Rebuilding India 9

Nurture Self - employment Sector

A unique feature of the Indian economy is the self-employment sector. It plays a very significant role, providing livelihood to larger sections of the society in different parts of the country. Indians by nature prefer self-employment, as their traditions encourage it above all other forms.

Self-employment provides the necessary freedom and opportunities to lead independent lives. Besides, there are ample scope for people with original ideas to take up new initiatives. It is an ideal system as both the capitalist and socialist models have serious limitations.

While the non-corporate activities occupies the largest space in the Indian economy, the self–employment sector has a higher share in it. It has very high presence with shares of about three-fourth or more in   the fastest growing service areas such as trade, transports, construction, hotels and restaurants. Besides many service providers such as doctors, lawyers and a variety of others belong to this category.

Details show that the largest number of work force in the country is involved in this sector. Table 1 presents figures relating to the distribution of workforce by the categories of employment from 1983 to 1999-2000 based on the different rounds of data of the National Sample Survey Organisation.

Table 1 Distribution of workforce by category of employment

Year
Self-employment
Regular Salaried Employment
Wage Employment
1983
57.4
13.9
28.7
1987-88
56.0
14.4
29.6
1993-94
54.8
13.2
32.0
1999-00
52.9
13.9
33.2

The figures reveal that the self-employment sector has continued to provide employment for more than half of the work force. At the same time it is relevant to note that the employment opportunities have been slowly declining.

People engaged in self-employment activities remain higher in the country. Table 2 presents the number of persons in self-employment and the labour market (per 1000 distribution of population by household type) in rural areas between 1993-94 and 2009-10.

Table 2
Self-employment and Labour per 1000 distribution of population by household type- Rural

                                                 
1993-94
1999-2000
2004-05
2009-10
Self- employment
Agriculture
424
371
398
355
Non- agriculture
131
139
167
164
Total
554
509
565
519
Labour
Agricultural labour
275
301
241
238
Other labour
75
76
106
148
Rural labour
350
376
346
387
Source: National Statistical Organisation, Govt. of India, 2011

The figures show that self-employment sector was accommodating a very high proportion of the population (90.4 per cent) in the rural areas during 1993-94.  Out of every 1000 persons, 554 (55.4 percent) were engaged in self-employment activities. Besides, the sector provided employment to 35 per cent of population as labourers.

Agriculture accounted for more than three fourth of the self-employed population. Besides, it provided opportunities for nearly 80 percent of the labour force. As a result more than 77 percent of the rural population was   dependent on agriculture during 1993-94. At the same time, 13.1 percent of people were engaged in on non-agricultural self-employment activities. About 21 percent of the rural population was depending on non-agricultural activities for their livelihood.

It is important to note that after sixteen years, during 2009-10, the percentage of self-employed population in rural areas had come down to 51.9 per cent, showing a decline of 3. 5 percent. It is due to the steep decline in agriculture, from 42.4 to 35.5 percent. Self-employment in non-agricultural activities had increased by more than three percent during the same period, indicating that about half of the people who left agriculture had shifted to other activities in their own areas.

The percentage of rural labour was 38.7 per cent of the population during 2009-10, showing that it had increased by nearly four percent during sixteen years. One important reason for this is the decline of agriculture leading to huge loss of employment. Meanwhile, the category of other labour increased almost by hundred percent during the above period.

Table 3 presents the number of persons (per 1000 distribution of population by household type) in the self-employed, regular wage/salaried, casual labour and other categories in urban areas from 1993-94 to 2009-10.

Table 3 Self-employment per 1000 distribution of population by household type- Urban


1993-94
1999-2000
2004-05
2009-10
Self-employed
388
393
433
406
Regular Wage/ Salaried
428
402
396
385
Casual Labour 
129
141
118
142
Others
55
63
52
66
Source: National Statistical Organisation, Govt. of India, 2011

The above figures show that 38.8 percent of the population in urban areas was engaged in self-employment activities during 1993-94. A higher proportion of people (42.8 percent) belonged to the regular wage/ salaried classes, while about 13 per cent was identified as   casual labour.

The figures for 2009-10 reveal that over a period of sixteen years, the share of the self-employed population in urban areas had increased by about two percent. At the same time, the proportion of the regular wage/salaried classes had declined by more than four percent, while the percentage of causal labour had increased.

Self-employment remains the major activity of the households in different parts of the country.  Its shares in the rural areas remained   higher with 66 per cent in Assam, 65 per cent in Rajasthan and 61 per cent in Uttar Pradesh. The percentage of the self-employed households is higher in the urban areas in some of the major states of the country. The shares were 50 per cent in Bihar, 44 per cent in Uttar Pradesh and 41 per cent in Rajasthan. It is important to note that the self-employment activities remain critical for the major states of the country.

The figures between 1993-94 and 2009-10 reveal that the proportion of population depending on self-employment in the country had been coming down. The decline is more in the rural areas, due to the problems in the agricultural sector. As a result, the proportion of people belonging to the rural labour and urban casual labour had increased. At the same time the share in the wage/salaried segment had decreased leading to loss of secured jobs.

The above developments reveal that the failure of agriculture in rural areas have been pushing more people out of it. As a result, the other related self-employment activities in the rural areas get affected.  It has led to an increasing number of people joining the casual labour market, both in the rural and urban areas.

The self-employed sector is a self-made one that does not depend on the governments. Moreover this sector is the breeding ground for the many of the bigger enterprises in future. The major business and industrial centres of the country today were once the initiatives of a few entrepreneurs from this category. This sector has played a crucial role in laying the foundation for the growth of Indian economy after independence. Besides, the economic development of different regions over the years has been largely driven by the self- employed sections.

In spite of its enormous significance, this sector has been facing problems over the years. Their difficulties got aggravated during the recent years. Further weakening of this sector would affect the sustainability of our economic system. It is time that we took immediate steps to nurture them, as they remain the strong foundation of the Indian economy.  

Reference:

National Sample Survey Organization Reports, Govt. of India
National Statistical Organization, Government of India

( Yuva Bharathi, Vol.42, No.2, Sept.2014)






உலக வர்த்தக அமைப்பும் உறுதி மிக்க இந்தியாவும்



உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டது முதற்கொண்டு அதில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகள் பல சமயங்களிலும் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்பட்டு வருவதாகக்  குற்றச்சாட்டுகள் உள்ளன. 

2001 ஆம் வருடம் அரேபிய நாடான கட்டாரிலுள்ள தோஹாவில் நான்காவது அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நடைபெற்றது. அப்போது  உலக வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தை என்னும் முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது.

ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய   அந்தப் பேச்சு வார்த்தை மூலம் உறுப்பு நாடுகளுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க  முடியவில்லை. அதனால் 2003 மற்றும் 2008 ஆவது வருடங்களில் அந்தப் பேச்சுகள்  பெரும் தோல்வியில் முடிந்து உலக வர்த்தக அமைப்பையே கேள்விக் குறியாக்கின.

அதன் பின்னர் உலக வர்த்தக அமைப்பு தோல்வியில் முடிந்து விடக்கூடாதென்ற எண்ணத்தில் எப்படியாவது பேச்சு வார்த்தைகளைத் துவக்கி விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  அதற்காக எல்லாப் பிரச்னைகளையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளாமல், குறிப்பிட்ட சில விசயங்களில் இருந்து மட்டும் ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து 2013 ஆம் வருடம் இந்தோனேசிய நாட்டிலுள்ள  பாலித் தீவில்  ஒன்பதாவது அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெற்றது. அதில் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க உறுப்பு நாடுகளில் சுங்க   நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் தேவையான     கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துவது பற்றிய விசயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.  

சர்வதேச வர்த்தகத்தைச் சுலபமாக்குவதற்கு உறுப்பு நாடுகளின்  சுங்க விதிமுறைகள் முறைப்படுத்தப் பட வேண்டும் என்பதும் அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒரு முக்கிய  கோரிக்கையாகும். ஏனெனில் சுங்க நடைமுறைகள் சிரமமானதாகவும், வர்த்தகத்துக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறைந்தும்,  துறைமுகங்கள் நவீன மயமாக்கப்படாமலும் பல வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ளது.  

எனவே வளரும் நாடுகள்  வர்த்தகத்தைச் சுலபமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், உலக வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர்கள் ( ஏறத்தாழ அறுபது இலட்சம் கோடி ரூபாய்) அளவு அதிகரிக்கும் என்கின்ற கணக்கை மேற்குலக  நாடுகள்  முன் வைக்கின்றன. மேலும் பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும்  அதிகரிக்கும் எனவும் கூறுகின்றன.  

சர்வதேச வர்த்தகத்தை  அதிகரிக்கும் வகையில் வளரும் நாடுகள் தேவையான நடவடிக்கைகளைத் தங்கள் நாடுகளில் எடுத்த பின்னர், அதனால் உண்டாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பது பணக்கார நாடுகளின் எண்ணமாக  உள்ளது.  அதே சமயம் வளரும் மற்றும் ஏழை நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்  மற்றும் நவீன மயமாக்கல் ஆகியவற்றுக்கு  முதலீடுகள் போட நிதி வசதி தேவைப்படுகிறது. அதிலும்  ஏழை நாடுகளுக்குத் தமது மக்களின்   அடிப்படைத் தேவைகளைக்  பூர்த்தி செய்வது தான்  மிகவும்  முக்கியமானதாக உள்ளது.

பாலி மாநாட்டில் பேச்சுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இன்னொரு முக்கிய விசயம் அரசுகள் தம்மிடம் வைத்துக் கொள்ளும் உணவுக் கையிருப்பு, விவசாய உற்பத்திகளுக்கு நிர்ணயிக்கப்படும்     விலை,  விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள்  மற்றும் பொது விநியோகத் திட்டம்  சம்பந்தமானது. அதன்படி அரசாங்கங்களின் உணவுப் பொருட்கள் கையிருப்பு மற்றும் விவசாயத்துக்கான  சலுகைகள்  சம்பந்தப்பட்ட நாடுகளின் மொத்த விவசாய உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. 

அதுவும் கூட 1986-88 இல் நிலவிய   விலை நிலவரப்படியே  எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியா அப்போதே எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் இந்தியா பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழும் நாடு. அதில் பெரும்பாலானவர்கள் சிறிய விவசாயிகள். அவர்கள் பலரும் மிகவும் சிரமப்பட்டு வேறு வழியில்லாமல் விவசாயம் செய்து வருபவர்கள். அவர்களின் விளை பொருள்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை மற்றும் சலுகைகளில் கைவைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி விடும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள பல கோடி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் அடிப்படைக் கடமை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில்  பணக்கார நாடுகள் அந்த விசயத்தில் தலையிடுவதை ஏற்க  முடியாது.

எனவே அது   குறித்து இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததும், 2017 ஆம் ஆண்டு வரை மேலும் ஒரு நான்கு வருட காலத்துக்கு நடைமுறையில் உள்ள நிலை குறித்துக் கேள்விகள் எதுவும் எழுப்பப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டது. மேலும்  வர்த்தகத்தை எளிமைப் படுத்துதல் மற்றும் விவசாயம், பொது விநியோகம் சம்பந்தப்பட்ட  இரண்டு விசயங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று  வளர்ந்த நாடுகள் கேட்டுக் கொண்டன.  அதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது.

மேற்கண்ட விசயங்கள் குறித்து முடிவுகளை உறுதி செய்து அறிவிக்க உலக வர்த்தக அமைப்பு சென்ற ஜூலை மாதக் கடைசியில்  ஜெனிவாவில் பொதுக் குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. உறுப்பு நாடுகள் தங்களின் இறுதியான நிலைப்பாடுகளைத்  தெரிவிக்க ஜூலை 31 கடைசி  நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.2014 மே மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. புதிய அரசு வந்ததுமே பாலி மாநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் அணுகுமுறை எப்படி இருக்குமென ஊகங்கள் எழுந்தன. உலக வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கருத்தை மையமாக வைத்து  எப்படியும் இந்தியாவை சம்மதிக்க வைத்து விட வேண்டுமென அமெரிக்கா போன்ற  நாடுகள்  விரும்பின.

ஆனால் முடிவு வேறு விதமாக அமைந்தது. உணவுப் பொருள் கையிருப்பு மற்றும் பொதுவிநியோகம் சம்பந்தமான விசயங்களில் வளர்ந்த  நாடுகளின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என  இந்திய அரசு அறிவித்தது. அதே சமயம் சர்வதேச வணிகம் பெருக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் தெளிவு படுத்தியது.  

மேலும் மேற்கண்ட இரண்டு விசயங்கள் குறித்தும்  உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகவே முடிவு செய்ய வேண்டுமென இந்தியா கூறியது. ஏனெனில் வர்த்தகம் சம்பந்தமான விசயம் முடிவுக்கு வந்து விட்டால்,  விவசாயம் சம்பந்தமான பிரச்னையை முடிக்க  மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டுமா  என்பது சந்தேகமே.

எனவே மத்திய அரசின் மேற்கண்ட முடிவின் மூலம் நமது  சாமானிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் கையிருப்பு மற்றும் பொது விநியோகம் ஆகியவை  பற்றி நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு சாதாரண நிலையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயும்  அதிக எண்ணிக்கையில் மக்கள்  வாழ்ந்து கொண்டுள்ளனர். அப்படியிருக்கும் போது அவற்றுக்கான வரையறை மற்றும் செலவுகளைப் பிற  நாடுகள் குறைக்கச் சொல்லிக் கேட்பதை நாம் ஏற்க முடியாது.

அதே போல விவசாயம் சம்பந்தமான சலுகைகளைப் பற்றியும்  நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.  அமெரிக்க ஐரோப்பிய  நாடுகள் அவர்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் பெருமளவு மானியங்களை அளித்து வருகின்றன. இத்தனைக்கும் அங்கு விவசாயத்தைச் சார்ந்து வாழுபவர்கள்  மிகவும் குறைவு. அமெரிக்காவிலுள்ள  விவசாயிகளின்  எண்ணிக்கை  ஏறத்தாழ இருபது இலட்சம் பேர்கள் மட்டுமே. ஆனால் அவர்களுக்கு சலுகைகளாக 120 பில்லியன் டாலர்களை ( ஏழு இலட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்கள்) அமெரிக்க அரசு வழங்குகிறது.

அதே சமயம் நமது நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஐம்பது விழுக்காடு பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நமது அரசு கொடுக்கும் சலுகைகள், அமெரிக்க அரசு கொடுப்பதில் பத்தில் ஒரு பாகம் மட்டுமே. அந்த நாடுகள் தங்களின் விவசாயத்தைக் காப்பாற்றப் பலவிதமான உதவிகளையும் செய்கின்றன.  அதே சமயம் இந்தியாவில்  பெரும்பாலான மக்கள் நம்பி வாழக்கூடிய அந்தத் தொழிலுக்குக் கொடுக்கப்பட்டு வரும்    குறைந்த அளவு சலுகைகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டுமென அந்த நாடுகள்  கோருகின்றன. 

மேலும் பாலி மாநாட்டில் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி சம்பந்தமான மதிப்பை சுமார் இருபது வருடத்துக்கு முந்தைய நிலவரப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1980 களிலிருந்து 2014 வரை விலைவாசி வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே பழைய மதிப்புகளின் அடிப்படையில் உணவுக் கையிருப்புகள், பொது விநியோகம் மற்றும் சலுகைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று சொல்வது மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிப்பதாகும்.  

பாலி மாநாட்டில் முந்தைய அரசு போதுமான முனைப்பினைக் காட்டவில்லை. எனவே இந்திய அரசின் தற்போதைய  நிலைப்பாடு அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியது. மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்களுக்குச் சற்றும் வளைந்து கொடுக்காமல், உலக அரங்கில் தேசத்தின் நலனை மட்டுமே முதன்மையாக வைத்து உறுதியாகச் செயல்பட்டுள்ள மத்திய அரசின் நடவடிக்கைகள்   மிகவும் பாராட்டுதலுக்குரியவை.  

( தினமணி, ஆக.19,2014)

Indian Models of Economy, Business and Management - Book Review


International Journal of Global Business and Competitiveness, 2012, Vol. 7, No 1, pp 52-53

Review of Book : Indian Models of Economy, Business and Management, Second Edition
Author: Dr. P. Kanagasabapathi
Publisher: PHI Learning Private Limited
ISBN: 978-81-203-3888-3
Pages: 318

Book reviewed by Ashish Sharda

The book ‘Indian Models of Economy, Business and Management’ in a stepwise manner deals with various key learning’s to be taken by modern day economists and managers to think beyond their compliance with unsustainable paradigm of modern day economy and business in general. Starting with a context of Emerging India, the book helps you traverse broadly through the world economy since 0 CE (around 2000 years back) to till date.

The initial chapters of book cite certain facts, which provide an insight to the world economy depicting position of India as a super power for centuries. A stepwise description about impacts of colonialism in dethroning super powers as India and China and emergence of new super powers as USA and UK certainly proves the deep research undertaken over years by the author. The distinguishing factor over here is the high prevalence of citations and sources by the author to support the theories written therein. The story of India being ruined by colonizers to not only bankrupt its economy but also devastate its education, culture, professional life cycle is enriched with enough statistical facts to provide a really deep insight about the extent of harm done to the country as a whole.

The key features relating to the strong foundations of Indian businesses for centuries have been distinctly highlighted. Inclusion of learning’s from Indian scriptures, societal practices and business communities spread over different regions are certainly important points to ponder.

• The later portion of the book deals with global models of economy, their pros and cons. It also critically analyzes each of these models to discuss the reasons of their subsequent failures in shorter time periods.
• Certain tables and text encompassing comparison of economic models and practices of Global and Indian both in ancient and current times provoke the reader to think about the uniqueness of Indian culture as a vital ingredient to sustainable business practices.
• The current day Indian economy has been analyzed with a perspective of entrepreneurship. There are several instances wherein author hints about the unique edge Indian practices could give to the business world so as to restore the respectable position in times to come.
• In the pre end phase, author describes how the desire of imitating western practices are not only putting in risk to our culture but are also weakening the highly sustainable business practices which are the very basis of our global standing and success.
• Lastly, author presents a picture of recent emerging India. Facts certainly are eye opener to those who are highly biased regarding progress of modern India.
• Author concludes highlighting India does descend from a superpower to a weaker nation and then is now striving strongly to make out its standing unparalleled again in the modern era. He stresses the need to introspect our own culture in order to ascertain the factors of competitiveness highly tacit to win the race of achieving excellence.

Analyzing the Book

Strengths

• It is highly inevitable to appreciate the amount of research & hard work being done to compile and correlate the facts and statistics relating to ancient Indian business and culture.
• The comparative analysis of western and Indian models is a result of deep synthesis of varied number of studies carried out by the author.
• The tone of the book makes one think about the uniqueness Indian culture has and its potential to harness the business avenues not realized as of yet.
• The large number of references and citations provided at the end of each chapter clearly bring out the beauty of extensive research done.

Weakness

• At certain points in the book, certain facts are cited so strongly that it might make a modern day reader think that author is biased to cite strong facts about his nation. Though, all the sources are cited ones, but higher concentration of such information in certain positions may stumble in building connect of book to youth.
• There is a little lack of stress in bringing out the positives of the western models. We also need to learn that what could be the best take-away from the practices in west. An amalgamation of the best business practices from India as well as from west could be more vital in laying foundation of globally sustainable model of economy and ending up the vicious economic cycles.

Implications for International Competitiveness and Business

The book is highly relevant for professionals working on or aspiring to work on any dimension of international competitiveness and business. Several powerful sources of competitiveness are hinted at in the book that a discerning professional should be able to grasp. Considering intensifying competition from international giants in India, so many firms will need to evolve survival to strength strategies. Mounting trade deficits will intensify need to export for firms sooner than later. The book provides several clues for leaders in firms, other organizations, families and individuals.

Overall Comment: Highly Recommended

The book is an excellent read not only for business people, managers, economists, bureaucrats and politicians but also for researchers, students and other reader communities as well. It makes one realize the rich culture India possessed and gives  several key learning for the success of businesses at an individual level and for the economy of India, which is more responsible and sustainable among many countries. 

Ashish Sharda  completed his MBA from Delhi School of Management, Delhi Technological University and B.Tech from Bharati Vidyapeeth’s College of Engineering, New Delhi. He pursued certification in Enterprise Management from DMS, IIT Delhi. He served as Senior Adviser to PAN-DCE-DTU, the International Alumni Advisory Committee of Delhi Technological University and as adviser to the Entrepreneurship Cell, DTU. He pioneered the drive for improving competitiveness of Bawana Industrial Cluster, New Delhi. He has published research articles on Renewable Energy, ITES, SCM, Marketing and Competitiveness in conferences, journals and books of national and international repute. Currently, he is working as an Analyst with a leading market intelligence firm in Hyderabad, India.

உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு



உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை வழக்கமாக இந்தியா எடுப்பதில்லை. நேரு தொடங்கி வைத்த அந்த வகையான அணுகு முறை நமது தேசத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போதும் கூட ஏறத்தாழ அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.  அதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட  விசயங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  

அந்த வகையில் இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பில் தற்போது முதல் முறையாக பணக்கார  நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தொடர்ந்த முயற்சிகள் மற்றும்   வற்புறுத்தல்கள் போன்ற   உத்திகளை எல்லாம் மீறி  அரசு செயல்பட்டுள்ளது. 

மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தங்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியா செயல்படக் கூடும் என்பதால் ’உலக வர்த்தக அரங்கில் இந்தியா தனக்கான இடத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும்’  என  ஜூலை மாதத்தின்  கடைசி நாட்களில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எச்சரிப்பது போன்ற பாணியில் பேசி வைத்தார். ’இந்த முறை ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் உலக வர்த்தகம் பெரிதும் பாதிக்கும்; அதற்கான பழி இந்தியாவின் மீது விழும்’ என்று மேற்கத்திய உலகு பூச்சாண்டி காட்டியது.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக  நமது தேசத்திலுள்ள கோடிக் கணக்கான சாமானிய  மக்களின் நலன்களையும், விவசாயிகளின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவது தனது கடமை என இந்திய அரசு அறிவித்தது. அதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இனிமேல் இந்தியா செயல்படாது என்னும் உறுதியான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது சுதந்திர இந்தியாவின்  வரலாற்றில் ஒரு முக்கியமான தொடக்கமாகும்.

இதன் பின்னணி குறித்துப் பார்ப்பதற்குக் கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து வருவோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் ஆகிய அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில்,  வர்த்தகத்துக்கான ஒரு சர்வதேச அமைப்பையும் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.  அதன் பின்னர் நாடுகளுக்கிடையேயான தடைகள் மற்றும் கட்டணங்களைக் குறைத்து வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் ’வர்த்தகம் மற்றும் கட்டணங்களுக்கான பொது ஒப்பந்தம்  ( General Agreement on Trade and Tariffs - GATT)’ 1947 இல் துவங்கப்பட்டு,  1948  தொடக்கத்தில்  நடைமுறைக்கு வந்தது.

அப்போது அந்த அமைப்பு தொழில் சம்பந்தமான பொருட்களை மட்டுமே கவனத்துக்கு எடுத்துக் கொண்டது.  அதில் விவசாயம், சேவைத் துறை ஆகியன இல்லை. ஏனெனில் விவசாயப் பொருட்களின்   வர்த்தகம் என்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து விடும்; எனவே அதைத் தவிர்க்க வேண்டும்  என்கின்ற எண்ணம் அந்தக் காலத்தில்  இருந்தது.

1980 களில் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் இலாபத்தை அதிகரிக்கத் திட்டங்களைத் தீட்டி  பல ஆலோசனைகளைத் தெரிவித்தன.  அதன் அடிப்படையில் விவசாயம், அறிவு சார் சொத்துரிமை, சேவைத் துறை மற்றும் மூலதனம் ஆகியவை பின்னர் புதியதாக வர்த்தக வளையத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

தொடர்ந்து 1995 ஆம் வருடத்தில்   GATT  உரு மாறி உலக வர்த்தக அமைப்பு என்ற பெயரில் புது அவதாரத்தை எடுத்தது. ஆரம்ப முதற்கொண்டு அதில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்பட்டு வருவதாகப் பரவலான  குற்றச் சாட்டுகள் உள்ளன.   

மேலும் பெரும்பாலான சமயங்களில் அமெரிக்கா மற்றும்   ஐரோப்பிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்க முடியும். கூடவே சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அவ்வப்போது தங்களுடன் அவை வேறு சில நாடுகளையும் இணைத்துக் கொண்டு செயல்படும்.

அதனால் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் நலன்களே  பெருமளவு பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்துள்ளன. உதாரணமாக சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா  தமது நாட்டைச் சேர்ந்த சில பருத்தி விவசாயிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காக, ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் பருத்தி விளைச்சலை அழித்து, அதனால் அவர்களின் பொருளாதாரமே  சீர்குலைந்து போனதைச் சுட்டிக் காட்டலாம்.        

மேலும்  தங்களின் நலனுக்காக உலக வர்த்தக அரங்கில் சாதாரண நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்கவும்  அவர்களைப் பிரிக்கவும் மேற்கத்திய நாடுகள் எல்லாவித தந்திரங்களையும் கையாள்கின்றன. அதற்காகவே திறமை வாய்ந்த பல  பேர் ஆலோசகர்களாகப் பேச்சு வார்த்தைகளின் போது  அமர்த்தப்படுகிறார்கள். அதற்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது.

அதே சமயம் தங்களின் தனிப்பட்ட  நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டும் வளர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் உறுதியுடன் எதிரணியில் நிற்கும்.  அதற்காகப் பேச்சு வார்த்தைகளையே தாமதப்படுத்தி தடம் புறழச் செய்ய எல்லா நடவடிக்கைகளையும்  எடுக்கும். அப்படியே முடிவுகள் எடுக்கப்பட்டாலும் புதிய உத்திகள் மூலம்  அவற்றை மீறிச் செயல்படுவதற்கு  முயற்சிகளை மேற்கொள்ளும்.  அதன் பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குத் தயாராகும்.

2001 ஆம் வருடம் அரேபிய நாடான கட்டாரிலுள்ள தோஹாவில் நடந்த அமைச்சர்கள் மட்டத்திலான உலக வர்த்தக அமைப்பின் மாநாடு முக்கியமான ஒன்றாகும்.   அப்போது  உலக வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தை என்னும் முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது.

ஆயினும் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய   அந்தப் பேச்சு வார்த்தை மூலம் உறுப்பு நாடுகளுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க  முடியவில்லை. அதனால் 2003 மற்றும் 2008 ஆவது வருடங்களில் அந்தப் பேச்சு வார்த்தைகள் பெரும் தோல்வியில் முடிந்து உலக வர்த்தக அமைப்பையே கேள்விக் குறியாக்கியன.

அதன் பின்னர் உலக வர்த்தக அமைப்பு தோல்வியில் முடிந்து விடக்கூடாதென என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதனால்   எப்படியாவது பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனவே வர்த்தகம் சம்பந்தமான எல்லாப்  பிரச்னைகளையும் ஒரு சேர விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளாமல், குறிப்பிட்ட சில விசயங்களில் இருந்து மட்டும் பேச்சுகளைத் தொடங்குவது என்று 2012 ஆம் வருடத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து 2013 ஆம் வருடம் டிசம்பரில் இந்தோனேசிய நாட்டிலுள்ள  பாலித் தீவில்  ஒன்பதாவது அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெற்றது. அதில் சர்வதேச அளவில் வர்த்தகத்தை அதிகரிக்க உறுப்பு நாடுகளில் சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் வர்த்தகத்துக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றிய  பேச்சுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும்  வளரும் நாடுகளின் அரசுகள் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள் கையிருப்பு,  பொது விநியோகத் திட்டம் மற்றும்  விவசாயம் சம்பந்தமாக அரசுகள் கொடுக்கும் சலுகைகள் உள்ளிட்டவையும் பேச்சுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

உலக வர்த்தகத்தைச் சுலபமாக்குவதற்கு உறுப்பு நாடுகளின்  சுங்க விதிமுறைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும் என்பதும் பணக்கார நாடுகளின் ஒரு முக்கிய கோரிக்கையாகும். மேலும் வர்த்தகத்தை  அதிகரிக்க துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீனப் படுத்துதல் மற்றும்  கணினி மயமாக்குதல் ஆகியன செய்யப்பட வேண்டும் என்றும்  சொல்லப்பட்டது. ஏனெனில் வளரும் மற்றும் ஏழை நாடுகள் பலவற்றில் கட்டமைப்பு வசதிகள் குறைந்தும், சுங்க நடை முறைகள் எளிமையாக இல்லாமலும், துறைமுகங்கள் நவீன மயமாக்கப்படாமலும்  உள்ளது.

பிற  நாடுகள் அவ்வாறு செய்யும் போது உலக வர்த்தகம் ஒரு டிரில்லியன் டாலர்கள் ( ஏறத்தாழ அறுபது இலட்சம் கோடி ரூபாய்) அளவு அதிகரிக்கும் என்கின்ற கணக்கினை வளர்ச்சியடைந்த  நாடுகள் முன் வைக்கின்றன. மேலும் பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவை கூறுகின்றன.

ஆனால் வளரும் நாடுகளைப் பொருத்த வரையில் வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல் என்பது வளர்ந்த நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிமைப்படுத்துவதற்கான செயலாகவே    முடிந்து விடலாம் எனக் கருத இடமுள்ளது.  பணக்கார நாடுகளின் எண்ணமே பிற நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு,  துறைமுறைகள் நவீன மயமாகி,  சுங்க நடைமுறைகள் சுலபமாகும் போது அவற்றுடன் தங்களின் வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது தான்.

 மேலும் வளரும் மற்றும் ஏழை நாடுகள் தங்களின் கட்டமைப்புகளை ஏற்படுத்தி  நவீன மயமாக்கல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள  முதலீடுகள் போட வேண்டியுள்ளது. அதற்காக நிதி வசதி தேவைப்படும். பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப்  பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்னமும் பல நாடுகள் உள்ளன. எனவே அவற்றின் முன்னுரிமை என்பது தங்களின் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளாகவே இருக்க முடியும்.

பாலியில் பேச்சு வார்த்தைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இன்னொரு முக்கிய விசயம் அரசுகள் தங்களிடம் வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள் கையிருப்பு, விவசாயிகளுக்கு விளை  பொருள்களுக்காகக் கொடுக்கும் குறைந்தபட்ச விலை, விவசாயத்துக்கான சலுகைகள்  மற்றும் பொது விநியோகத் திட்டம்  ஆகியவை சம்பந்தமானது. உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் தங்களின் உணவுப் பொருட்கள் கையிருப்பு மற்றும் விவசாயச்  சலுகைகளுக்காக நாடுகளின் மொத்த விவசாய உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் செலவிடக் கூடாது என்று சொல்லப்பட்டது. அதுவும் மொத்த உற்பத்தி என்பது 1986-88 இல் நிலவிய   விலைகளின் படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழும் நாடு. அதில் அதிகம் பேர்  சிறிய விவசாயிகள். அவர்கள் பலரும் கடந்த பல வருடங்களகாவே மிகவும் சிரமப்பட்டு வேறு வழியில்லாமல் விவசாயம் செய்து வருபவர்கள். அவர்களின் விளை பொருள்களுக்குக் கொடுக்க வேண்டிய விலைகள் மற்றும் சலுகைகளில் கைவைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி விடும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள பல கோடி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் அளவை உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில்  பணக்கார நாடுகள் வரையறை  செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.

எனவே மேற்கண்ட பொருள் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததும், 2017 ஆம் வரை மேலும் ஒரு நான்கு வருட காலத்துக்கு எந்தக் கேள்விகளும் எழுப்பப்பட மாட்டாது என்று பணக்கார நாடுகள் தரப்பில் சொல்லப்பட்டது. அதே சமயம் சுங்க முறைகள் எளிமைப் படுத்துதல் மற்றும் விவசாய விளைபொருட்கள் சம்பந்தப்பட்ட  இரண்டு விசயங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்று  அவர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டது.  அவற்றுக்கு  இந்தியா ஒப்புக் கொண்டது.

இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. 2014 மே மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது. புதிய அரசு வந்ததுமே பாலி மாநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் அணுகுமுறை எப்படி இருக்குமென ஊகங்கள் எழுந்தன. உலக வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கருத்தை மையமாக வைத்து  எப்படியும் இந்தியாவைத் தங்களின் விருப்பத்துக்கேற்ப  சம்மதிக்க வைத்து விட வேண்டுமெனப் பல நாடுகளும்  விரும்பின.

ஆனால் உணவுப் பொருள் கையிருப்பு, விவசாயச் சலுகைகள், குறைந்த விலை நிர்ணயம் மற்றும் பொதுவிநியோகம் சம்பந்தமான விசயங்களில் பிற  நாடுகளின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என  இந்திய அரசு அறிவித்தது. அதே சமயம் சர்வதேச வணிகம் பெருக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய விசயங்கள் குறித்தும்  உலக வர்த்தக அமைப்பில் ஒன்றாகவே முடிவு செய்ய வேண்டுமென புதிய அரசு கூறியது. ஏனெனில் வர்த்தகம் சம்பந்தமான விசயம் முடிவுக்கு வந்து விட்டால்,  விவசாயம் சார்ந்த பிரச்னைகளை முடிக்க  மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டுமா  என்பது சந்தேகமே.

அரசின் மேற்கண்ட முடிவின் மூலம் நமது பெரும்பான்மை  மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விளை பொருட்களின் கையிருப்புகளும், விவசாயத்துக்கான சலுகைகளும் மொத்த உற்பத்தியில் பத்து விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று வளர்ந்த நாடுகள் சொல்வது  முறையானதல்ல. ஏனெனில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் சுமார் முப்பது விழுக்காடு பேர் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அப்படியிருக்கும் போது அவர்களுக்குத் தேவையான உணவு சம்பந்தமான ஏற்பாடுகளுக்கு உதவி  செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. எனவே அதற்கான செலவுகள் பற்றி நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதே போல விவசாயம் சம்பந்தமான சலுகைகளைப் பற்றி மேற்கத்திய  நாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. அமெரிக்க ஐரோப்பிய  நாடுகள் அவர்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மானியங்களை வருடா வருடம் அளித்து வருகின்றன. இத்தனைக்கும் அங்கு விவசாயத்தைச் சார்ந்து வாழுபவர்கள் மிகவும் குறைவு.

உதாரணமாக அமெரிக்காவிலுள்ள  விவசாயிகளின்  எண்ணிக்கை  ஏறத்தாழ இருபது இலட்சம் பேர்கள் மட்டுமே. ஆனால் அவர்களுக்கு சலுகைகளாக 120 பில்லியன் டாலர்களை ( சுமார் ஏழு இலட்சத்து இருபதாயிரம்  கோடி ரூபாய்கள்) அமெரிக்க அரசு வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதை விடவும் அதிக அளவில் விவசாயிகளுக்குச் சலுகைகள் கிடைப்பதாகத் தெரிகிறது.  

அதே சமயம் நமது நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஐம்பது விழுக்காடு பேர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள் சுமார்    12 பில்லியன் டாலர்கள் அளவு மட்டுமே. அதாவது அமெரிக்க அரசு அங்கு கொடுக்கும் அளவில் சுமார் பத்தில் ஒரு பாகம் மட்டுமே. ஆகவே அந்த நாடுகள் எல்லாம் தங்களின் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள  எல்லாவித  முயற்சிகளையும்  மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம்  இந்தியா போன்ற பெரும்பாலான மக்கள் நம்பி வாழக்கூடிய அந்தத் தொழிலுக்குக் கொடுக்கக் கூடிய  குறைந்த அளவு சலுகைகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டுமெனக்  கோருகின்றன. 

மேலும் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி சம்பந்தமான மதிப்பை சுமார் இருபது வருடத்துக்கு முந்தைய மதிப்பின்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகின்றன. 1980 களிலிருந்து 2014 வரை விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே பழைய நிலவரத்தை வைத்துக் கொண்டு உணவுக் கையிருப்புகள் மற்றும் சலுகைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பது வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதரங்களை முடக்கும் செயலாகும்.  

மேற்கண்ட விசயங்கள் குறித்து முடிவுகளை இறுதி செய்து அறிவிக்க உலக வர்த்தக அமைப்பு சென்ற ஜூலை மாதக் கடைசியில்  ஜெனிவாவில் பொதுக் குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. உறுப்பு நாடுகள் தங்களின் இறுதியான நிலைப்பாடுகளைத்  தெரிவிக்க ஜூலை 31 கடைசி  நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே தான் அன்று  இரவு வரை வளர்ந்த  நாடுகள்  உலக வர்த்தக  அமைப்பின் மூலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முக்கியமான செய்தி அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்தது. அதற்கு முந்தைய வாரமே  மோடி  அரசின் நிலைப்பாடு பற்றிய செய்திகள்  வெளியாகத் தொடங்கியதும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன.  அந்த சமயத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்காவின் இரண்டு முக்கிய அமைச்சர்களும் உலக வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் நமது நாட்டின் முடிவு பற்றி  மிகவும் குறிப்பாக இருந்தனர். 

ஏனெனில் இந்த முறை அந்த நாடுகளுக்குச் சாதகமான முடிவு ஏற்படுவதற்கு இந்தியாவின் நிலைப்பாடு தடையாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்குக் காரணம் அவர்களுக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருந்த மிகச் சில நாடுகளில் மிகவும்  முக்கியமானது இந்தியா. ஆகையால் தான் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதன் மூலம் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் முயற்சி செய்தார்கள்.

ஆனால் இந்தியா தனது முடிவில் உறுதியாக இருக்கவே,   ஜெனிவா கூட்டத்தின் இறுதியில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தங்களுக்குச் சாதகமான முடிவினை எடுக்கச் சில நாடுகள் முயற்சிகளைத் தொடங்கின.  ஆனால் இந்தியாவை மீறி உலகப் பொருளாதாரம் சம்பந்தமான முக்கிய முடிவினை எடுத்து விடலாம் என நினைப்பது இனிமேல் எளிதான காரியமல்ல.  எனவே அதற்கான  முயற்சிகள் தொடர்ந்து மேலே செல்ல முடியவில்லை.

அதனால் இந்த முறை ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  துரதிர்ஷ்டவசமாக முந்தைய அரசு உலக வர்த்தக அமைப்பில் நமது மக்களின் நலனை முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. பாலி மாநாட்டின் தொடக்கத்தில் சில விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா,  அந்தக் கூட்டம் முடிவதற்கு முன்னரே தனது கருத்தை மாற்றி அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது நம்மில் சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.

எனவே உலகப் பொருளாதார அரங்கில்  இந்திய அரசு தனது தேசம் சார்ந்த நிலைப்பாட்டைத் தற்போது உறுதியாக அறிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பைப் பொறுத்த வரையில் முதன் முறையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  அவர்களின்  ஆட்சிக் காலத்தில் தான் மேற்கு நாடுகளுக்கு மாற்றாக இந்தியாவின் குரல் ஒலித்தது.    

ஆகையால்  இந்திய அரசின் தற்போதைய  முடிவு அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்களுக்குக் கொஞ்சமும் செவி சாய்க்காமல் தேசத்தின் நலனை முதன்மையாக வைத்து மோடி அரசு செயல்பட்டுள்ளது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. உலகப் பொருளாதார அரங்கில் இனிமேல் இந்தியாவின் நிலைப்பாடுகள் தேச நலன்களை மையமாக வைத்து மட்டுமே அமைய வேண்டும். அதற்கான தொடக்கமாக தற்போதைய முடிவு இருக்க வேண்டும்.