Professor with interests in the functioning Indian models - Economy,Society, Business and Management.
வலுவான குடும்பம் வளமான இந்தியா
இந்தியா வலுவடைய என்ன தேவை என்று கேட்டால் பொருளாதார பலம் என்றுதான் நம்மில் அநேகரும் சொல்வார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தாமல் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு நகர்ந்து செல்லமுடியாது. இதை ஒருவராலும் மறுக்கமுடியாது.
ஆனால், பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்துபவர்கள் ஓர் அடிப்படையான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் குடும்ப வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை.
இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக கலாசார அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன.
நம் சமகாலத்திய குறைபாடுகளைப் போக்கி வலுவான குடும்பத்தையும் வளமான தேசத்தையும் கட்டமைக்க விரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment