12-12-2010 உரத்த சிந்தனை-வாசகர் கருத்து

*வெனிசுலா நாட்டில் இருந்து வெங்கடேஷ் ஏன் இந்திய பொருட்கள் உலக சந்தையில் சீனா போல அதிகம் இல்லை என்று கேட்டுள்ளார். சீனாவும் இந்தியாவும் வேகமாக வளருகின்றன என்றாலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சீனா உற்பத்தி துறையில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா சேவைத்துறையில் முன்னணியில் உள்ளது. கணினி மென்பொருள், வாடிக்கையளர் அழைப்பு சேவை, ஆடை அணிகலன் உணவு பொருள் உற்பத்தியில் நமது பங்களிப்பு உலகில் பெருமளவு உள்ளது....
--:சுவாமிநாதன் ,யுனைடெட் கிங்டம்

*நம் நாட்டில் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. நான் இதை மறுக்கிறேன் , அதற்கான காரணம் கீழ்கண்ட கேள்விகள் நாட்டில் கரூப்பு பணம் மிகையாக உள்ளது , இது நல்ல பொருளாதாரத்துக்கு அறிகுறியா ? லஞ்சமாக சேர்த்த பணம் வெளி நாடுகளில் இருந்து உள் நாட்டுக்கு எளிதான முறையில் கொண்டு வரும் வகையில் சட்டங்கள் மாற்றபடுகின்றன IPL cricket ஊழல் என்னவாயிற்று ? இப்போது எல்லோரும் அதை மறந்து விட்டனரா ? வெளிநாட்டு பணம் உள் நாட்டில் முதலீடு செய்யும் வகையில் real estate துறை முறைபடுதபடாமல் உள்ளது ...இதனால் கருப்பு பணம் முதலீடு செய்யும் வங்கிகளாக நிலங்களும் வீடுகளும் மாறி விட்டன ..இவற்றின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு குறைந்துவிட்டது....இப்போது மக்கள் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளபடிருக்கிரர்கள்..இன்னும் இரண்டு வருடத்துக்குள் நம் நாடு மேற்கத்திய நாடுகளை போல் நிலைக்கு தள்ளபடுவதற்கான எல்லா அறிகுரிகளும் தெரிகின்றன... நாங்கள் குடும்பங்கள் பற்றி கூறியுள்ள கருத்துகள் உண்மை ...அனால் காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன்.....damage has been done..everybody i talk to now a days is heavily invested in gold or real estate..the ponzi scheme is leading to people leaving normal work life and becoming real estate agents... that's a sign of eleventh hour in drama thats about to end..ராஜா - கோவை
*Dear Venkat, I do have the same concern like you. The reason behind this is China's Economic Policies, for example Economies of Scale (Mass Production) and their Polical Policies. These two are two (strong) extremes in China. Here, India has too much of Democratic and Economic Policies are not sound enough like China. China has vision to keep their product everywhere in the world and wish to dominate the world. India does not have this intention. Almost everyone knows that China does not produce 'good quality' products, but people have 'no choice'. We have to buy. One more reason, Brand name. India is still not 'recognised' as a 'good brand' in the Global Market though we produce quality than China. Because we do not have popularity like China. Our Economist & PM says that we don't want to be no.1 and we will try our best to be 'self-sufficient'. Just being sef-sufficient will not encourage Export. Other reasons, bureacratic policies in India. Setting up a company is not a easy job in India. We have to cut off this Red Tapism. When I was in Singapore, I tried to avoid buying China made Fan. So I bought fans (Usha Brand) from India. That fan also made in China. I was shocked. We need to produce as much as possible. We need to update our Economic, Foreign policies to compete with Global market. I am sure that China and India will dominate the world in this century. USA, UK, France will be out of scene in this century....Balaji - tashkent

*70% of the indian produce is consumed in india itself.where as 70% of china's produce gets exported.that is why we dont see much of "made in india" any where. a very good article..prasanna - சிகாகோ,

*It is true that we not able to see any "india made" in any part of the world as like china. Some time i can see only in the indian food varities at the market. I travelled a lot and i am presently in venezuela, working along with europeans and americans. They usually ask me why this situation, as both india and china are big markets, but not able to see "india made". Why? Did any body have an answer? Venkat...Venkat - carupano,வெனிசு

**மேற்கூறிய அனைத்து தகவல்களும் நிதர்சனமான உண்மை...., உதாரணம் எங்க தாத்தா பாட்டி.. குடும்பத்தையும், தங்கள் உறவினர்களையும், அதன் மூலம் தங்கள் கிராமத்தையும் நன்றாக பராமரித்து வந்தனர்...., அவ்வாறு தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் பிபற்றுவதில்லை..., அதற்க்கு நேர் மாறாக தங்கள் பையில் எவ்வளவு தேறும் என்றே உள்ளனர்...., முன்னோர்கள் சொல்லிய நல்ல வழிப்பாதையை பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக உயர்வடையும்......கணேஷ் - மாலத்தீவுகள்
*இது ஒரு நல்ல கட்டுரை. தெளிவாக எழுதப்பட்டுள்ளது ..நமது மக்கள் தொகைக்கு சேமிப்பே சரியானது ..அமெரிக்காவை போல் வாழ நினைத்தால் நமக்கு பிரச்சினை தான்--தாஸ் - லாஸ்ஏஞ்செலஸ்
-
*மிகவும் சிறந்த கட்டுரை.ரா. வே - திருப்பூர்....

Nobel Prize winner does not mean he has understood everything. Indians are very good at patting themselves at every opportunity. When somebody in the world takes our methods to task we become angry.Our economy is very weak in foundation. Technically we are at the lowest level. I have not seen any "india made" item in any US store but see 90% of the items in stores being made by China. Professors are good for lecturing only, since they have become so for non-performance. We should not live in dreams. If Kanakasabapathy can bag a Nobel Prize, then let him talk. Ravindran-கரண்ட்ப்ரைரிt

உலகிற்கு வழிகாட்டுவோம்


கடந்த முப்பது வருடத்திய பெரும்பாலான மேற்கத்திய கோட்பாடுகள், மிகவும் உபயோகமில்லாதவையாகவோ அல்லது பெரும் தீங்கு விளைவிப்பனவாகவோ அமைந்து விட்டன!' - இதைச் சொல்லியுள்ளது யார் தெரியுமா? பொருளாதாரத் துறையில், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரபலமான பேராசிரியருமான பால் கிரக்மேன்.
நவீன பொருளாதாரத்தில், உலக அளவில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவரே இப்படிச் சொல்லியுள்ளார் என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், உலகப் பொருளாதார அரங்கில், ஐரோப்பிய நாடுகள் முக்கியத்துவம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அவர்களது வழிமுறைகளும், கோட்பாடுகளுமே சரியானவை என, உலகம் முழுவதும் போதிக்கப்பட்டன. காலனி ஆதிக்கமும், ஆங்கிலேயக் கல்வி முறையும், அவர்களின் வேலையை எளிதாக்கின. பின், இருபதாம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் செல்வாக்கு குறைந்து, அமெரிக்கா உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் பெறத் துவங்கின. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும், ஆலோசனைகள் என்ற பெயரிலும், அவர்களது சிந்தனைகள் மற்றும் வழிமுறைகள், பிற நாடுகளில் புகுத்தப்பட்டன.

கடந்த 1980ம் ஆண்டு இறுதியில், சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்வுகளால், அந்நாடு சிதறுண்டு போன பின், சந்தைப் பொருளாதார முறைதான் உலகுக்கு ஒரே வழியென, அந்தச் சிந்தனை சார்ந்த மேற்கத்திய நிபுணர்கள் மார்தட்டிக் கொண்டனர். அவர்களது பல்கலைக்கழகங்கள், சந்தைப் பொருளாதாரம் குறித்த பல புதிய கோட்பாடுகளை உருவாக்கின. அவைகளில் பலவற்றுக்கு நோபல் பரிசுகளும், உலகளவில் அங்கீகாரங்களும், பாடப்புத்தகங்களில் முக்கிய இடங்களும் கிடைத்தன. உலக நாடுகள் எதுவாயினும் அவற்றின் முன்னேற்றத்துக்கு, மேற்கத்திய சந்தை பொருளாதாரக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பது ஒன்றுதான் வழியென உறுதியாகச் சொல்லப்பட்டது. எனவே, உலகிலுள்ள பிற நாடுகள், தங்களின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மேற்கத்திய கோட்பாடுகளையொட்டி மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டன.

மேற்கத்திய கோட்பாடுகளை அதிகமாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, உலகின் பல நாடுகள், கடந்த காலங்களிலேயே பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, 1997 - 98ல் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2002ல், அர்ஜென்டினாவில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறு உலகின் வெவ்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டுக் கொண்டு வந்த போதும், தங்களது கோட்பாடுகளே சரியென, மேற்கத்திய நாடுகள் மக்களை நம்பவைத்து வந்தன. ஆனால், 2008ம் ஆண்டிற்குப் பின் பகுதிகளில் அமெரிக்காவில் தொடங்கிய நிதி நெருக்கடி, வெகு சீக்கிரமே உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறியது. அது மேற்கத்திய நாடுகளை அதிகமாகப் பாதித்தது. அதன் விளைவாக, உலகளவில் மிகப் பெரிதாக விளங்கி வந்த பல நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த கம்பெனிகள், மிகுந்த பாதிப்புக்குள்ளாயின.

பெரிய பெரிய கம்பெனிகள் திவாலாவதைத் தடுக்கவும், வேலை இழந்தவர்களுக்கு உதவிகள் செய்யவும், அரசாங்கங்கள் அதிகளவு தொகையை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. ஆயிரக்கணக்கான மக்கள், வேலைகளைப் பறிகொடுத்து, வீடுகளை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தங்களின் பொருளாதாரக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மட்டுமே சரியானவை எனவும், அவற்றின் மூலமே உலகில் முன்னேற்றம் ஏற்பட முடியுமெனவும் உறுதியாகச் சொல்லி வந்த பல மேற்கத்திய நாடுகளுக்கு, இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு பேரிடியாக அமைந்து விட்டது. உலகின் பிற பகுதிகளில், தங்கள் கொள்கைகள் தோல்வியைத் தழுவிய போது, பலவித காரணங்களைக் கூறி வந்த அவர்கள், தங்கள் மண்ணிலேயே சிக்கல்களைச் சந்தித்து வரும்போது, சரியான பதிலைக் கூற முடியாமல் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள், அவர்களது பொருளாதார சிந்தனைகள் குறித்த பல உண்மைகளை உலகிற்கு உணர்த்தியுள்ளன. ஆலன் கிரீன்ஸ்பேன் என்பவர், அமெரிக்க மத்திய வங்கியின் கவர்னராக பதினாறு வருடங்களுக்கு மேல் இருந்து ஓய்வு பெற்றவர். உலகின் பெரிய பொருளாதார நிர்வாகிகளில் ஒருவராக கருதப்பட்டு, அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றவர். அவருடைய பதவிக் காலத்தில் தான், வங்கிகளின் வட்டி விகிதங்கள் மிகவும் குறைக்கப்பட்டன. "நாட்டு மக்கள் சேமிக்க வேண்டிய அவசியமேயில்லை' என, அவர் பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். அதனால், அங்கு ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு, அவரது அணுகுமுறைகளும் ஒரு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே, நெருக்கடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட செனட் கமிட்டி முன்னால் அழைக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர், பொருளாதார சிந்தனை குறித்த தனது கருத்துக்களில் தவறுகள் ஏற்பட்டு விட்டன எனவும், சந்தைப் பொருளாதார முறைகளில் குறைபாடுகள் உள்ளன எனவும், முதன்முறையாக தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. நடுத்தர மற்றும் சிறு வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருகின்றன. 2010ம் வருடத்தில் மட்டும், இதுவரை சராசரியாக ஒரு மாதத்திற்கு பத்துக்கும் மேல் என்ற அளவில் திவாலாகி உள்ளன. நிறுவனங்கள் மூடப்படுவதும் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களில், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடன் நெருக்கடியை சந்தித்தன. தற்போது, அயர்லாந்து நாட்டுக்கு பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்தும், பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. நவீன பொருளாதார முறை, மக்களை, தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்யும் தனி நபர்களாக பாவிக்கிறது. இயற்கையான உறவுகளுக்கும், சமூகங்களுக்கும் அதில் முக்கியத்துவம் இல்லை. அவர்களது கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளெல்லாமே, தனி நபர் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளன. அதன் விளைவாக, குடும்பங்களும், சமூகங்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. நுகர்வு கலாசாரம் பெருகி, சேமிப்புகள் குறைந்தன. சந்தைப் பொருளாதாரம் ஆசைகளையும், தேவைகளையும் மிகைப்படுத்தியது. அதனால், கடன் வாங்கி செலவு செய்யுமாறு மக்கள் தூண்டப்பட்டனர். அதிகப்படியான மக்கள் சேமிப்பின்றி கடன் வாங்கியதால், உள்நாட்டு சேமிப்பு மிகவும் கீழே சென்றது. ஆனால், செலவுகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றன. எனவே, நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் உருவாயின.

பால் சாமுவேல்சன் என்பவர், புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார பேராசிரியராக விளங்கியவர்; நோபல் பரிசு பெற்றவர். அவரது பொருளாதார புத்தகம், பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்டு, உலக அளவில் சாதனை படைத்தது. நிதிக் கோட்பாடுகளில், "டெரிவேட்டிவ்'களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். அவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தன் மறைவுக்கு முன்பு, 2008ல், அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்து, தன் பங்களிப்புகள் மூலம், தானும் ஒரு விதத்தில் நெருக்கடிக்கு பொறுப்பாகி விட்டதாக கூறினார். எனவே, மேற்கத்திய பொருளாதார நெருக்கடி, அவர்களது நவீன கோட்பாடுகளின் தோல்வியையே காட்டுகிறது. நெருக்கடி முடிந்து இரண்டு வருடம் கழிந்த பின்னரும், நிலையைச் சரி செய்து, உறுதியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க இயலாத அவர்களின் நிலைமை, மேற்கண்ட தோல்வியை உறுதி செய்கிறது.

உலக அளவில், அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு பெற்ற நிபுணர்களைப் பெற்றிருந்தும், அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வலுவிழந்து, நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கே வழி தெரியாமல் சிரமப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களது சித்தாந்தங்களின் வறட்சியே. இந்த சமயத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நமது பொருளாதாரத்தின் அடிப்படை தன்மையை பற்றியது. எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நமது பொருளாதாரம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. அதன் மூலம் உலக அளவில் ஒரு பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் நமது கலாசாரமும், அது சார்ந்த தன்மைகளும் தான். நமது கலாசாரம், பண்பாடு மட்டுமல்ல, நமது பொருளாதார கொள்கைகளும் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டி தான். email: pkspathi@gmail.com

ப.கனகசபாபதி, பேராசிரியர்

PROSPEROUS INDIA 7

                       

Contributions of the highest order made India remain powerful

      

Ancient India was not contented with devising and practising superior economic and socialsystems for achieving material prosperity and secured life for her citizens. Continuous efforts were made by the society to explore different fields, which resulted in constant improvements based on additional inputs and fresh knowledge. As a result the society was driven towards perfection in different walks of life. On the one hand the newer ideas led to the development of innovations and new practices that resulted in more efficient methods of functioning. On the other hand, new insights and thought processes led to contributions of highest intellectual output. Many such practices and contributions were truly pioneering and far ahead of their times.

For one who is not adequately aware of the background and greatness of the country, it will be hard to believe that so many developments had been taking place over many centuries in diverse areas of human activity. It is accepted that the Indus-Saraswathy Civilization is one of the most planned urban settlements of the earliest periods in the world. It is surprising to know that there were private bathrooms in many houses even during those periods. There were also large scale sanitary sewerage and water systems, along with common bath and storage facilities. It only shows the advanced nature of urban life that existed about five thousand years ago. Moreover the inhabitants of the civilization had knowledge of several fields. 

The contemporary Indian gets a feeling that ancient India added value to all the activities with which it was connected. Agriculture was the major economic activity in the earlier days. We could see the use of sophisticated techniques and advanced management systems when we study the agricultural history of India. Experts note that irrigation was developed as early as around 4500 BCE. Artificial reservoirs dating back to 3000 BCE were in existence at Girnar. It is learnt that there were the early canal irrigation systems from around 2800 BCE. All these developments led to the increased agricultural output resulting in the economic prosperity and overall well being of the people. 

When the modern minds look at the India of the earlier years, what surprises us- apart from the economic prosperity and the social systems- , is the list of contributions and achievements in intellectual spheres. All over the world we study how the great empires concentrated on wealth, power and enjoyment, though in the process some of them have also made a few contributions. But India’s output, in different spheres of life , remains extraordinary by any standards in the history of mankind. 

Five thousand years ago, India could explain the nature and principles of the soul, primal matter and its creation. Acharya Kapil, born around 3000 BCE and founded the Sankhya school of thought in the ancient Indian philosophy, was a pioneer in this field. He made extra sensory observations and revelations on the secrets of creation. His outstanding contributions in the field of cosmic studies have made the world recognize him as the father of cosmology. Indians were the earliest to specialize in sophisticated fields such as shipping and aviation involving higher technologies. Acharya Bharadwaj, who lived about 2800 years ago, had in his work Yantra Sarvasa made outstanding discoveries in space science. He explained different techniques to make flying machines invisible to escape from the eyes of the others, to listen to conversations taking place in another plane and to see what was happening in other planes.

In the medical field, India developed advanced techniques in highly specialized areas such as plastic surgery and anesthesia, and Indians were the pioneers in amputation, caesarian and cranial surgeries. Shusrut Samhita of Shusruta, who lived around 600 BCE, is the first ever work describing the surgical procedures and is considered the encyclopedia of surgery. He had explained the details of 300 types of operations and described a number of stitching methods. He had used 125 surgical instruments for operations and performed advanced surgeries including the restoration of damaged noses. A giant in the field of medical science, he is respected as the father of plastic surgery. Indians realized the importance of diet and activities for the mind and body of the individual and the relationship between spirituality and physical health in the earlier days. Charak (600 BCE) explained the concepts relating to human anatomy, embryology, pharmacology and diseases such as diabetes and tuberculosis. He described the medicinal qualities of one lakh herbal plants. His prescription of the ethical charter for the medical practitioners was much before the Hippocratic Oath. 

India understood and explained the principles relating to atoms and molecules paving way for the development of the atomic theory. Western historians acknowledge that Kanad (600 BCE) and other Indian scholars as the global masters in this field. One can go on continuously mentioning about the intellectual contributions of ancient India, as there are too numerous and encompass several fields. But what is important is that these contributions have helped people living in parts of the world enormously to further their knowledge and understanding relating different fields of activities. These contributions have also helped the world to move forward and make progress at a faster speed in different disciplines. Speaking of just one aspect India’s contribution to mathematics, the noted scientist Einstein mentioned: “We owe a lot to Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made”. There are many more contributions even in the field of mathematics. 

Of all the contributions of India, several thinkers and scholars all over the world proclaim that the thoughts and inputs relating to life, its purpose, approach towards life and humanity as the most important ones. Nowhere in the world has the human mind and life so thoroughly discussed and analyzed in detail as in India of the ancient periods. Beginning from the earliest texts of India namely the Vedas, many of the monumental works such as the Upanishads and the Bhagawat Geetha concentrate on the meaning and purpose of life and the various issues connected with it. These thoughts have made Indians unique in their thinking and life in India far superior than the rest of the world. 

The intellectual achievements of India had enabled the country to emerge and remain as a powerful nation in two ways. One was to make advancements in different fields such as mathematics, medicine, science, technology, architecture which in turn helped the country to grow further and richer. The other was to make citizens more matured and better human beings, families and societies more vibrant and peaceful. As a result India grew and remained a powerful nation – in a state of prosperity and inner peace - with continuous efforts towards perfection in different spheres of life. 

( Published in Yuva Bharati – Voice of Youth, Vivekananda Kendra, Chennai, December 2010)