வெற்றிக்கதைகள் தொடர் - வாசகர் கடிதம்

வெற்றிக்கதைகள் தொடர் தினமலர் நாளிதழில் 26 வாரங்கள் வெளிவந்தது. இதற்கு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. வாசகர்களிடமிருந்து தொடரைப் பாராட்டி எண்ணற்ற கடிதங்கள் வந்தன. அவற்றில் சில....
இரா.ஆறுமுகம் அருள்குமரன்,
நாகை மாவட்ட செயலாளர் ஐஎன்ஆர்எல்எப்,
மயிலாடுதுறை.
நாள்:5.4.2009
இருட்டு அறைவீட்டு சுவர்களில் மாட்டப்பட்ட ரசம் போன கண்ணாடிகளில் முகம்பார்த்து தலைவாரி பழக்கப்பட்ட நமக்கு, கம்ப்யூட்டர் டிஜிட்டல் கலர் புகைப்படமாக நம் முகத்தை நமக்கே காட்டும் முயற்சியில் பேராசிரியர் கனகசபாபதி ஈடுபட்டு வருகிறார்.நம் முகத்தை பார்க்க நமக்கே பொறாமை வந்துவிடுகிறது. பேராசிரியர் அவர்களின் நூல்கள் கிடைப்பதும், அதைப்படிக்க நேரம் கிடைப்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் மூன்றரை ரூபாயில் தினமலர் வாரந்தோறும் வெளியிடுகிறது. இதற்கு நன்றிகள்.
படிப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாக உள்ளது
"புளியம்பட்டி இல்லையில்லை பொள்ளாச்சி போய் திரும்பவும் புளியம்பட்டி' என்ற சூர்யவம்ச சினிமா வசனம் போன்ற ஊதாரித்தனமான அமெரிக்க நிர்வாக முறையை இங்கேயும் சிலர் அறிமுகம் செய்யவும், கடைப்பிடிக்கவும் தொடங்கும் காலக்கட்டத்தில் இக்கட்டுரை மிக அவசியமானது.பாரசீகர்கள் முதல் பிரிட்டீஷ் வரை வரிசை வரிசையாக வந்தவர்களிடம் எல்லாவற்றையும் பறிகொடுத்து சொந்த வீட்டிலேயே அகதியானோம். அடிமையானோம் என்பதை தெளிவாக பேராசிரியர் பட்டியலிட்டுள்ளார்.
கட்ச் காம்பே வளைகுடா பகுதியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சோழமண்டல கடற்கரையிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் வணிகம் செய்த வணிக குழுக்கள் நசுக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டன. மிச்சம் மீதி இருந்ததை வைத்துக் கொண்டு இந்த அளவிற்கு வர சென்ற தலைமுறைகள் இருந்தது மிக அதிகம்.மூன்றாம் தலைமுறைக்கும் தனத்தையும், தர்மத்தையும் சேர்த்து வைக்கும் நிதித்துறை மேலாண்மையை பேராசிரியர் அவர்கள் விளக்குவதைப் பார்க்கும் போது நம் மீதே நமக்கு பொறாமையை அதிகமாக்கின்றது.
தங்கள் உண்மையுள்ள,
.அருள்குமரன்.