான நமது கலாச்சாரம் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளமாக அன்று முதல் இன்று வரை விளங்கி வருகிறது. அது தான் நமக்கு மிகப்பெரிய பலம். அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் நமது நாடு பொருளாதார சக்தியாக வளர அதுவே அடிப்படைக் காரணம். நமது பொருளாதாரம் வெற்றிப்பாதையில் தொடர்ந்து நடைபோட நமது கலாச்சாரம், பண்பாடு, தொழில்முனையும் தன்மை, சுயசார்பு தன்மை ஆகியவற்றை காப்பாற்றப்பட வேண்டும். இது நம் நாட்டின் கடமை மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இரண்டு நாடுகளும் உலகின் முக்கிய பொருளாதார சக்திகள். இரண்டு நாடுகளிலுமே தொழில் வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் உள்ளவை. அதன்மூலம் மக்களின் கைகளில் பணமும் இருந்தது. அமெரிக்கா வங்கிகளில் போடப்பட்டிருந்த பணத்திற்கான வட்டியை குறைத்த போது மக்கள் பணத்தை எடுத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்தனர். அதையே ஜப்பான் வங்கிகள் செய்த போது ஜப்பானியர்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவில்லை. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் தற்போது வங்களில் பணம் இல்லை. ஆனால் ஜப்பானிய வங்கிகளில் உலகிலேயே அதிகமான டெபாசிட்டுகள் உள்ளன. ஒரே மாதிரியான கொள்கைகளுடைய இரு நாடுகளில் இருவிதமான அணுகுமுறைகள். இதற்கு காரணம் கலாச்சாரம். ஜப்பானில் குடும்ப கலாச்சாரம் உள்ளது. அமெரிக்காவில் தனி நபர் கலாச்சாரம் உள்ளது. எனவே ஜப்பான் தப்பித்துக் கொண்டது. அமெரிக்கா சிக்கிக் கொண்டது.

SELF- FINANCING NATURE OF INDIAN ECONOMY AND BUSINESS


Abstract


India is the third largest and the second fastest growing economy in the world. During the past few decades, Indian businesses have been establishing their presence in different parts of the globe. In just sixty years of Independence, the country has emerged as an important economic and business power. In this connection, this paper attempts to find out as to how the Indian economy and businesses are financing their activities. For this purpose, the saving and investment practices in the economy and the major sectors of business are analysed. First- hand details collected through field studies at selected industrial and business centres are used along with the macro- data to study the nature of financing at various levels. The results indicate that the growth of the economy and development of businesses have been driven by the domestic finance, funded mainly by own and local sources with support from the institutions.
INTRODUCTION
Indian economy has been growing since Independence. For about three decades from the beginning of the 1950s, the rate of growth was 3.5 per cent. It started moving at a faster speed thereafter. The growth rate for the next quarter century averaged around 6 per cent per annum. The recent years show an impressive performance with the growth rates touching 9.4 percent in 2005-06, 9.6 percent in 2006-07 and 9 percent in 2007-08.

Maddison (1998) notes that the rate of growth of GDP (annual average compound growth rate) of India at 4.02 percent during 1952-78 was higher than the growth rate of the US at 3.46 percent. He also points out that during 1978-95, the annual average compound growth rate of India was much better than that of the Europe and the U.S.A. India’s growth rate during that period was also better than the world average, though China grew at a higher rate.

The industrial and business sectors started growing fast after Independence, displacing the expatriates who were in a commanding position earlier. The ‘license-permit raj’ created difficulties for the growth of domestic industry and business during the initial decades. But in spite of the difficulties, the growth continued and new groups of people started entering into businesses. Tripathi and Jumani (2007) capture the situation during those times: “ ……., the Indian business class registered substantial expansion after Independence. Not only did the number of persons opting for business as a profession increasingly go up, the new entrants into the profession came from a more varied background than was the case at the time of Independence.”

In the recent decades, Indian businesses are gaining world wide recognition. Many companies are emerging as world-class performers. Out of the 100 local companies identified by the Boston Consulting Group as the new global challengers from 12 rapidly developing economies, there were 21 Indian companies. (BCG Report, 2006) An increasing number of our companies have been going out during the recent years in different directions to establish, expand and diversify their businesses. India’s direct investment abroad had crossed $ 11 billions during 2006-07 (RBI, 2007). Many of the industrial and business clusters of India, run by the family based non-corporate sector, have emerged crucial to the global businesses.

While it is true that the growth story is yet to touch all the sections of the society, there is no doubt that on the whole, the Indian economy and businesses have been growing in spite of many difficulties and problems. What could be the reasons for such a good performance of the Indian economy and business in about sixty years? There are different factors that influenced this kind of performance. Among them, the one fundamental factor is the high savings base of the Indian society and the self financing nature of the Indian economy and businesses.

HIGH LEVELS OF SAVINGS IN THE ECONOMY

Savings and investments are the two crucial factors for the development of economy and businesses. Countries that generate more savings have advantages as they have the necessary funds for investments themselves. Even in 1950-51, the Gross Domestic Saving was 8.6 per cent of GDP. Of this, the household sector contributed 66 per cent, while the balance came from the corporate and the government sectors. Here we have to remember that in 1951, 45 per cent of the population was living in poverty, the literacy level was just 17 per cent and the life expectancy a little more than 32 years (Mohan, 2002). So even under difficult living conditions, Indians were saving a high percentage of out of their limited earnings. It only shows the natural tendency of Indians to save even in times of difficulties.

At the time of independence, agriculture was the main occupation in India. In 1951-1952, the institutional source of finance to agriculture was just 7.3 per cent, while the non-institutional credit was 92.7 per cent (Uma Kapila, 2003). It means a large majority of the people who were engaged in agriculture in those years were mobilising most of the funds required for agriculture out of their own efforts from different informal sources. The rate of saving has started increasing since the 1950s, and the official saving rate for the financial year 2006-2007 was 34.8 percent of GDP. The saving of the different sectors of the economy, namely the household, private corporate and government sectors, for the different decades beginning from the 1950s are given in Table 1 below.

“Table 1 about here”
We could see from Table 1 that the savings rate of the economy has doubled from the 1950s to the 1980s, from about 9 per cent to more than 18 per cent, to ultimately touch 34.8 per cent in 2006-2007. The contribution of household sector has always been high and in 2000-01 it contributed as much as 91 percent to the total savings of India. In this connection it is to be remembered that different types of family owned non-corporate enterprises involved in various economic activities are also included in the household sector.
The above saving rates of the households are without considering investments in gold and other indigenous avenues. Indians are the largest consumers of gold and buy one fifth to about one fourth of the global gold output annually. Vaidyanathan (2004) notes: “If we include gold alone in the savings, then the savings rate would be higher by another two percentage points.” There are many other indigenous methods of savings such as chit funds which are not taken into account for calculating the official saving rates. Hence in reality the total savings would be more than the official rates.
SAVINGS IN DIFFERENT SECTORS

Non- corporate sector

The non corporate sector plays the crucial and dominant role in the Indian economic and business systems. The share of this sector to the Indian economy is much higher than the combined share of the other two sectors, namely the corporate sector and the government sector. The share of the non-corporate segment in Net Domestic Product by economic activity was around 57 per cent during 2002-03 (CSO, Govt. of India, 2005). Its share is higher in critical areas such as trade, hotels and restaurants, construction and transport. The reach of the banking and financial institutions in the non-corporate segments is less. Most of their activities are funded through savings and funds mobilised from their own and local sources. It could be seen that wherever people find opportunities, they mobilise resources locally along with their savings and try to engage in some productive activity or other. As a result there are lots of economic activities in the form of unorganised enterprises and small and medium scale units.

Unorganised enterprises

The Economic Census 1998 had noted that there were 30.35 million enterprises in the unorganised sector. Of them, 24.39 million enterprises (80.4 per cent) were found to be self-financing. It clearly shows that a very high percentage of the promoters self -finance their ventures to engage in different types of entrepreneurial activities. Only less than five percent of the units were supported by the institutions and government schemes. Chadha (2003) notes that the Village and Small Industry sector is estimated to contribute about 50 percent of the value added in the manufacturing sector. Rural industries, covered officially under the Village and Small Industry sector, play an important role in providing employment and generating output. It was shown that own savings play the vital role in rural industries even for adopting technological improvements. Own savings contribute 87.25 per cent of finance for new designs, 78.57 per cent for new products, 69.23 per cent for new raw material and 51.56 per cent for improved machinery.

Small Scale Industries

Small-Scale Industries (SSIs) play a significant role in the Indian economy. The Third Census of the Small Scale Industries (Government of India, 2004) noted that there were more than 10.52 million units in the SSI sector. Of them, there were 50,606 exporting units. About 44 percent of the total units were in the services sector, 40 percent in manufacturing and allied activities, and the remaining 16 percent engaged in repairing and maintenance activities. About 95.8 per cent of the units in the SSI sector were found to be functioning as proprietary enterprises, while 1.9 per cent of them belonged to the partnership form. Most of these units generate funds on their own efforts through own and local sources without depending much on the financial and banking institutions. Out of the total enterprises in this sector, only 4.55 percent of them were having outstanding loans with institutional sources.

Clusters

The Third Census of the Small Scale Industries had estimated that there were 2042 clusters, with a predominant share of small and medium businesses/industries. These clusters cover 521 different products and have a share of 32.68 per cent and 37.85 per cent in the total estimated number of registered and unregistered units respectively. India is known throughout the world for its quality products and services offered by different clusters such as Surat, Tirupur, Rajkot and Ludhiana. The businessmen from many of these clusters compete with companies from different countries and multi-national enterprises and emerge successfully, establishing the name of the country in the international markets. Many foreign companies, including the multi-national firms, openly acknowledge the higher quality of many of these business and industrial clusters.
Savings are usually in the range of a high order in many clusters. A detailed study by Chari (2003) in the textile industry of Tirupur in Tamil Nadu has shown that different categories of the exporters and domestic producers were saving more than 40 per cent of their earnings. He mentions the savings of one particular group of exporters, namely the Gounder ex-workers, who saved up to 85 percent. The above study shows that family sources and savings from prior earnings are the major sources of initial capital. It also notes that the sources of capital were the most diversified, spanning farm, family and non-farm work, and to a lesser extent chit funds, marriage dowries and land sales. Chari mentions: “A large and diverse market in private and informal credit exists to make the whole production a complex function. Non-bank sources of credit in Tiruppur include private finance companies, rotating credit unions called chit funds, moneylenders, and forms of mutual assistance between friends, family or kin.”

Studies in different industrial and business centres show that family relationships play an important role in supplying funds in different places. A study among the Reddiar community businessmen in central Tamil Nadu showed that nearly one fifth of them were supported with initial funds by their married sisters. (Kanagasabapathi and Reddy, 2004) A study of diamond exporters in Ahmedabad and Surat revealed that almost all of them received support from their relatives towards initial funds and about 89 percent of them received more than 20 percent of such funds. (Patel and Kanagasabapathi, 2005) Community networks also play a notable role in different business centres in meeting the financial requirements. World Bank (2001) mentions the role of community net works in mobilising funds at cheaper costs through informal methods in Tirupur.
In many clusters the local finance plays a significant role as a source of funds. A study of Karur in Tamil Nadu, which is a major textile centre known for exports, showed that in 2001 the businessmen mobilised almost two thirds of their required funds from local financiers, even though there were many banks having branches with necessary funds for lending. ( Kanagasabapathi, 2002) Generally people in many of the places approach banks only as a last resort, as they try to arrange funds on their own. A study of the transport industry of Namakkal, the centre with the largest lorry transport traffic in India, showed that only ten percent of businessmen went to banks for initial funds, while for working capital the percentage was only three. (Kanagasabapathi and Arun Kumar, 2006)

It is important to note that the entrepreneurs in many centres usually invest a large part of their surpluses back into the business for expansion and diversification. Purchase of assets and savings are the other priorities. Generally the consumption expenditure is very less, at least till they reach a certain level. In the case of power loom textile exporters of Palladam in Tamil Nadu, it was observed that all the respondents were reinvesting their surpluses into the business, with 80 percent of them investing their entire surpluses, 13.3 percent investing 80 percent and the balance investing between 40 and 60 percent. The study showed that even for expansion and diversification, businessmen prefer to rely on own funds and surpluses. ( Kanagasabapathi and Menakha, 2005)

The overall growth of economy and business has been aided by the growth of different activities in the non-corporate sector. In fact the growth of the non- corporate sector in some of the service and industrial activities has been much faster than the over all rate of growth of the economy.

More local funds, less banking finance and no foreign investments

The dependence of the unorgainsed enterprises, small scale industries and clusters is more on local funds and less on banking institutions and formal sources, especially at the initial stages. An important point to be noted here is that the funds coming as investments to these enterprises are mostly savings and surplus from different activities including the informal and agricultural activities in the rural and semi-urban areas. There are no foreign investments in these businesses and clusters. All these businesses and clusters have grown only due to domestic investments, most of them generated locally by the entrepreneurs. The entrepreneurs of different clusters have proved that they can grow very fast with local capital to emerge as successful players at the international levels. The people of Tirupur for example, generate an export turnover of Rs.11000 crores without getting any foreign investments. The arguments of savings- investment gap and the need for foreign capital are not applicable to them, as the entire funds required are generated by them through their own efforts.

Corporate Sector

In the case of the corporate sector, Indian companies generally relied more on internal sources of funds than on external sources for many years. Mall (1997) had shown that “companies tended to rely more on retained earnings till 1983 rather than on fresh infusion of paid-up capital, which has increased considerably since then.” Bank credit to the private sector is low in India compared to other countries in the world. Reserve Bank of India (2007) notes that in 2005 credit to the private sector as percentage of GDP was 47 in India, while the same was 166 in the U.K and 260 in the U.S.
Efficient Use of Money by domestic companies


Indian companies seem to make better use of the money invested than their multinational counterparts. An analysis of sample companies by The Economic Times (2006) showed that the Indian companies in the FMCG category ‘seem to be almost thrice as efficient as global heavyweights when it comes to utilization of capital.’ It also revealed that for every rupee invested, Indian companies generate Rs.4 worth of sales, whereas the number is only Rs.1.5 for multinationals.

CAPITAL FORMATION
Along with savings, capital formation has remained as the core economic activity of Indians even in their difficult times. This could be understood from the data relating to the capital formation since the 1950s. Even in 1950-51, capital formation was 8.4 percent of GDP. Since then it has been consistently growing. The higher proportions of savings of the household sector have played a crucial role in capital formation. Capital formation by the household sector has remained more than 40 percent during the last three decades. Moreover, the household sector has been contributing significantly to the private corporate as well as the government sectors for their capital formation. The private corporate sector has shown consistently a higher share in capital formation compared to savings, indicating flow of funds from the household sector through the intermediation of banking institutions and capital markets. The government also takes a huge portion of the household savings to carry on its capital formation activities.

It could be seen that the rate of capital formation has been continuously growing since 1950s. Table 2 presents the details of capital formation since the 1950-51.
“Table 2 about here”

The table shows that the gross domestic capital formation has increased from 8.4 percent in 1950-51 to almost 36 percent in 2006-07. This translates into more than three times increase during a period of fifty six years.

When we see the contribution of different sectors to capital formation, we find that the household sector has been contributing the maximum share. Apart from this, the savings of the household sector are used by the private and government sectors to meet their savings- investment imbalances. In this connection it is relevant to note that the savings by the private and government sectors have registered growth since 2003-04. It is important to note that on the whole there were more savings than investments in 2001-02, 2002-03 and 2003-04. As a result, the savings- investment gap as a percentage of GDP was just 0.2 percent during 2001-05.

FOREIGN INVESTEMENTS

Foreign investments are allowed in to India since the early 1990s and the rules regulating their entry were being relaxed over these years. As a result they are now allowed in different areas, with a few exceptions and with different limits. Table 3 provides the foreign direct investments (FDIs) and portfolio investments in India in rupee and dollar terms.
“Table 3 about here”

The above table shows that FDI and portfolio investments have increased many times since 1990-91.

Table 4 below provides figures relating to FDI as a percentage of GDP since 1992-93.

“Table 4 about here”

The above table shows that the foreign direct investments are very small for an economy of India’s size. In fact these investments have remained less than one per cent of the GDP on an average during the above period. But at the same time one has to remember that the foreign direct investments have reached significant levels in a few companies and segments.

Foreign Direct Investment – India and China comparison

It is often argued that foreign direct investment is the main reason for the faster growth of China than India. Let us see the facts.
.
“Table 5 about here”

Table 5 shows that the net foreign direct investment into India has remained on an average less than 10 percent of that of China since 2000. There is no doubt that the rate of growth of China is higher compared to India. But is an FDI driven growth sustainable and good for the economy in the long run? Huang and Khanna (2003) note that India has a better and a sustainable model than the FDI- dependent model of China.
To quote: “What's the fastest route to economic development? Welcome foreign direct investment (FDI), says China, and most policy experts agree. But a comparison with long-time laggard India suggests that FDI is not the only path to prosperity. Indeed, India's homegrown entrepreneurs may give it a long-term advantage over a China hamstrung by inefficient banks and capital markets….China and India are the world's next major powers. They also offer competing models of development. It has long been an article of faith that China is on the faster track, and the economic data bear this out.
However, the statistics tell only part of the story-the macroeconomic story. At the micro level, things look quite different. There, India displays every bit as much dynamism as China. Indeed, by relying primarily on organic growth, India is making fuller use of its resources and has chosen a path that may well deliver more sustainable progress than China's FDI-driven approach. "Can India surpass China?" is no longer a silly question, and, if it turns out that India has indeed made the wiser bet, the implications for China's future growth and for how policy experts think about economic development generally- could be enormous.”
Studies show that foreign investments do not help much in the growth of the economies in the long run. In fact many of the fast growing countries have higher self-financing ratios. Aizenman, Pinto and Radziwill (2003) note that "there is no evidence of any "growth bonus" associated with increasing the financing share of foreign savings. In fact, the evidence suggests the opposite: throughout the 1990s, countries with higher self-financing ratios grew significantly faster than countries with low self-financing ratios." It was observed that on an average, 90 per cent of the stock of capital in developing countries was self-financed.

CONCLUSION

Indian economy is basically a self financing and home grown one. The largest segment of the economy, namely the non-corporate sector, functions on its own without much support from the institutions for their financial needs. A sizable section of this segment, especially at the lower levels, pays higher rates of interest for funds and engages in different economic activities successfully, though the banking and institutional funds are not easily accessible to them. Much of the non-corporate sector investment is based on local funds generated by the promoters. Clusters mobilise most of the funds on their own, through own and close sources, and other local mechanisms. They go to banking and institutional sources mainly when their funds are not adequate to promote ventures, and in the later stages, when more funds are required for expansion and growth. In none of these places there are foreign direct investments. Generally the corporate sector tried to rely more on internal sources during the earlier periods. Even now bank credit as a percentage of GDP is lesser in India when compared to the developed economies.

So India is basically on the self financing track. In fact it has remained so since the 1950s. Indian economy and businesses have proved capable of generating funds on their own, even through the most difficult times. In contrast, savings and investments as a percentage of GDP have been declining in the case of the advanced economies. The growth of the Indian economy and development of businesses over all these years has been fundamentally driven by the domestic finance mobilised through savings and funds from close and local sources with support from the institutions.


REFERENCES

Aizenman, Joshua. Pinto, Brian and Radziwill, Artur (2003), "Sources for financing domestic capital: Is foreign saving a viable option for developing countries?", Working Paper 10624, National Bureau of Economic Research, June
Chadha, G.K. (2003), Rural industry in India, New Delhi: South Asia Division, International Labour Organization
Chari, Sharad. (2004), Fraternal Capital, Delhi: Permanent Black
Government of India, The Economic Census 1998, New Delhi: Ministry of Statistics and Programme Implementation
Government of India (2004), Final Results: Third All India Census of Small Scale industries, 2001-2002, New Delhi: Ministry of Small Scale Industries
Government of India ( 2005), Statement of NAS 2005, 1993-94 to 2002-03/ 2003-04, Central Statistical Organisation, New Delhi: Ministry of Statistics and Programme Implementation
Government of India ( 2008), Economic Survey 2007-08, New Delhi: Ministry of Finance
Huang, Yasheng and Khanna, Tarun (2003), “Can India overtake China ?”, Foreign Policy, July/ August
Kanagasabapathi, P. (2002), Unorganised finance sector in India: The engine for economic growth – A study with reference to Karur, Tamil Nadu, Coimbatore: Swadeshi Academic Council
Kanagasabapathi, P and Reddy, Senthil V (2004), “ A study of entrepreneurship among Reddiars”, Unpublished report, P.S.G. College of Technology, Coimbatore
Kanagasabapathi, P. and Menakha, I. (2005), “A Study on Power-loom Textile Export Industry of Palladam”, Unpublished report, P.S.G. College of Technology, Coimbatore
Kanagasabapathi P. and Arun Kumar, M.N. (2006), “A Study on Namakkal Transport Industry”, Unpublished report, P.S.G. Institute of Management, Coimbatore
Maddison, Angus (1998), Chinese Economic Performance in the Long Run, Paris: Organisation for Economic Cooperation and Development
Mall, C.P. (1997), ‘ Trends in capital structure of medium and large private limited companies’ in Sudipt Dutta, Family business in India, New Delhi: Response Books
Mohan, Rakesh (2002), ‘Fiscal Correction for Economic Growth’, in Uma Kapila (ed.), Indian Economy since Independence, Fourteenth Edition, New Delhi: Academic Foundation
Patel, Sharad and Kanagasabapathi, P. (2005), “A Study on Gujarat Diamond Export Industry”, Unpublished report, P.S.G. Institute of Management, Coimbatore
Rakshit, Mihir (2006), ‘On Liberalizing Foreign Institutional Investments’,
Economic and Political Weekly, Vol. 41(11): 991-1000
Reserve Bank of India (2007), Annual Report 2006-07, Mumbai: RBI
Reserve Bank of India (2008 ), Handbook of Statistics on Indian Economy, Mumbai: RBI
Reserve Bank of India ( 2008), Report on Currency and Finance 2006-08, Mumbai: RBI
The Boston Consulting Group (2006), “The New Global Challengers- How
100 top companies from Rapidly Developing Economies are Changing the
World”, BCG Report, The Boston Consulting Group Inc.,
The Economic Times (2006), “Desis beat MNCs in use of money”, August, 2, Chennai
Tripathi, Dwijendra and Jumani, Jyoti (2007) , The Concise Oxford History
of Indian Business, New Delhi: Oxford University Press
Uma Kapila (2003), Understanding the Problems of Indian Economy, Fourth Edition 2003-04, New Delhi: Academic Foundation
World Bank (2001), World Development Report 2001, Washington: World Bank
World Bank (2007), Global Development Finance I: Review, Analysis, and Outlook 2007, Washington: World Bank
Vaidyanathan, R. (2004 ), “The least acknowledged big savers”, The Hindu- Business Line, July 15

( Published in Pragati- Quarterly Research Journal, Vol.3, No.109, Bharatheeya Vichara Kendram Research Centre, Thiruvananthapuram, July- Sept.2009 )  
 

மாணவர்கள் கேட்கும் கல்வி

கல்வியின் நோக்கமே மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதுதான். உடல், அறிவு, மனம் என எல்லா நிலைகளிலும் மாணவர்களை உயர்த்தி குடும்பமும், சமூகமும் உயர் நிலையை அடையச் செய்ய வழி வகுப்பதுதான் கல்வியாகும்.


நமது நாடு கல்வியில் உலகுக்கே முன்னோடியாக இருந்ததை வரலாறு சொல்கிறது. மிக உயர்ந்த இலக்கியப் படைப்புகளும், அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளும், கணித, வானியல் கோட்பாடுகளும் பல நூறாண்டுகளுக்கு முன்பே நம்மிடம் உருவானதற்கு நாம் அன்று பெற்றிருந்த தரமான கல்வி முறைதான் அடிப்படையாக இருந்திருக்க முடியும். அதனால்தான் தான் மகாத்மா காந்தி அவர்கள் 1931-ல் லண்டனுக்குச் சென்றிருந்த சமயம், நமது தேசத்திலிருந்த பண்டைய கல்வி முறை ஒரு அழகான மரம் போல இருந்ததாகவும், அது பின்னர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

சுதந்திரத்துக்குப் பின் வந்த நமது அரசுகள் கல்வித் திட்டத்தை சீரமைக்க நிறைய குழுக்களை அமைத்தன. ஆனால் அந்தக் குழுக்களின் அடிப்படையான பரிந்துரைகள் கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன.மாணவனுக்கு சரியான கல்வியை கொடுக்க வேண்டும் என அவ்வப்போது பேசினாலும் கூட, அது குறித்து உரிய மாற்றங்களை செய்ய நாம் தவறி விட்டோம். அதிலும் இது நாள் வரை மாணவனுக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கூட முழுமையாக சிந்திக்காமல், காலனி கல்வித் திட்டத்தையே தொடர்ந்து பெரிதும் நடைமுறை படுத்தி வந்து விட்டோம். நமது தேசத்துக்கு பொருத்தமான கல்வித்திட்டம் எதுவென்பது குறித்து விவாதம் கூட பெரிய அளவில் எதுவும் நடத்தத் தவறி விட்டோம். அதனால் குழந்தைகளின் ஒட்டு மொத்த வாழ்வை மேம்படுத்தும் கல்வி குறித்து நாம் திட்டங்களை தீட்டவில்லை. படிக்கின்ற மாணவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ, அவர்களின் கருத்துகளை அறிய இதுவரை எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை.

ஆனால் இப்போது முதன்முறையாக மத்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு மூலம் மாணவர்களிடம் ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வை நடத்தியுள்ளது. நமது நாட்டில் 21 மாநிலங்களிலுள்ள 278 பள்ளிகளில் 11000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 8 வெவ்வேறு மொழிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிராமங்களிலும், நகரங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்கள். இந்த ஆய்வின் மூலம் தற்போதைய கல்வி முறையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக நமக்கு எடுத்து வைக்கின்றனர்.

91 விழுக்காடு மாணவர்கள் கலாசாரக் கல்வி படிப்பது தங்களுக்குப் பயனளிக்கும் எனச் சொல்கின்றனர். 60 விழுக்காடு மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இக்கல்வி அமைய வேண்டுமென விரும்புகின்றனர். இது பற்றி ஒரு மாணவர் குறிப்பிடும்போது தற்போதைய கல்வி முறை மூளைக்கு மட்டுமே வேலை தருவதாகவும், தாங்கள் வேண்டுவது மூளை - உடல் – மனம் ஆகிய அனைத்தையும் வளர்த்தும் கல்வி முறையே என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். தற்போதைய கல்விமுறை ஒரு மனிதனை இயந்திரமாக மட்டுமே இயங்கச் செய்கிறது என இன்னொரு மாணவர் கூறியுள்ளார். 1996-ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சவான் பாராளுமன்றக்குழு கூட மேற்கத்திய கலசாரத்தின் பாதிப்புகள் நம் மாணவர்களை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாணவர்களுக்கு நமது கலாசார பாரம்பரியம் குறித்து கல்வி போதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் உச்சநீதி மன்றமும் 2002-ம் வருடம் இதன் அவசியம் குறித்து வலியுறித்தியுள்ளது.

நமது தேசத்தின் பாரம்பரிய கலைகளின் வகைகள் பற்றி மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான மாணவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால் பரதநாட்டியம், இசை, ஓவியம், தியானம், யோகாசனங்கள், கபடி போன்ற விளையாட்டுகள் மாணவர்களை ஈர்க்கின்றன. அவற்றை தெரிந்து கொள்ள மாணவர்கள் விரும்புகின்றனர். 37 விழுக்காடு மாணவர்கள் தங்களது பாடத்திட்டம் மூலமே பரதநாட்டியம் மற்றும் இசை உள்ளிட்ட கலைகளைக் கற்பதாகக் கூறியுள்ளனர். 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் யோகாசனம், பிராணயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் தங்களுக்கு உதவியாக உள்ளதாக கூறுகின்றனர். 52 விழுக்காடு மாணவர்கள் இவற்றை பள்ளியிலும், ஏறத்தாழ 30 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கு வெளியிலும் கற்று வருவதாகச் சொல்கின்றனர். ஆனால் நிறைய பள்ளிகளில் உள்ள மற்ற மாணவர்களுக்கு இவற்றைக் கற்க வாய்ப்பில்லை. எனவே, யோகா, தியானம் ஆகிய பயிற்சிகளை பாடத்திட்டத்தின் அங்கமாகவும், இசை, நடனம், ஓவியம் போன்றவற்றை விருப்பப் பாடங்களாகவும் பாடத்திட்டத்தில் வைப்பது அவசியம் எனத் தெரிகிறது.

இராமாயணம், மகாபாரதம் பற்றி முக்கால் பங்கு மாணவர்களும், புத்தரின் போதனைகள் குறித்து மூன்றில் ஒரு பங்கு மாணவர்களும்,பிற னியர் அறிவுரைகள் குறித்து 30 விழுக்காடு மாணவர்களும்,
அறிந்துள்ளனர். ஆனால் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களே தங்களின் பகுதி சார்ந்த கலாசாரத்திலிருந்து கதைகள் மற்றும் போதனைகளை கற்றதாகக் கூறுகின்றனர்.

51 விழுக்காடு மாணவர்கள் நமது தேசத்தின் பிற மொழிகள் தங்களுக்குப் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். இதில் பாதிப்பேர் கலாசாரக் காரணங்களுக்காகவும், மீதிப் பேர் தேச ஒருமைப் பாட்டுக்காகவும் இதை வேண்டுகின்றனர். மொத்தத்தில் கால் பகுதி மாணவர்கள்களுக்குக்கூட பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய விசயமாகும்.

38 விழுக்காடு மாணவர்களே சில நற்குணங்கள் மற்றும் ஒழுக்கங்கள் பற்றி பள்ளிகளில் கற்பதாகச் சொல்கின்றனர். 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாணவர்களால் நேர்மை, உண்மை, சகோதரத்துவம், தர்மம், கடமை, என்னும் இக்குணங்களில் ஒன்றைக் கூட குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. மாணவர்கள் கற்று நடைமுறைப்படுத்த விரும்பும் நற்குணங்களை இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம் போன்ற இலக்கியங்களிலுள்ள கதைகள் மூலம் தாங்கள் பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களைவிட மாணவிகள் கலாசாரக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களாகவும், அது பற்றி தெரிந்தவர்களாகவும் உள்ளனர். இந்திய மொழிகளில்
பயிலும் மாணவர்கள் ஆங்கில மொழிவழி மாணவர்களைவிட நமது கலாசாரத்தை அதிகம் மதிக்கின்றனர். மேலும் அவர்கள் கலாசாரம் பற்றி படிக்க மிக ஆர்வமாகவும் உள்ளனர். நாட்டிலேயே தமிழக மாணவர்கள் தான் இந்தியக் கலாசாரத்துக்கு பாடத்திட்டத்தில் கொடுக்கும் கவனம் குறித்து மிக அதிருப்தி அடைந்துள்ளனர். அதே சமயம் அவர்களுக்கு பிற மொழி இலக்கியங்கள் பற்றித் தெரிந்திருப்பதும் மிகக் குறைவாக உள்ளது.

தனியார் பள்ளிகளில் இந்தியக் கலசாரம் சம்பந்தப்பட்ட கல்வி, அரசுப் பள்ளிகளைவிட அதிகம் உள்ளது. எனவே கிராமப்புற மாணவர்களிடையே கலாசாரம் குறித்த கல்விக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. 9 ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு செல்ல செல்ல, பாடமுறையிலுள்ள கலாசாரம் சார்ந்த கல்வி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இந்தக் கல்வி குறித்த மாணவர்களின் விருப்பம் அதிகரித்துக் கொண்டே வருவது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது.

கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக பாதியளவு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் முதலாவதாக கலாச்சாரக் கல்வி இல்லாததையும், இரண்டாவதாக வாழ்க்கைக்குப் பயன்படாத நேரடியாக பரிசோதிக்கப்படும் தன்மை இல்லாத பாடங்கள் உள்ளதையும் குறிப்பிடுகின்றனர். மூன்றாவதாக உயர்குணங்கள் மற்றும் தார்மீக நெறி முறைகள் போதிக்கப்படாத கல்வியை முக்கிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

போதிக்கும் மொழியைப் பொறுத்தவரையில், ஏறத்தாழ இரண்டு மடங்கு மாணவர்கள் தாய் மொழிக்கல்விதான் விசயங்களைப் புரிந்து கொள்ள நல்ல முறையில் உதவும் என எண்ணுகின்றனர். ஆங்கில மொழியில் கற்பவர்களில் கூட 40 விழுக்காடு மாணவர்கள் தாய் மொழிக்கல்விதான் சரியானதாக இருக்கும் என கருதுகின்றனர். இந்த ஆய்வின் இன்னொரு வெளிப்பாடு 13 விழுக்காடு மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க இயலாத நிலையில் உள்ளனர் என்பதாகும்.

62 விழுக்காடு மாணவர்கள் தாங்கள் பள்ளிக்குச் சுமந்து செல்லும் பாடப்புத்தகங்கள் தேவையற்றது எனவும் மிக அதிகம் எனவும் நினைக்கின்றனர். 35 விழுக்காடு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி பெற்றோர்கள் தம்மை நிர்ப்பந்திப்பதாக கூறுகின்றனர். 70 விழுக்காடு மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பு நேரங்கள் தங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் மாற்றமாக இருப்பதாகச் சொல்கின்றனர். 31 விழுக்காடு மாணவர்கள் உடற்பயிற்சி நேரம் போதவில்லை எனக் குறைப்படுகின்றனர். 67 விழுக்காடு மாணவர்கள் பள்ளியைச் சுற்றி செடி கொடிகள் நிறைந்த பசுமையானப் பகுதிகள் இருத்தல் நல்லது என விரும்புகின்றனர்.

80 விழுக்காடு மாணவர்கள் பாடங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்றனர். 65 விழுக்காடு மாணவர்கள் நடைமுறை நிலையைச் சம்பந்தப்படுத்தி பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை அமைய வேண்டும் என வேண்டுகின்றனர். சொல்லிக் கொடுக்கும் முறையில் புதுமை, நிறைய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான செயல்பாடுகள், புதிய இடங்களைப் போய் நேரில் பார்ப்பது ஆகியவை வேண்டுமென மாணவர்கள் கேட்கின்றனர். ஆசிரியர்கள் நடைமுறை உதாரணங்களுடன் பாடம் சொல்லித் தருபவராகவும், மனிதப் பண்புகள் உள்ளவராகவும் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர் பார்க்கின்றனர். பாடங்கள் வாழ்க்கைக்கு சம்பந்தமானவையாக இருக்க வேண்டுமென மாணவர்கள் விரும்புகின்றனர். மேலும் தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் நற்குணங்களையும், பண்புகளையும் வளர்த்துக் கொள்ளும் முறை இல்லை எனக் கூறுகின்றனர். தற்போதைய முறை சுய நலம் உள்ளிட்ட தன்மைகளையே தூண்டுவதாகவும், அவற்றையே உயர்வாக கருதப்படும் நிலையை வளர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஒட்டு மொத்த அறிக்கையிலும் நாடு முழுதும் உள்ள மாணவச் செல்வங்கள் தங்கள் உள்ளக் கிடைக்கையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கூறப்பட்டுள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் நமக்குத் தெரிந்ததுதான். நம்முடைய கல்விக்கான குழுக்கள் பலவும் சுட்டிக் காட்டியவைதான். மகாத்மா உள்ளிட்ட தேசத் தலைவர்கள் வலியுறித்தவைதான். ஆனால் இதன் முக்கியத்துவம் என்னவெனில், பயனாளிகளான மாணவர்களே இந்த விசயங்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளதுதான்.

அடிப்படை நெறிகளற்ற மனிதர்களைக் கொண்ட சமுதாயம், எவ்வளவுதான் திறமையானவர்களைப் பெற்றிருந்தாலும், எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சியை அடைந்தாலும், அழிவை நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாது என்பது உண்மை. அடிப்படை நெறிகள் சேரும்போதுதான் எந்தவிதவளர்ச்சியும் முற்றுப் பெறும். எந்தவித மனிதனும் முழுமையடைவான். அப்படி இருக்கும் போது நாம் ஏன் மாணவர்களுக்கு அவர்களை மேன்மையடையச் செய்யும் கல்வியைக் கொடுப்பதில்லை?

நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் கேட்பதெல்லாம் அவர்களை நல்ல குணமிக்க, தேசப்பற்று நிறைந்த மக்களாக மாற்றி, அவர்தம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணை புரியும் கல்வியை போதிக்கும் திட்டம் வேண்டும் என்பதுதான்.

இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொருவராலும் மாணவர்களின் கருத்துக்கள் அனைத்திலும் நியாயம் இருப்பதை உணர முடிகிறது, இப்போது நம் முன் உள்ள ஒரே கேள்வி இதுதான்........

மாணவர்கள் கேட்கும் கல்வியைத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்?

-தினமணி

மக்கள் பற்றாக்குறையில் மேலைநாடுகள்

-மக்கள் பற்றாக்குறையில் மேலைநாடுகள்
ப.கனகசபாபதி -
ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால், ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்த நாடுகளில் என்ன பிரச்சினை? உணவுப் பற்றாக்குறையா, பஞ்சமா அல்லது தீராத வியாதி தொல்லையா? இவை எதுவுமில்லை. அந்த நாடுகளெல்லாம் தொழில்வளர்ச்சி பெற்ற செல்வந்த நாடுகள், இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கெல்லாம் ஏன் இந்தப் பிரச்சினை? அவைதான் பொருளாதார வளர்ச்சி பெற்று, செல்வச் செழிப்பில் உள்ளவையாயிற்றே? அப்படிப்பட்ட நிலையில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? பிரச்சினை இதுதான். குடும்பங்களின் சிதைவு. வளர்ந்த நாடுகளில் குடும்பங்கள் ஏன் சிதைந்து வருகின்றன? செல்வம் பெருகப் பெருக, மனித வளம் உயர உயர குடும்பங்கள் அதிக மகிழ்ச்சியுடன்தானே இருக்க வேண்டும்? எப்படி குடும்பங்கள் சிதைய முடியும்? அதற்கு என்னென்ன காரணங்கள்? முக்கியக் காரணம் கலாசாரச் சீரழிவு. கலாசாரச் சீரழிவுகள் குடும்ப அமைப்பை பல வழிகளில் பாதிக்கின்றன. முதலாவது, மண முறிவுகள். கடந்த ஆண்டுகளில் மணமுறிவுகளின் எண்ணிக்கை அங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அந்த நாடுகளில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே என்ற நிலைமை நிறைய குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் என்றாலே அம்மாவும் அப்பாவும் சேர்ந்துதான். ஆனால், தனியான அம்மா, தனியான அப்பா என குறைந்தபட்ச குடும்ப உறவே சுருங்கிவிட்ட நிலை அங்கு அதிகரித்து வருகிறது. அதிலும், பள்ளி செல்லும் வயதிலேயே தாயாகித் தனித்து விடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியது. இரண்டாவது பாதிப்பு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத தன்மை. எனவே, அங்கு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி ஏறத்தாழ 14 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் குழந்தைகள் இல்லை. அமெரிக்காவில் இது 16 விழுக்காடாக உள்ளது. எதிர்காலம் குறித்த பயம், நிரந்தர வாழ்க்கைத்துணையின்மை, வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை ஆகிய காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதாக மேலை நாட்டு மக்கள் கூறுகின்றனர். இத்தகைய எண்ணங்களால் 49 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் இப்போது குழந்தைகள் இல்லை. மக்கள்தொகைப் பற்றாக்குறையால் புதிய பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டு அரசுகள் இது குறித்து கவலை அடைந்துள்ளன. இதனால் குடும்ப அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அந்நாட்டு அரசுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கி வருகின்றன. குழந்தை போனஸ், குடும்ப அலவன்ஸ், பிரசவகால விடுப்பு, வரிச்சலுகைகள், அலுவலக வேலை நேர கட்டுப்பாடுகளில் தளர்வு, வீட்டு வசதி சலுகைகள் என பலவிதமான உதவிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒன்பது குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிரெஞ்சு நாட்டுப் பெண்ணை அந்நாட்டின் அதிபர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் குறைந்தபட்ச மக்கள்தொகையாவது அவசியம் இருக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு விகிதம் ஸ்பெயின் நாட்டில் 1.32, இத்தாலியில் 1.33, ஜெர்மனியில் 1.37 என்ற அளவில் உள்ளது. இதனால், தற்போதைய மக்கள்தொகையைக் கூட அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை குறித்து ஏன் இவ்வளவு கவலை? மக்கள்தொகை குறைவாக இருந்தால் நல்லதுதானே என்ற எண்ணம் நமக்கு எழலாம். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கூடுதலான மக்கள்தொகையைவிட, மக்கள்தொகை பற்றாக்குறை ஆபத்தானதாகும். ஏனெனில், போதுமான மக்கள்தொகை இல்லையெனில், ஒரு நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் ஒரு குழந்தை திட்டத்தை முன்னர் கடுமையாக அமுல்படுத்திய சீன நாடுகூட, தனது கொள்கையின் இறுக்கத்தை இன்று புரிந்து கொண்டுள்ளது. மேலை நாட்டு சமூகங்கள் அரசு சார்ந்தவை. அங்கு குடும்ப அமைப்பு சிதைந்துபோவதால், அரசுகள் தான் மக்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இதற்காக அந்த அரசுகள் நிறைய தொகைககளை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் வேலையில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும், இன்ன பிற வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் நிலை உள்ளது. இந்தத் தொகைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் வருவாயிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால், இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியாதாரமும் வெகுவாகக் குறைகிறது. எனவே, இத்திட்டங்களை தொடர்ந்து அரசுகளால் நடத்த முடியுமா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், இத்திட்டங்களை அரசுகள் கைவிடுமேயானால் அங்கு பெரும் பிரச்சினைகள் வெடிக்கும். ஏனெனில், சம்பாதிக்கும் நிலையில் இல்லாத மக்களின் வாழ்க்கைக்கு யாரும் பொறுப்பேற்காத சூழ்நிலை உருவாகும். இதனால், மேலை நாடுகள் பலவற்றுக்கு இப்போதே மிகுந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து விட்டார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதும் அதிகமாகிவருகிறது. வயதானவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதற்காக அவர்களின் உடல்நிலையை நல்லமுறையில் பராமரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்யத் தொடங்கியுள்ளன. ஆனால், இவையெல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்தான் என்று அவர்களுக்குத் தெரியும். எனினும், இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, நிலையான குடும்ப அமைப்பும் அதன் மூலம் தேவையான எண்ணிக்கையில் உருவாகும் நல்ல குழந்தைகளும்தான். ஆனால், நிலையான குடும்பங்களை அமைக்கும் முயற்சி உயர்வான உறவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைய முடியும். அந்த உறவுகள் மேலை நாடுகளில் பெருமளவில் கலாசாரச் சீரழிவுகளால் சிதைக்கப்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும். இந்தவகையில் வளர்ந்த நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எந்தவித பொருளாதார வளர்ச்சியும் குடும்பக் கலாசாரத்தின் அடிப்படையை பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. (கட்டுரையாளர்: பேராசிரியர் பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனம், கோவை) - தினமணி -

வெற்றிக் கதைகள் - 25
குடும்பங்களே நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம்

இந்திய கலாச்சாரத்தின் உன்னதமான படைப்பு குடும்ப அமைப்பாகும். இது ஒரு சமூக அமைப்பு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரமும் ஆகும். நமது நாடு பொருளாதார, சமூக மற்றும் காலாசார ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருவதற்கு குடும்ப அமைப்பு முறை அடித்தளமாக இருந்து வருகிறது. குடும்பம் நடத்துபவன் தான் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் துணையாக அமைய முடியும் என்று வள்ளுவர் கூறுகிறார். "துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை' என்னும் குறள் மூலம் இதை விளக்குகிறார். எனவே குடும்பம் நடத்துவது என்பது ஒரு அத்யாவசிய கடமையாக நமது நாட்டில் காலங்காலமாக எடுத்துரைக்கப்ப்டடு வருகிறது.குடும்பத் தலைவன் தனது குடும்ப உறுப்பினர்களுக்காகத் தனது தனிப்பட்ட நலனைத் தியாகம் செய்பவனாக இருக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எப்படி மதிக்கப்பட வேண்டும், குழந்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவான விளக்கங்களை நமது முன்னோர்கள் கொடுத்துச் சென்றுள்ளனர். அதனால் தான் நமது நாட்டின் பல பகுதிகளிலும் குடும்பங்களை வைத்தே அனைவரையும் அறியும் முறை பரவலாக உள்ளது. நமது நாட்டில் தனிநபர் என்று யாரையும் சொல்லஇயலாத நிலையே உள்ளது.2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவில் 19.2 கோடி குடும்பங்கள் உள்ளன.ஒவ்வாரு வீட்டிலும் சராசரியாக 5 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த குடும்பங்கள் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்கு அசாத்தியமானது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சேமிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் சேமிப்பு மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் உள்ளது. அதில் குடும்ப அமைப்புகளின் பங்கு எப்போதும் முதன்மையாக இருந்து வருகிறது. 195051 ல் நம்நாட்டில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். ஆனாலும் நாட்டின் சேமிப்பு 9 சதவீதம் இருந்தது. அதில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மட்டும் மூன்றில் இரண்டு பங்கு இருந்தது. அன்று தொடங்கி இன்று வரை குடும்பம் சார்ந்த அமைப்புகள் நாட்டிற்கு தேவையான சேமிப்புகளை அதிக அளவில் அளித்துவருகின்றன. 199091 ம் ஆண்டில் நாட்டின் சேமிப்பில் 91 சதவீதம் குடும்பம் சார்ந்த அமைப்புகளால் மட்டுமே கொடுக்கப்பட்டது.சேமிப்புகளை மேற்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் சேமிக்கின்றனர். எனவே சேமிப்புகள் நம்பிக்கையான முதலீடுகளில் போடப்படுகின்றன. வங்கிகளிலும் அரசுத்துறை சார்ந்த அமைப்புகளிலும் அதிக அளவில் முதலீடுகள் குவிகின்றன. குடும்ப அமைப்புகளால் 200607 ம் ஆண்டில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்ட முதலீடுகள் வங்கிகளில் பல வகை டெபாசிட்டுகளாக போடப்பட்டுள்ளன. அதேபாலே ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சிறுசேமிப்புகள், பிராவிடண்டு மற்றும் பென்சன் பண்டுகள் என்று பல வழிகளிலும் பணம் சேமிக்கப்படுகிறது.மேற்கண்ட சேமிப்புகள் தான் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடாக மாறுகிறது. குடும்பம் சார்ந்த அமைப்புகள் மட்டும் நம்நாட்டின் மொத்த முதலீட்டில் 40 சதவீத அளவை மேற்கொள்கின்றன. மீதி கம்பெனி மற்றும் அரசுத்துறைகளால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த இரண்டு துறைகளும் கூட குடும்ப அமைப்புகளின் உதவியைக் கொண்டே பெருமளவில் தொழில்களில் முதலீடுகளைச் செய்கின்றன.நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. நாட்டின் முக்கியமான பல தொழில்களிலும் குடும்பங்களின் பங்கு அதிகமாக உள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் தொழில் மற்றும் சேவைத்துறைகள் மூலம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் குடும்பங்களின் பங்களிப்பே அதிகம். கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்த கட்டுமானம், வியாபாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் குடும்பங்களே பிரதான இடத்தை வகிக்கின்றன.தொழில்துறையை பொருத்தவரையில் மிக சிறு தொழில்கள் முதல் பெரிய கம்பெனிகள் வரை பல லட்சக்கணக்கான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் நமது நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலுமே முக்கிய பங்கினை குடும்பங்கள் வகிக்கின்றன. அதனால் அவற்றுக்குத் தேவையான நிதிகளைத் திரட்டி நல்ல முறையில் தொழில்களை நடத்தும் பொறுப்பை குடும்பங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. கம்பெனி அமைப்புகளில் 95 சதவீதத்திற்கு மேல் குடும்பங்களிடமே உள்ளன.தொழில்துறையில் குடும்ப உறுப்பினர்கள் இணைந்தும், கூட்டுக்குடும்பங்களாகவும் இன்றும் பல தொழில்களை நடத்தி வருகின்றன. இவர்கள் நடத்தும் தொழில் வேகமாக வளருகிறது. மேலும் மூத்தவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து தொழிலை நடத்தும் போது அனுபவரும், இளமையும் கைகோர்த்து தொழிலை வெற்றிப்பாதையில் அழைத்து செல்கின்றது.தொழிலுக்குத் தேவையான நடைமுறை அனுபவத்தை பெரியவர்கள் கொடுக்கின்றனர். அதனால் எந்தப்பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத பாடங்களை அவர்கள் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தொழில் குடும்பங்கள் பலவற்றிலும் பரவலாக 70 வயதைக் கடந்தவர்கள் கூட தொழிலுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறுவதையும், தேவையான சமயத்தில் தாமே முன்னின்று முக்கிய முடிவுகளை எடுப்பதையும் காணமுடிகிறது. சில சமயங்களில் அவர்களே முழு ஈடுபாட்டுடன் தொழிலை நடத்துவதையும் பார்க்க முடிகிறது. பெரிய நிறுவனங்களை பொறுத்தவரையில் குடும்பத்தில் மூத்தவரே கம்பெனியில் தலைவராக இருப்பதும் நடைமுறையில் உள்ளது.எனவே இந்திய பொருளதாரமும் தொழில்களும் குடும்பங்களாலேயே நடத்தப்படுகின்றன என்றால் அது மிகையானது அல்ல. பலவித அந்நிய தாக்குதல்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போடுவதற்கு குடும்ப அமைப்புமுறையே அஸ்திவாரமாக விளங்குகிறது. மேலை நாடுகளைப்பொறுத்தவரையில் தனிநபர் காலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது. அதனால் ஒவ்வொருவரும் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளைப் பார்த்து முடிவுகளை எடுக்கின்றனர். எனவே அங்கு குடும்ப அமைப்பு வேகமாக சிதைந்து வருகிறது. ஆகையால் மிக அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. குடும்பங்கள் சிதைந்து போவதால் சிறுவயதிலேயே தகாத உறவுகள் அதிகரிக்கின்றன. அதனால் திருமணமாகாமல் விரும்பிய காலம் வரை ஒன்று சேர்ந்து வாழும் முறையும் அதிகரித்து உள்ளது. அந்த உறவுகள் அந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய தன்மையுடையது.திருமணமாகாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை இங்கிலாந்தில் 42 சதவீதமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் கணிசமான பேருக்கு கடைசிவரை தனது தந்தை யாரென்றே தெரிவதில்லை. இதனால் தங்கள் சந்ததியினருக்கு என்று பெற்றோர்கள் யாரும் சேமிப்பதில்லை. குடும்பங்கள் சிதைவதால் மேலைநாட்டினரின் சமூக அமைப்புகளும், பொருளாதாரமும் ஆடிப்போயுள்ளன. சமூகங்களில் குற்றங்கள் அதிகரித்து அரசுகளுக்கு பெரிய செலவுகள் ஏற்பட்டு, பொருளாதாரச் சுமை அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்தில் குடும்ப சிதைவுகளால் அரசுக்கு ஏற்படும் செலவு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய். மேறகத்திய அரசுகள் தனிநபர் மற்றும் சமூகங்களின் பாதுகாப்புக்கு என்று பொருளாதார மதிப்பில் மூன்றில் ஒன்று முதல் இரண்டு பங்கு வரை செலவிடுகின்றனர். ஆயினும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.அங்கு குடும்பங்கள் சிதைந்துபோனதால் சேமிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் அரசுகளை சார்ந்து நிற்கின்றனர். நமது நாட்டில் குடும்ப அமைப்புகள் வலுவாக இருப்பதால் சேமிப்புகள் பெருகி மக்கள் தாமாக தொழில்களில் ஈடுபடுவது மட்டுமன்றி அரசு மற்றும் கம்பெனி துறைகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் அளிக்கின்றனர். அதனால் நம் நாட்டின் சமூகமும், பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே குடும்ப அமைப்பே நமது பலம். நமது நாட்டின் பல தொழில் மையங்களின் வெற்றிக்கும், சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சியின் போதும் நமது பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு காரணம் நமது குடும்ப அமைப்புமுறை தான். மேற்கத்திய கலாச்சார தாக்குதலில் சிதைந்து போகாமல் குடும்ப முறையை காப்பாற்றுவது நமது எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

நாட்டின் சேமிப்பில் குடும்பம் சார்ந்த அமைப்புகளின் பங்கு(மொத்த பொருளாதார உற்பத்தியில் சதவீதம்)
1950- 51 1970- 71 1990- 91 2006- 0௭
மொத்தஉள்நாட்டுசேமிப்பு: 8.6 14.2 22.8 34.8
இதில்குடும்பங்களின்பங்கு: 5.7 9.5 19.4 23.8
கம்பெனிஅமைப்புகள்: 0.9 1.5 2.7 7.8
பொதுத்துறைகள்: 2.0 3.3 1.8 3.2
ஆதாரம்: மத்திய அரசின் பொருளாதார சர்வே 200708

வெற்றிகதைகள் -24மேற்கத்திய பொருளாதாரக் கோட்பாடுகளை தோற்கடிக்கும் இந்தியா!


மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அமைப்பு முறைகளுக்குப் பெரிய வரலாறு என்று எதுவம் இல்லை. 14 ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியாவில் நிலவி வந்த பிரபுத்துவ முறையானது கடைசிக் கட்டத்தை அடைந்தது. அந்த முறையில் நிலங்கள் ஒரு சிலரிடத்தில் மட்டும் குவிந்து கிடந்தது. பெரும்பாலானவர்கள் கூலிகளாக வேலை செய்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். அதனால் சமூகத்தில் நிம்மதி இல்லாமல் பற்றாக்குறையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.பின்னர் 16 முதல் 18 ம் நூற்றாண்டு வரையில் வணிகத்துவ முறை நிலவி வந்தது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி கையிருப்புகளை அதிகமாக வைத்துக் கொள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன. அதற்காக கடற்கொள்ளை உட்பட பலவிதமான வழிகளையும் அவைகள் கையாண்டன. நாடுகளைப் பிடித்து அவற்றின் செல்வங்களை சுரண்டுவதற்கு முனைந்தன. அதன்மூலம்தான் காலனி ஆதிக்க முறை தோன்றியது. அந்த முறையிலும் பெரும்பான்மை மக்கள் பலன் பெறவில்லை. எனவே மக்களிடத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் ஆடம்ஸ்மித் முன்வைத்த முதலாளித்துவ பொருளாதார முறை வணிகத்துவ முறைக்கு மாற்றாக கருதப்பட்டது. அந்த முறையில் அரசாங்கத் தலையீடுகள் ஏதுமில்லாத வகையில் தொழில்கள் நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதனால் உண்டான விளைவுகளுக்கு மாற்றாக 19 ம் நூற்றாண்டின் பின் பகுதியில் கம்யூனிச பொருளாதார முறையை கார்ல் மார்க்ஸ் முன் வைத்தார்.1980 களின் இறுதியில் சோவியத் ரஷ்யா கம்யூனிச பொருளாதார முறைகளை கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த நாடே பல பிரிவுகளாக சிதறுண்டது. அதேசமயம் முதலாளித்துவ முறையில் சந்தை மையமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்விளைவாக மிகப்பெரிய கம்பெனிகள் உருவெடுத்தன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல், ஒட்டுமொத்த மனித இனவளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு போன்ற மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எனவே கடந்த 500 ஆண்டுகளில் மேற்கத்திய பொருளாதார அணுகுமுறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்துள்ளன. அவை எதிலுமே மக்களுக்கு முழுமையான வளர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. மேலும் அவர்களது பொருளாதார முறை தற்போது பெரிய நெருக்கடியில் உள்ளது. மேற்கத்திய நாட்வர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டுள்ளனர்.15 ம் நூற்றாண்டில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலுள்ள நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தமது காலனிகளாக்கின. அப்படித்தான் இந்தியாவும் இங்கிலாந்தின் காலனி நாடானது. பின்னர் நமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முறைகளை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தனர். அவர்களது வாழ்க்கை மற்றும் சிந்தனை முறைகளை இங்கு திணித்தனர். அவர்களது பொருளாதார கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் உயர்ந்தது எனக்கூறி அவற்றை நாம் ஏற்குமாறு கல்வி முறைகளை அமைத்தனர். அதன் விளைவாக ஐரோப்பிய சிந்தனை முறைகளும்,கோட்பாடுகளும் உயர்ந்து என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. நமது நாட்டுக்கு பொருத்தமான முறைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. காலப்போக்கில் கல்விக் கூடங்கள் முழுவதும் மேற்கத்திய கோட்பாடுகளையும், அணுகுமுறைகளைப் பற்றி மட்டுமே பேசும் அளவிற்கு சூழ்நிலை உருவானது. உலக அரங்கில் ஐரோப்பா தனது செல்வாக்கை இழந்த போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன்பின் அமெரிக்க கோட்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை உயர்ந்தவை எனவும், அவற்றை பிற நாடுகள் அனைத்தும் பின்பற்றுவது தான் முன்னேறுவதற்கான ஒரே வழி எனவும் கருத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்விளைவாக கடந்த இரு நூற்றாண்டுகளாகவே மேற்கத்திய கோட்பாடுகளும், சிந்தனை முறைகளுமே படித்தவர்களையும், கொள்கை வகுப்பவர்களையும் ஆட்கொண்டுள்ளன. அதனால் தான் இந்தியா சுதந்திரம் பெற்ற போது மகாத்மா காந்தி போன்றவர்கள் விரும்பியவாறு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சரியான பொருளாதார அணுகுமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் முதல் 30 ஆண்டுகள் சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளின் அணுகுமுறைகளை ஒட்டிய கொள்கைகளே சரியானதாக இருக்கும் என்று நம்பினோம். பின்னர் அவை எதிர்பார்த்த பலனை தராததால் 1990 களில் அமெரிக்கா சார்ந்த சந்தை பொருளாதார முறைகளை ஒட்டிக் கொள்கைகளை அமைத்துக் கொண்டோம். இப்போது அமெரிக்க முறைகள் அவர்கள் நாட்டிலேயே பெரிய தோல்விகளை சந்தித்து வருகின்றன. மேற்கத்திய கோட்பாடுகளையும் சிந்தனை முறைகளையும் ஒட்டி நம்மைப்பற்றி நாம் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட முடிவுகள், அமைத்துக் கொண்ட வழிமுறைகள் ஆகியன நமக்குபெரும் நம்பிக்கையின்மையையும் பின்னடைவையும் கொடுத்துவந்துள்ளன. அதனால் நமது வளர்ச்சியில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மேக்ஸ் வெபர் என்ற ஜெர்மனி நிபுணரால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறவே முடியாது என்று கூறியது. இங்குள்ள மக்களின் நம்பிக்கைகள் கருத்தோட்டங்கள் மற்றும் சமூக அமைப்பு முறை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக இல்லை என்று அவர் கூறினார். மேற்கத்திய இன மக்கள் வாழும் நாடுகளில் அவர்களின் மத நம்பிக்கைகள் மூலம் தான் பொருளாதார வளர்ச்சி வேகமாக ஏற்பட முடியும் என்று கூறினார். அவருடைய கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட பொருத்தமாக இல்லை என்பது பின்னர் அங்குள்ள பிற நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டு காலம் அவரது கருத்துக்கள் இந்தியாவில் ஒரு வித தவறான தாக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் படித்தவர்களிடையே அவநம்பிக்கையை உண்டாக்கிவிட்டது. இப்படி உலகம் முழுவதும் சம்மந்தப்பட்ட பொதுவான விஷயங்களில் இருந்து குறிப்பிட்டத் துறைகளுக்குப் பொருந்தக் கூடிய விஷயங்கள் வரை மேற்கத்திய கோட்பாடுகள் மற்றும் சிந்தனை முறைகளே உலகின் பல நாடுகளிலும் பரவி பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அவை நமது நாடுகளுக்கு பொருத்தமானதா என்று கூட பார்க்காமல் பிற நாடுகள் அவற்றை காப்பியடித்து செயல்படுத்தி வருகின்றன. பல சமயங்களில் அவர்களது கோட்பாடுகள் தோன்றிய இடத்திலேயே தோல்வியுறும் போது அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான மூலக்காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதிலோ அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு மாற்று வழிகளை அங்கீகரிப்பதிலோ எந்த விதமான முயற்சிகளை மேற்கொள்ளப்படுவதில்லை.1990 களில் பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு நிதித்துறை நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. 1997 ம் ஆண்டு இந்த பரிசு நிதித்துறை பேராசிரியர்களான ராபர்ட் மெர்ட்டன், மைரன் ஸ்கோல்ஸ் என்ற இருவருக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் பங்கு சந்தை சம்மந்தமான பெரயி பொருளதார நிபுணர்களாக கருதப்பட்டு வந்தனர். உலக புகழ்பெற்ற ஹார்டுவார்டு மற்றும் ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இவர்கள் பணிபுரிந்து வந்தனர். பங்குச்சந்தைகளில் வாங்கி விற்கப்படும் "ஆப்ஷன்'களின் விலைகளை நிர்ணயிக்க "பிளேக்ஸ்கோல்ஸ்' என்றும் கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர். வெளிநாட்டு நிதிச்சந்தைகளில் பல கோடிக்கணக்கான டாலர்களில் வியாபாரம் நடப்பதற்கு அந்த கோட்பாடுகள் வெற்றிகரமான முறை என்று கருதப்பட்டது. இதற்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நோபல் பரிசு பெற்றதும், தங்கள் தியரியை பயன்படுத்தி "லாங்டேம் கேபிடல் மேனேஜ்மன்ட்' என்ற நிதி முதலீடு தொடர்பான நிறுவனத்தை மேலும் சிலருடன் சேர்ந்து துவக்கினர். வெற்றிகரமான தியரியை அளித்தவர்களின் நிறுவனம் என்பதால் பலரும் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். ஆனால் ஒரே ஆண்டில் அந்நிறுவனம் பெருத்த தோல்வியை தழுவியது. அந்நிறுவனத்தின் தோல்வியை தொடர்ந்து "பிளேக்ஸ்கோல்ஸ்' தியரி மக்களின் நம்பிக்கையை இழந்தது. ஆனாலும் உலகம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களில் இந்த தியரி இன்றும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. நிதிச்சந்தை தொடர்பான பாடங்களை படிக்கின்ற ஒவ்வொரு இந்திய மாணவனும் வெற்றிகரமான தியரி என்று இந்த தியரியை படித்துதான் பட்டம் பெறுகிறார். நம் நாட்டில் ஏழை முதல் பணக்காரர் வரை சேமிப்பது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. சேமிப்பு என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை கடமை என்று காலகாலமாக செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை அந்நாட்டு நிபுணர்களும், அரசும் மக்கள் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்கினால் தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று கூறி அந்நாட்டு மக்களை கடன் வாங்கியாவது செலவு செய்யுங்கள் என்று வற்புறுத்தினர். அதற்காக சுலபமாக கடன் கிடைக்கும் வகையில் திட்டங்களை தீட்டினர். எதிர்காலம் குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சேமிக்கிறார்கள் என்று நம்மை கேலி செய்தனர். அமெரிக்காவின் இந்த கருத்தை நம் நாட்டில் உள்ள சில நிபுணர்களும் ஏற்றுக் கொண்டு சேமிப்பது தவறு என்று கூறத்தொடங்கினர். ஆனால் கடந்த ஆண்டு தொடங்கி அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் அமெரிக்கர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. எனவே சிறிது காலம் முன்புவரை நமது பழக்கவழக்கங்களை கிண்டல் செய்த அவர்கள் இன்று நம்மிடமிருந்து அரிச்சுவடி கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்றால் மிகையில்லை.மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகள் அவர்களது குறுகிய கால அனுபவங்களையும், தனிநபர் சார்ந்த சிந்தனை முறைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை. அவை பல சமயங்களில் அவர்களுக்கே கூட பொருத்தமாக அமைவதில்லை. அப்படியிருக்கும் போது இந்தியா போன்ற தனித்தன்மைகள் நிறைந்த நாட்டுக்கு அவை அப்படியே பொருந்தாது. நமது நாட்டின் முன்னேற்றம் நமது அடித்தளங்களை ஒட்டியே அமைய முடியும். அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய கோட்பாடுகளை மீறியதாக அமைந்துள்ளது. அதற்கு நமது கலாச்சார அமைப்பு முறை, குடும்பம், நமது நாட்டின் பெண்கள், சமூக மூலதனம் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டே நமது பொருளாதாரம் வலுவானதாக உருவாகியுள்ளது.