புத்தகமதிப்புரை- வேணியின் நூலகம்


உங்களையும் என்னையும் போன்ற சாமான்யர்களின் மனத்தில் எழுகின்ற கேள்விதான். ஆழ்ந்து படித்துப் பட்டங்கள் பெற்ற பொருளாதார மேதைகளிடம் கேட்டால், “பத்தாம்பசலிஎன்று சொல்லி நம்மை ஒதுக்கி விடுவார்கள். இதே கேள்வியை ஒரு பொருளாதார மேதை தைரியமாக எழுப்பும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கேள்வி இதுதான்: பெரும்பாலான மக்களின் பசியைக் கூடப் போக்க முடியவில்லை என்றால் பொருளாதாரக் கோட்பாடுகளின் உபயோகம்தான் என்ன?

கேள்வியை எழுப்பியிருப்பவர் பேராசிரியர் ப.கனகசபாபதி. நிதித்துறையில் முனைவர். மேலாண்மை இயல் பேராசிரியர். இந்தியாவின் பொருளாதாரம், வியாபாரம் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி களத்தில் இறங்கி ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளவர். பல புத்தகங்கள் எழுதியுள்ளார். கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ள களம், “பாரதப் பொருளாதாரம்-அன்றும் இன்றும்என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகம். ரூபாய் 125 விலையில் 216 பக்கங்களில் கிழக்கு பதிப்பகம் அழகாக வெளியிட்டுள்ளது..........
http://veniyinnoolagam.blogspot.com/2011/02/blog-post_25.html

No comments: