குறைந்து வரும் வேலைவாய்ப்புகள்

இந்தியா உலகின் மற்ற பெரிய பொருளாதாரங்களை விடவும் வேகமாக முன்னேறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ள நாடாகக்  கணிக்கப்படுகிறது.  உலக அளவில் இரண்டாவது அதிகமான மக்கள் தொகையையும் அதிக அளவிலான இளைஞர் பட்டாளத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். மக்கள் தொகையும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நமது வலிமையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மக்களை வைத்துத் தான் ஒரு நாடு அதிக அளவில் முன்னேற்றத்தைக் காண  முடியும்.
மக்களின் திறமைகளையும் வலிமைகளையும் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நாட்டின் அடிப்படையான கடமையாகும். இந்தக் கடமையை எந்த அளவுக்கு ஒரு அரசாங்கம்  முழுமையாகச்  செய்கிறதோ,  அந்த அளவுக்கு  நாடு வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தற்போது நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வளர்ச்சி விகிதங்கள் உண்மையில் மக்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை. எனவேதான் தற்போதைய வளர்ச்சி என்பது உலகின் பல பகுதிகளிலும் முழுமையானதாக இல்லை.
தற்போது இந்தியா எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று வேலை வாய்ப்புகளைப் போதிய அளவில் உருவாக்குவதாகும். தேவையான அளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லையெனில் மக்களின் எண்ணிக்கை என்பது பெரும் சுமையாகிப் போகும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாடும்  சிரமங்களுக்கு உள்ளாகி விடும். மேலும் மக்களின் திறமைகள் பயன்படுத்தப்படாமல் வீணாகி விடும்.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கை வருடம் ஒன்றுக்குப் புதிதாக பத்து இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என அறிவித்துள்ளது. ஆனால் அவை கூட அமைப்பு சார்ந்த பிரிவுகளின் கீழ் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலமாக ஏற்படும் நிரந்தரப் பணிகளல்ல.  அவற்றில் பெரும்பாலும் அமைப்பு சாராத துறைகள் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களால் உண்டாக்கப்படும் சாதாரண வேலைகளே ஆகும். இந்தியாவைப் போன்ற பெரிய வளர்ந்து வரும் நாட்டுக்குப் புதிதாக பத்து இலட்சம் வேலைகள் உருவாக்கம் என்பதே மிகவும் குறைவு. அது போதுமானதல்ல.   
சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டுகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விபரங்களை எடுத்து வைக்கிறது.  2004 ஆம் வருடம் தொடங்கி 2011 வரையான கடந்த எட்டு ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த துறைகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் கீழுள்ள அட்டவணையில்  கொடுக்கப்பட்டுள்ளன.   
அட்டவணை 1
அமைப்பு சார்ந்த துறைகளில் புதிய வேலைகள் உருவாக்கம்
 (மார்ச் 31, இலட்சங்களில்) 

2004
2005
2006
2007
2008
2009
2010
2011
ஆண்கள்
215.09
214.42
218.72
219.64
220.37
225.92
228.49
230.45
பெண்கள்
49.34
50.16
51.21
53.12
55.12
55.80
58.59
59.54
மொத்தம்
264.43
264.58
269.93
272.76
275.49
281.72
287.08
289.99




ஆதாரம்: வேலை மற்றும் பயிற்சிக்கான இயக்குநர் ஜெனரல், தொழிலாளர் மற்றும் வேலை அமைச்சகம், மத்திய அரசு
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் 2011 ஆம் வருடத்தில் புதியதாக வெறும் 2.9 இலட்சம் வேலைகளே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. கடந்த எட்டு வருட கால கட்டத்தில் அதிக பட்சமாக 2009 ஆம் வருடத்தில் மட்டும் 6.23 இலட்சம் வேலைகள் உருவாகியுள்ளது. மேற்கண்ட எட்டு வருடங்களிலும் சேர்த்து  மொத்தமாக உருவாக்கப்பட்டுள்ள வேலைகள் 25.56 இலட்சம் மட்டுமே. சராசரியாக ஆண்டொன்றுக்கு எனக் கணக்கிட்டால் புதிய வேலைகள் 3.19 இலட்சம் மட்டும் தான்.
அதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு எதுவும் இல்லை என்பது மிகவும் முக்கியமானதாகும். கடந்த எட்டு வருட காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படாதது மட்டுமின்றி, இருக்கின்ற வேலகளும் குறைந்து வருவதை  அட்டவணை 2 எடுத்துக் காட்டுகிறது.

         அட்டவணை 2 பொதுத்துறை நிறுவனங்களில் வேலைகள் 
                                                                         
2004 
2005
2006
2007
2008
2009
2010
2011
மத்திய அரசு
30.27
29.38
28.60
28.00
27.39
26.60
25.52
24.63
மாநில அரசுகள்
72.22
72.02
73.00
72.09
71.71
72.38
73.53
72.18
அரசு சார்ந்த அமைப்புகள்
58.22
57.48
59.09
58.61
57.96
58.44
58.68
58.14
உள்ளாட்சி அமைப்புகள்
21.26
21.18
21.18
21.32
19.68
20.73
20.89
20.53
மொத்தம்
181.97
180.07
181.88
180.02
176.74
177.95
178.62
175.48





மேற்கண்ட  அட்டவணை 2011 ஆம் வருடத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் 3.14 இலட்சம் வேலைகள் குறைந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட எட்டு வருடத்தில் நான்கு வருடங்களில் வேலை உருவாக்கம் என்பதே சுத்தமாக இல்லை. அதனால் மேற்கண்ட எட்டு வருட காலத்தில் மொத்தமாக 6.49 இலட்சம் வேலைகள் குறைந்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர்களின்  எண்ணிக்கை குறைவதற்கு பெரும்பாலும் அவற்றின் செயல்பாடுகளே காரணமாகும். அரசியல் தலையீடுகள், நிர்வாகக் குறைபாடுகள், அக்கறையின்மை ஆகியவை காரணமாக பொதுத்துறை செயலிழந்து வருகிறது. கடந்த பல வருடங்களாகவே பொதுத்துறை குறித்த அதிகார வர்க்கத்தினரின் அலட்சியப் போக்கு  அந்நிறுவனங்களின் வீழ்ச்சிக்குக் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.  
இந்திய இரயில்வே நமது நாட்டில் உள்ள முக்கியமான பொது நிறுவனம். இன்றும் அதிக அளவில் வேலை கொடுக்கும் அமைப்பு. அதன் செயல்பாடுகள் வருடாவருடம் அதிகரித்து வருகின்றன. இரயில்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் அதில் உள்ள நிரந்தரப் பணியிடங்கள் குறைந்து வருகின்றன. அட்டவணை 3 இதைத் தெளிவாக்குகிறது. 
அட்டவணை 3 இரயில்வே வேலைகள் (இலட்சங்களில்)
வருடம்
வழித்தடங்களின் தூரம்( கி.மீ)
நிரந்தரப் பணியாளர்கள்
2001
81,865
15,49,385
2012
89,801
13,05,701

ஆதாரம்: இந்திய இரயில்வே ஆண்டறிக்கைகள், புள்ளி விபரங்கள்
2001 தொடங்கி 2012 வரையான பதினொரு வருட காலத்தில் ஓடும் வழித்தடங்கள் சுமார் பத்து சதவீதம் அதிகரித்துள்ளன. ஆயினும் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை 2,43, 684 என்ற அளவில் குறைந்துள்ளதை அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது. கடந்த மூன்று வருடங்களில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 25000 என்ற அளவில் பணியாளர்களின் அளவு குறைந்துள்ளது.  தேவைப்படும் பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
எனவே அமைப்பு சார்ந்த துறையில் உருவாக்கப்படும் வேலைகள் அனைத்தும் தனியார் துறைகள் மூலமே உருவாக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. கடந்த எட்டு வருட காலத்தில் தனியார் துறையில் உருவாகியுள்ள வேலைகள் பற்றிய விபரங்களை அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது.
அட்டவணை 4 தனியார் துறை வேலைகள்
தனியார் துறை
2004 
2005 
2006 
2007 
2008 
2009 
2010 
2011 
ஆண்கள்
62.02
63.57
66.87
69.80
74.03
78.88
81.83
86.69
பெண்கள்
20.44
20.95
21.18
22.94
24.72
24.98
26.63
27.83
மொத்தம்
82.46
84.52
88.05
92.74
98.75
103.77
108.46
114.52


2004 தொடங்கிய கடந்த எட்டு வருட காலத்தில் தனியார் துறையில் மொத்தம் 32.06 இலட்சம் வேலைகள் உருவாகியுள்ளன என்பது தெரிய வருகிறது. அதாவது வருடம் ஒன்றுக்கு நான்கு இலட்சத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் வேலைகள் உருவாகியுள்ளன. 
எனவே நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான வேலைகள் அமைப்பு சாராத் துறைகள் மூலமே உருவாகும் என்பது தெளிவாகிறது. அமைப்பு சாராத் துறை என்பது பெரும்பாலும் அதிகம் படிக்காத சாதாரண மக்களால் சுய முயற்சிகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் துறையாகும். பொதுத்துறை உள்ளிட்ட அமைப்பு சார்ந்த துறைகள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் போதும் முடிந்த வரை நிரந்தரமில்லாத ஒப்பந்தப்பணி, தினக்கூலி போன்றவற்றின் மூலமே பணியாளர்களை அமர்த்திக் கொள்கின்றன. அந்த மாதிரி சூழ்நிலைகளில் பல சமயங்களில் வேலை செய்பவர்களுக்குப் பாதுகாப்பும் குறைந்த பட்ச வசதிகளும் கூட கிடைப்பதில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விசயமாகும்.  
ஆகையால் வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கு உடனடியாக அவசர நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாக வேண்டும். அதிகம் பேர்  வேலையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ள  விவசாயம், உற்பத்தித் துறை, சிறு வணிகம், குறு மற்றும் சிறு தொழில்கள் போன்றவை  ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால் விவசாயம் ஏற்கெனவே நசிந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயத்தை விட்டு வெளியில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்ற வருடத்தில் உற்பத்தித் துறையின் செயல்பாடும் நன்றாக இல்லை. வளருவதற்கு அதிகமான வாய்ப்புள்ள சிறு வணிகத்துறை அந்நிய பன்னாட்டு  நிறுவனங்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளால் சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளன.
எனவே இந்த வருடம பொருளாதார வளர்ச்சி விகிதமும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைந்துள்ளது. போதாக் குறைக்கு விலைவாசி உயர்வு மக்களைப் பாதித்து வருகிறது. ஆகையால்  தற்போதைய பொருளாதார நிலைமை பல வகைகளிலும் கவலை அளிப்பதாக உள்ளது. அதிலும் வேலை உருவாக்கத்தைப் பொறுத்த வரையில் உண்மை நிலவரம் மோசமாக உள்ளது.
போதிய செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக மயமாக்கல் சித்தாந்தக் கொள்கைகள் நமது நாட்டின்  அடிப்படையான தொழில்களையும்  தரமான வேலை வாய்ப்புகளையும் பெருமளவு பாதித்து வருகின்றன. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் சம்பந்தமாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வேலைகளுக்கான செயல் குழு கடந்த இருபது வருட காலத்தில் வளர்ச்சி விகிதத்தை விட வேலை விகிதம் குறைவாக இருந்து வருவதை எடுத்துச் சொல்லியுள்ளது.  
ஒரு பக்கம் வெளி நாட்டு மூலதனம் மற்றும் பங்குச் சந்தைக்கான திட்டங்களும்,  இன்னொரு பக்கம் அரசியல் சார்ந்து குறிப்பிட்ட பிரிவு மக்களைத் திருப்திப்படுத்த மேற்கொள்ளப்படும்  ஜனரஞ்சக அறிவிப்புகளும் ஊடகங்கள் மற்றும் கருத்து சொல்பவர்களின் கவனத்தை மக்களின் உண்மையான பிரச்னைகளிலிருந்து திருப்பி விடுகின்றன. வளர்ச்சி விகிதம், நிதிப்பற்றாக்குறை போன்ற சில குறியீடுகளைப் பற்றி மட்டுமே அதிமாகப் பேசி முக்கியமான விசயங்கள் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
அந்த வகையில் வேலை வாய்ப்பு சம்பந்தமான பிரச்னைக்குப் போதுமான அளவு  கவனம் கொடுக்கப்படவில்லை. வேலை உருவாக்கம் என்பது நமது எதிர்காலம் குறித்த ஒரு அடிப்படையான பிரச்னையாகும். அதற்கு நாம் உடனடியாகக் கவனம் கொடுக்கவில்லையெனில், நாடு எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

http://www.aazham.in/?p=3028 

( ஆழம், ஏப்ரல் 2013) 

Rebuilding India - 1


India has to be rebuilt on her own foundations 

India has a long and unique history of superior performance,   highest achievements and evolved systems. As a result she remained a pioneer and leader in the world. In the course of time, the nation had to face frequent invasions and attacks from outside. Subsequently different parts of India came under the domination of the alien forces for nearly one thousand years. The nation had to endure untold sufferings.  

Maharishi Aurobindo notes : “This great and ancient nation was once the fountain of human life, the apex of human civilization, the exemplar of courage and humanity, the perfection of good government and settled society, the mother of all religions, the teacher of all wisdom and philosophy. It has suffered much at the hands of inferior civilizations and more savage peoples; it has gone down into the shadow of night and tasted often of the bitterness of death. Its pride has been trampled into the dust and its glory has departed. Hunger and misery and despair have become the masters of this fair soil, these noble hills, these ancient rivers, these cities whose life story goes back into pre-historic night. ”

The time tested native systems were subject to contempt and destruction during the alien rule. Foreign ideas and systems were thrust from above. With the result, the alien thoughts and practices began to occupy the central place in Indian life. Ultimately India had to lose much of her original approaches.   

Great souls were aware of the consequences and advocated the need for a shift towards Indian approaches, long before independence. Swami Vivekananda underlined:  We must grow according to our nature. Vain is it to attempt the lines of action that foreign societies have engrafted upon us; …. I do not condemn the institutions of other races; they are good for them, but not for us. This is the first lesson to learn. With other sciences, other institutions, and other traditions behind them, they have got their present system. We, with our traditions, with thousands years of Karma behind us, naturally can only follow our own bent, run in our grooves; and that we shall have to.”

Aurobindo echoed similarly in 1909: “We have sought to regain life by following the law of another being than our own. We must return and seek the sources of life and strengthen within ourselves.”  But in spite of these sane warnings, changes in the required direction were not initiated after India became independent. The ruling classes continued to make India depend on the alien ideas and approaches.

This attitude pained the concerned citizens and prompted them to voice their opinions. The noted Gandhian Dharampal wrote:  “Today, we feel encircled by hostility—much of it in fact generated by our own ineptitude and actions. From around 1947, we have treated ourselves as cousins of the West. Dominated by the West, it may be necessary at the moment to rely on Western knowledge and products. But this can be only be a short term proposal.”

But unfortunately the reliance on western ideas still continues even after sixty five years of independence. We remain unaware of our past as well as the present, and fail to pose the fundamental questions that are critical to us. To quote Dharampal : “Since Independence in 1947, it is this question of reconstruction of self and society on the foundation of our priorities, values, tradition and culture that seems to have completely eluded us, particularly our scholars, administrators and politicians. We appear to have forgotten that we can look back and learn from our own past, and based on that experience, construct our own unique identity within the context of our own affairs as well as that of the rest of the world. What do we as a nation—without leaning on others’ ideological and material crutches—want? Do we have ingenuity or not? Can we make our own points—as against aligning with one sort or another? Do we have a point to make as Indians? ”

Times are changing fast. India is fast emerging as a powerful nation at the international level. The Indian thoughts, approaches and systems are getting increasingly recognized.  Meanwhile, the west is facing serious difficulties at the economic, social and personal levels. The world is beginning to realize the unsuitability of the western models for other countries.  No nation can make real progress on imported ideas.

It is time for us to understand that a strong India can be built only on the Indian foundations. The contemporary events reaffirm that India is fully capable of achieving a lot, provided serious efforts are made in the required direction. For this purpose, it is necessary to understand India – her past and present - from true perspectives. Misconceptions about the country have to be removed and correct opinions have to be formed. Vivekananda says:  “We all hear so much about degradation of India. There was a time when I also believed in it. But today standing on the vantage-ground of experience, with eyes cleared of obstructive predispositions and above all, of the highly-coloured pictures of other countries tone down to their proper shade and light by actual contact, I confess, in all humility, that I was wrong. Thou blessed land of Aryas, thou wast never degraded. Sceptres have been broken and thrown away, the ball of power has passed from hand to hand, but in India, courts and kings have always touched only a few; the vast mass of people, from the highest to the lowest, has been left to pursue its own its inevitable course, the current of national life flowing at times slow and half-conscious, at others, strong and awakened.  I stand in awe before the unbroken procession of scores of shining centuries, with here and there a dim link in the chain, only to flare up with added brilliance in the next, and there she is walking with her own majestic steps – my motherland – to fulfill her glorious destiny, which no power on earth or in heaven can check – the regeneration of man the brute into man the God.”

India can be rebuilt, as she has the fundamentals and the potential. She has the background and capacity to reach higher levels and guide the destiny of the other nations. It is the external thoughts and approaches that are hindering her from realizing the full potential. She has many problems and difficulties. But they can be solved if we decide to tackle them from the correct perspectives. For this purpose, let us recall the words of Swami Vivekananda:  “This national ship, my countrymen, my friends, my children- this national ship has been ferrying millions and millions of souls across the waters of life…. But today, perhaps through your own fault, this boat has become a little damaged, has sprung a leak; Is it fit that you stand up and pronounce malediction upon it, one that has done more work than any other thing in the world? If there are holes in this national ship, this society of ours, we are its children. Let us go and stop the holes.”

References:

1. Dharampal quoted in  Indian Science and Technology in the Eighteenth Century, Other India Press, Goa, 1983
2. Sri Aurobindo, Out of the ruins of the WestIndia’s Rebirth, Mira Aditi, Mysore, 1997
3. Swami Vivekananda, My India The India Eternal, Ramakrisha Mission Institute of Culture, Calcutta, 2000

( Yuva Bharati, Vivekananda Kendra, Chennai, April 2013)

கலாசாரமே இந்திய வாழ்க்கை முறையின் ஆதாரம்


ஒரு நாட்டின் நோக்கம், வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் அதன் அடிப்படைத் தன்மையை ஒட்டியே அமைகின்றன. எந்தவொரு நாட்டுக்கும் அஸ்திவாரமாக விளங்குவன அங்குள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களே  ஆகும். அந்த அஸ்திவாரங்களைத் தாங்கிப் பிடித்து உயிர் கொடுப்பது கலாசாரமாகும். நாட்டின் ஒட்டு மொத்த தன்மையும் போக்கும் அதன் குடும்பங்கள்,, சமூகங்கள், மற்றும் கலாசாரத்தைச் சார்ந்தே அமைகிறது. 
இந்திய வாழ்க்கை முறை தொன்மையையும் சிறப்புக்களையும் பெற்றது. இந்தியக் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் தனித்தன்மைகளைப் பெற்றவை. அதற்குக் காரணம் இந்த தேசத்தின் உயர்ந்த கலாசாரமாகும். பல்லாயிரமாண்டுகளாக இந்தியா உலகின் முன்னணி நாடாக விளங்கி வந்ததற்கு அதுவே அடிப்படை. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் எல்லா மாற்றங்களும் இந்த மண்ணின் தனித்தன்மையை ஒட்டியே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது அறுபத்தைந்து வருட கால முன்னேற்றங்கள் அனைத்துமே நமது கலாசாரத்தின் தாக்கத்தையே வெளிப்படுத்துகின்றன.
குடும்பங்களின் ஆதாரமாக தர்மம்
குடும்பம் என்பது சமூகம் மற்றும் கலாசாரத்துக்கு மட்டுமன்றி பொருளாதாரத்துக்கும் அடிப்படை அங்கமாக அமைந்துள்ளது. பிறப்பு  முதல் இறப்பு வரை மனித வாழ்க்கை குடும்பத்தைச் சுற்றியே அமைகிறது. குடும்பத்தின் ஆதாரமாக தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட உறவுகள் இருக்கின்றன. இந்த உறவுகள்  அனைத்துமே தருமத்தை ஆதாரமாகக் கொண்டவை. அன்பு, பாசம், தியாகம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு என்பதெல்லாம் அதன் வெளிப்பாடுகள்.
நமது வீடுகளில் சம்பாதிப்பவர்கள் அது தமக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பதில்லை. நாட்டு மக்கள் தொகையில் மொத்தம் 28.1 கோடி பேர் மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர் என பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் (National Council of Applied Economic Research)  கூறுகிறது. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் 1.4 மட்டுமே வருமானம் ஈட்டுகின்றனர். மேலும் சுமார் 69 விழுக்காடு குடும்பங்களில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
சம்பாதிப்பவர்கள் தங்களின் வருமானத்தைப் பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்குச் செலவு செய்யவே திட்டமிடுகின்றனர். அதில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் செலவு செய்வது என்பது பரவலாக உள்ள நடைமுறை.  
வருமானத்தை மட்டுமன்றி எதிர்காலத்துக்கான சேமிப்புகளைக்  கூட தங்களுக்கென மேற்கொள்ளாத தன்மை நமது மக்களிடத்தில் மிகுந்துள்ளது. எதிர்காலம் குறித்த மக்களின் சேமிப்புகளுக்கான  காரணங்கள் பற்றிக் கேட்ட போது, தங்களின் முதுமைக் காலத்துக்காகச் சேமிப்பது என்பது மூன்றாவது காரணமாகவே சொல்லப்பட்டதாக  மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தின் எதிர்பாராத  சூழ்நிலைகளை சமாளித்தல்,   குழந்தைகளின் கல்வி ஆகிய இரண்டுமே  சேமிப்புக்கான முதலிரண்டு காரணங்களாக உள்ளன.
பாதுகாப்பு சார்ந்த முதலீடுகள்
 அதனால் நமது மக்களின் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் பாதுகாப்பு சார்ந்தவையாகவே உள்ளன. பங்கு சந்தை முதலீடுகள் போன்றவற்றைப்  பாதுகாப்பு குறைவெனக் கருதி ஒதுக்கி விடுகின்றனர். எனவே தான் வங்கி முதலீடுகள், தங்கம், வீடுகள் போன்ற சொத்துக்கள் வாங்குவதை மேற்கொள்கின்றனர். வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் முதலீடுகளைக் குறைப்பதில்லை.
இது ஏதோ படிக்காதவர்கள் மட்டும் செய்வதாக எண்ணக்கூடாது. கல்விக்குப் பேர் போன  தொழில் நகரமான கோவையில், பெண்கள் கல்லூரிகளில் பணி புரியும் நிதித் துறை சார்ந்த பேராசிரியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் கணிசமான பேர் தங்களின் வருமானத்தில் 50 விழுக்காடு வரை சேமிப்பவர்கள். அவர்கள் தான் மாணவர்களுக்கு மேல்நாட்டு நிதிச் சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுப்பவர்கள். அந்த விசயங்களில் அறிவு பெற்றவர்கள். அவர்களின் சொந்த முதலீடுகளைப் பொருத்த வரையில் 95 விழுக்காடு பேர் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கருதுவதாக தெரிவித்தனர். 65 விழுக்காடு பேர் பங்குச் சந்தையில் எந்தக் காலத்திலும் முதலீடு செய்யப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர்.
சம்பாதிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் புதியாகச் சொத்துக்கள் வாங்கும் போது தங்களின் பெயர்களின் பதிவு செய்வதில்லை.  அந்தச் சொத்துக்களும் கூட தங்களின் உறவுகளின் பெயரிலேயே இருக்க விரும்புகின்றனர். கோவையில் படித்துப் பணி புரியும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆகியோரிடம் நடத்தப் பட்ட ஆய்வுகளில் 60 விழுக்காடு பேர் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி என நெருங்கிய உறவுகளின் பேர்களிலேயே சொத்துகளை வாங்கியுள்ளது தெரிய வந்தது. வருமானம், செலவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளிலும் குடும்ப நிறைவு ஒன்றைத்தான் தங்கள் வாழ்க்கையின்  முதன்மையான நோக்கமாகக் கருதுவதாக மக்கள் தெரிவித்தனர்.
உறவுகளே வாழ்வின் உயிர்நாடி
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் கடமைகளே நிறைந்துள்ளன. ஒவ்வொருவரும் உறவுகள் மற்றும் சமூகத்துடன் பின்னிப் பிணைந்து செல்லுமாறு வாழ்க்கை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பத் தலைவன் மற்றும் தலைவியின் கடமையாக உள்ளது. பின்னர் அவர்கள் வயதான பின்னர் அவர்களைப் பாதுகாப்பது குழந்தைகளின் கடமையாகிறது. அது போலவே சகோதரன், சகோதரி, மாமா உள்ளிட்ட உறவுகள் பலவற்றுக்கும் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
பெண்களைத் தாய்மையின் வடிவமாக, தெய்வீகத்தின் அடையாளமாக மதிக்கும் தன்மை நம் பாரம்பரியத்தில் உள்ளது. அர்த்த நாரீஸ்வர தத்துவம், பெண் கடவுள்கள் நிறைந்திருப்பது, பூமி, கடல், மலை, நதி என இயற்கையின் பரிமாணங்களை அனைத்தையும் தாயாக வணங்கும் பண்பு ஆகியவை நமது கலாசாரத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. வாழ்வின் முக்கியமான குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. முக்கியமான குடும்ப, சமூக நிகழ்வுகளில் மனைவியுடன் இருக்கும்போது மட்டுமே ஆணுக்கு இடம் கொடுக்கப்படுகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் நமது கலாசாரம் கொண்டாடுகின்ற மரபு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் பல நிலைகளும் சிறப்பிக்கப்படுகின்றன. தாயின் வயிற்றுக்குள் கருவாக உருவானது முதல் கடைசி வரைக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல விதமான வழிபாடுகள் மற்றும்  விழாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் மக்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்குத் தயார் செய்யும் வகையில் உள்ளது.
 நமது பாரம்பரியத்தில் இல்லறம் என்பதே  வாழ்க்கையை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும் சாதனமாகக் கருதப்படுகிறது.  திருமணம் என்பது நிரந்தர உறவாகவும் பின்னர் வரும் பிறப்புகளுக்கும் தொடர்வதாகவும் கருதும் சிந்தனை புனிதமானது. வாழ்வின் பல உறவுகளையும் பிரிக்க முடியாததாக தத்துவார்த்த ரீதியாகவும் செயல்பாட்டு முறைகளிலும் அமைத்துள்ள தன்மை நமது வாழ்க்கை முறைகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
உறவுகளைப் பேணிப் பாதுகாக்கப் பலவிதமான விழாக்கள், சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளன. இல்லற உறவுகள் நீடித்திருக்க நாடு பூராவும் விரதங்கள் மற்றும் விழாக்கள். பல வட மாநிலங்கள் குஜராத் உள்ளிட்ட பகுதிளில் மனைவியர் விரதமிருந்து குடும்பத்துடன் கொண்டாடும் ‘கர்வா செளத்.’ நன்கு  படித்து பணியில் இருக்கும் நவீன பெண்களும் இதைப் பிரபலமாகக் கொண்டாடுகின்றனர்.
பீகார் மாநிலத்தின் மிகப் பெரிய விழா ‘சாத் பூஜா’ என்பதாகும். அங்கு மட்டுமன்றி மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், தில்லி, வட கிழக்கு மாநிலங்கள், மும்பை என நாட்டின் பல பகுதிகளிலும் அந்த விழா கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையை பூமியில் நிலைத்திருக்கச் செய்வதற்காக சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், குடும்பத்தினருக்கு நல்லது நடக்க வேண்டி வழிபடவும் அந்த விழா நடத்தப்படுகிறது. அந்த வகையான திருவிழாக்கள் மற்றும் நோன்புகள் தென் மாநிலங்களிலும் உள்ளன. காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம் என வெவ்வேறு பெயர்களில் அவை கொண்டாடப் படுகின்றன.
அவ்வாறே சகோதர-சகோதரிகள், பிறந்த வீடு சம்பந்தப்பட்ட உறவுகள்  எனப் பலவற்றையும்  புதுப்பிக்கும் முறை நிலவுகிறது. அது மட்டுமன்றி இயற்கை, விலங்குகள், இயந்திரங்கள் என அனைத்தையுமே மதித்து வழிபடக் கூடிய தன்மை நமக்குள்ளது.
சமூகங்களின் பங்கு
உறவுகளின் விரிந்து செல்லும் கூட்டங்களும், தொடர்புகள் மற்றும் நட்புகளின் பங்கும் இந்திய சமூகங்களில் முக்கியமாக அமைகின்றன. குடும்ப வட்டங்களிலிருந்து இருந்து உலகமே ஒரு குடும்பம் என்னும் அணுகுமுறை வரை நமது கலாசாரத்தின் பரிமாணங்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவிக் கிடக்கிறது.   
சமூகம் சார்ந்த உறவுகள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதன் மூலம் யாருமே தனி நபரல்ல என்னும் உணர்வு உண்டாகிறது.  திருமணம், சிரமங்கள், விபத்துகள், இறப்பு என ஒருவரின் முக்கிய சமயங்கள் எல்லாவற்றிலும் சமூகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குடும்பங்களில் இறப்பு ஏற்படும் காலத்தில், சுற்றங்கள் அந்தக் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் குறிப்பிட்ட கால முழுதும் எடுத்துக் கொள்வது நாட்டின் பல பகுதிகளிலும் நடை முறையில் உள்ளது.
சமூகங்களுக்குள் உள்ள உறவுகள் முன்னோர்களையும் குல தெய்வங்களையும் வைத்து அமைகின்றன. அனைத்து சமூகங்களுக்கும் தனித்தன்மை வாய்ந்த வரலாறுகள் உள்ளன.  அவை அனைத்துமே தெய்வங்களுடன் இணைக்கப் பெற்று பெரிய வரலாறுகளைக் கொண்டு விளங்கி வருகின்றன.
சமூகங்களின் உறவுகள் சார்ந்த முறைகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. அதனால் சமூக மூலதனம் பெருகி மக்களின் இணைந்து செயல்படும் தன்மை, வளர்ச்சி ஆகியன அதிகரிக்கும் தன்மை உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சமூக மூலதனம் பெரும் பங்கு வகிப்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. உலக அரங்கில் ஜவுளித் துறையில் திருப்பூர் முன்னணியில் வருவதற்கு அங்கு நிலவும் உறவுகள்  சார்ந்த நிதி திரட்டும் முறைகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என உலக வங்கியின் உலக வளர்ச்சி அறிக்கை 2001 தெரிவிக்கிறது. அதே போல குஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களது உறவு முறைகளைக் கொண்டே அமெரிக்காவில் மோட்டல் துறை, உலக அளவில் வைர வியாபாரம் ஆகிய தொழில்களில் முன்னணியில் உள்ளது தெரிய வருகிறது.
இந்தியக் கலாசாரத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வித்தியாசமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவமாகும். யாரையுமே எதிரியாகப் பார்க்கக் கூடிய தன்மை நமது பாரம்பரியத்தில் இல்லை. மாறாக வெளியார்களையும் உயர்ந்த மரியாதையுடன் உபசரிக்கும் தன்மையை நாம் பெற்றுள்ளோம். அதுதான் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் தொழில்களில் பல்வேறு பிரிவு மக்களும் இணைந்து செயல்படும் தன்மை உள்ளது.
 சுய நிர்வாகம்
மேலும் சமூகங்கள் தம்மை சுயமாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை உள்ளது. கடலோர மாவட்டங்களில் பட்டினவர் சமூகம் தங்களுக்கேயே நிரந்தரமான நிர்வாக அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறான முறைகள் வெவ்வேறு வகைகளில்  நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதனால் குற்றங்கள் தடுக்கப்படுகிறது.  வழக்குகள் மிகவும் குறைவு.
பொதுச்சொத்துக்களை சமூகங்களே சரியான முறையில் பாதுகாக்க முடியும் என நோபெல் பரிசு பெற்ற அமெரிக்க பேராசிரியர் எலினர் ஓஸ்ட்ராம் தனது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளார். அரசாங்கமோ தனியார் துறையோ அவற்றைப் பொருத்தமாகச் செய்துவிட முடியாது என அவரது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது நாட்டில் பழைய காலந்தொட்டு சமூகங்களே இவ்விதப் பொறுப்புகளை ஏற்று நடத்தி வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்னமும் பல விசயங்கள் சமூகங்களாகவே நடத்தப்படுகின்றன. அதனால் அரசுக்கும் சுமைகள் இல்லை.
கலாசாரம் சார்ந்த பொருளாதாரம்
பொருளாதாரம் என்பது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. எனவே அது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் உருவாக்கமே ஆகும். ஆகையால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாக அமைகிறது. நமது தேசம் இன்று இவ்வளவு குழப்பங்கள், தவறுகள் மற்றும் சிரமங்களையும் மீறி முன்னேறி வருவதற்குக் காரணமே கலாசார அடிப்படைகளாகும்.
சேமிப்புகள் நமது நாட்டில் அதிகமாக உள்ளன. கடந்த பல வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சுதந்திரம் வாங்கிய பின்னர், ஏறத்தாழ பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடி வந்தனர். ஆனால் அப்போதே சேமிப்பு சுமார் ஒன்பது விழுக்காடாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அது முப்பது விழுக்காட்டைத் தாண்டி விட்டது. அதற்குக் காரணம் நமது மக்களின் கடமை உணர்வு ஆகும். அதுதான் ஒவ்வொருவரையும் தங்களால் முடிந்த அளவு சேமிக்கத் தூண்டுகிறது. அதனால் தான் நமது மக்கள் எங்கிருந்தாலும் சேமிப்புகளில் ஈடுபடுகின்றனர். உலக அளவில் வெளி நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு அனுப்பும் தொகைகளில்  அதிக அளவு இந்தியர்களாலேயே அனுப்பப்படுகிறது.
நமது தொழில்கள் வளருவதற்குக் காரணம் மக்களின் தொழில் முனையும் தன்மையாகும். எவ்வளவோ சிரமங்களுக்கிடையிலும் முன்னேற வேண்டும் என்னும் உந்துதல் மக்களைப் பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது. அதற்கு குடும்பங்களே துணை நிற்கின்றன. உறவுகளும் சமூகங்களும் உதவுகின்றன. அதனால் தொழில்கள் வளருகின்றன. ஆகையால் தான் நமது நாட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் இன்னமும் பாதியளவுக்கு மேல் உள்ளனர். அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் வெறும் ஏழு விழுக்காடாகவே உள்ளது.
தொழில்களுக்குத் தேவையான மூலதனங்கள் ஏறத்தாழ அனைத்துமே  தொழில் முனைவோர்களின் சொந்த முயற்சியால் உறவுகள் மற்றும் தொடர்புகளை வைத்து திரட்டப்படுகின்றன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. சிறு மற்றும் மத்திய தர தொழில்கள் எல்லாவற்றிலுமே சூழ்நிலைகள் இவ்வாறுதான் உள்ளன. பெரிய தொழில்களுக்குத் தேவையான நிதியைக் கொடுப்பதிலும் மக்களின் சேமிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் நாட்டுப் பொருளாதாரம் உள்நாட்டு மூலதனம் சார்ந்ததாக அமைந்துள்ளது. அதனால் வெளி நாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து நாம் வாழ வேண்டிய அவசியமில்லாமல் இருக்கிறது.
 நிதிகளைச் சேர்ப்பதிலும் அவற்றைத் தொழிலுக்காக திரட்டுவதிலும் நமது மக்களின் முறை அலாதியானது. இன்றைக்கு சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் முன்னணியிலுள்ள நாடார் சமூகம் ஆரம்ப காலங்களில் தமது தொழில்களுக்கான நிதியை சமூகத்திடமிருந்தே திரட்டியது. அதற்கு அவர்கள் கண்டு பிடித்த முறைதான்  மகமை என்பதாகும். அதனால் இன்று ஒட்டு மொத்த சமூகமும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. இந்த மாதிரி முறைகள் எல்லாம் உயிப்பான சமூகங்கள் தங்களின் கலாசார வழிகளை ஒட்டி ஏற்படுத்தப்பட்டவை.
பொருளாதாரத்தில் குடும்பங்கள்
இந்தியப் பொருளாதாரம் குடும்பம் சார்ந்ததாகவே சார்ந்துள்ளது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் சுமார் 57 விழுக்காடு குடும்பம் சார்ந்த அமைப்புகள் மூலமே வருகிறது. சேமிப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீடுகள், வியாபாரம் எனப் பலவற்றிலும் இவற்றின் பங்குகள் தான் அதிகமாக உள்ளது. நாட்டிலுள்ள பெரிய கம்பெனிகளை எடுத்துக் கொண்டாலும் 95 விழுக்காட்டுக்கு மேல் குடும்பம் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே அரசு மற்று அமைப்பு சார்ந்த துறைகளின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் பொருளாதார நெருக்கடிகள் நம்மை வெகுவாகப் பாதிப்பதில்லை.
இந்திய வாழ்வின் அடிநாதம் கலாசாரமே
எனவே நம்மை எல்லா விதத்திலும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நமது கலாசார அடித்தளங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நாம் அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது. அப்போதுதான் நமது குடும்பங்களையும் சமூகங்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற முடியும். கலாசாரத்தைத் தொலைத்து விட்டு பிறவற்றைக் காப்பாற்ற முடியாது.  
மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சமூகக் கருத்துகளும் அவர்களின் வழிமுறைகளும் தோல்வியைத் தழுவி வருகின்றன. இந்த சமயத்தில் இந்திய வழிமுறைகள் உலக முழுமைக்கும் முன் மாதிரியாக விளங்கி வருகிறது. நமது பாரம்பரியத்தின் பரந்த சிந்தனை, அரவணைப்பு, ஆன்மிக அணுகுமுறை உள்ளிட்ட குணங்கள் உலக முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக உள்ளன. உலகின் பிற வாழ்க்கை முறைகளில் இந்த நோக்கு இல்லை.
எனவே நமது கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அதை கடமையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவே நாம் சுவாமி விவேகானந்தருக்குச் செய்யும் மரியாதையாக அமையும்.  

     http://vivekanandam150.com/?p=2875
( விவேகானந்தம்150.காம் இணைய தளம், ஏப்ரல் 4, 2013)

Relevance of Swami Vivekananda today



 As we are celebrating the 150th birth anniversary of the great monk, the question arises:  What is the relevance of Swami Vivekananda  today?  India has travelled a long way since the nineteenth century. What we see today is totally different from what was there during those times. India has changed politically, economically and socially over these years. There have been changes at the religious and spiritual levels. Lots of changes have been happening across the world.

A new global order is emerging now. The richer west that Swamiji witnessed 120 years back is fast losing its lustre during the recent periods. Both the western economic ideologies stand discredited.  Their social theories, management approaches and even their life styles are being seriously questioned.  They are no longer the providers of ideas and approaches to the rest of the world.

India is fast emerging as a dominant force in the global economy. International predictions repeatedly point out India reaching higher positions in the international economic arena in future. The way that India has been marching over the years, when the rich countries are beset with difficulties, is forcing them to look at India.     Reputed academic institutions have started turning towards India to learn from her functioning models. India’s stock as a nation has been rising globally, in spite of problems at the domestic level.   So in the changed circumstances, what is the need for the teachings of Swami Vivekananda?

Swamiji’s times (1863-1902) were very difficult for the country. Under the British rule, India was in her worst phase in economic history. Famines had become frequent.  Criminal assaults on the functioning systems and economic drains soon after commencement of Crown administration had already made India poor. The economy was in a very bad shape and the native systems were under destruction. Majority of the people were living without hope.  It was   during those difficult times that Swamiji foresaw a great future for India.

Swamiji was not an ordinary monk. He was a true seer and one of the most inspiring personalities of our times. He was different in many ways. The mission of his life was not his personal salvation; but the betterment of the lives of all. Serving others, and the less privileged in particular, was more important to him. He did not confine himself to religion and spirituality, though the core of his message revolved around them. He discussed passionately about the need for economic development, improvement of the lives of the weaker sections, industrialization, social equality, women education and youth power. In all these matters he was ahead of his times. He was a patriotic monk for whom the nation was more important than anything else.  He wanted India to regain her lost glory and emerge as the Jagat Guru.

India today has tremendous opportunities before her. As a nation, we have enormous strengths. We have strong fundamentals. India is blessed with plenty of resources. Not many countries in the world could boast of vast lands, huge rivers, varieties of flora and fauna and plenty of sunlight.  We have the demographic dividend, with one sixth of the humanity as our population. Besides, we have the largest number of youth in the world today. Our people are one of the most hardworking, enterprising, simple living, family oriented and peace loving citizens in the world.

Close knit families are our critical assets. They are the reason for bringing up responsible citizens, maintaining peace in the society, saving enormous amounts of money for the nation and creating new ventures.  Relationship based and integrated societies are the products of our system. We have huge social capital that helps us to maintain harmony and support economic growth. Indian families and communities possess the capacity to function on their own, without depending on the state. The story of independent India reveals that much of her progress has been mostly on her own, many times in spite of the government. 

Indian culture is unique. It is inclusive and nurtures diversity. It treats every being, every object, as divine. Its world view is comprehensive.  The age old culture of our nation remains as the bedrock of our lives and continues to guide our destiny, without many of us being aware of it. In an age filled with confusions and conflicts around the world, the time tested Indian culture remains the beacon light.

 But unfortunately there are forces that hinder the nation’s march towards realizing her full potential. Much of the educated sections are unaware of the real situation. The education system introduced by the British continues to influence our thinking, even after more than sixty five years of independence.  There is very little understanding about our history and the contemporary functioning. As a result we continue to ignore our strengths, and look elsewhere for solutions to every one of our problems. We fail to understand that we have had a glorious past that could provide us a few useful tips. India remained a global power economically, culturally and intellectually continuously for several centuries. On the one side she was very prosperous and highly productive, yet on the other side she was deeply spiritual. No other nation has such a record in the history of mankind.

We also fail to observe the contemporary functioning systems. The economic progress, social cohesiveness and family atmosphere that we see here are something special to us. Much of the world is finding it difficult to keep their families intact and societies harmonious. The native systems are helping our nation to move forward, even when the intellectual and ruling classes continue to fail us. But we refuse to see the realities that exist in front of us. It is precisely this attitude that is hindering the progress of our nation.

So what we need is a true understanding of our nation. We need to understand her from true perspectives. Educated sections of our country are the most crucial group of people, as it is they who represent India and interpret her functioning to others. The performing sections, which constitute the majority in the country, remain silent as they do not have a voice in the public discourse. Hence the educated sections have a critical role to play. 

The present time is very important. While the west is losing its way, India is emerging big on her own. And it is here that we need to learn from Swami Vivekananda, his life, his messages and his teachings. They are more relevant now, than at any other time in contemporary history. We need to know about our backgrounds, our fundamentals   and our weaknesses. There is no better person for this than Swami Vivekananda. He inspired the freedom movement more than anyone else. Mahatma Gandhi, Subash Chandra Bose, Rabindranath Tagore and several thousands of people were influenced by him. Their love for our motherland increased manifold after studying him. He was largely responsible for creating the patriotic fervor that motivated many people to fight for the country.

Swamiji was a multi-faceted personality. He singlehandedly demonstrated to the world the need for recognizing the diverse religious beliefs   for the progress of mankind and changed the whole course of the dialogue towards India at the international level. He was a great leader and an organization builder. The institutions founded by him are the standing testimonies. His priority was to improve the living conditions of the ordinary masses, the underprivileged and the weaker sections of the society. 

He was an icon for the people around the country and a true representative of the great Indian tradition.  He continues to remain so, particularly to the youth, even after 120 years. More than anyone else in the contemporary history of India, every Indian identifies himself/herself with Swamiji and his teachings. This is irrespective of age, position and background. His is the most respected public face in India today. He inspires each one through his words, deeds and personality.   There have been thousands of service organizations/ institutions promoted in different corners of the country during the past one hundred years, inspired by him. Many of them are promoted by the ordinary people and they are all silently engaged in different service activities, and many millions have benefited out of them.

Swamiji continues to remain the master motivator for the largest number of people in our country. It is especially in this connection, that we need to study him deeply during his 150th birth anniversary. We have to discuss his ideas, thoughts and mission. His life, speeches and writings teach us many valuable lessons.  Each of us must make the maximum contribution to make India the most powerful nation on earth. We have to dedicate ourselves for this, as there are negative forces operating everywhere.  We need to put all our energies together for this purpose. And Swami Vivekananda is the best role model for all of us in this noble mission.

( Yuva Bharati, Vol 40 No.8, Vivekananda Kendra, Chennai)

இந்தியப் பொருளாதாரமும் தொழிலாளர்களின் சிரமங்களும்



இந்தியப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலக அளவில் பல வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதிக அளவிலான சேமிப்புகள், கடுமையான உழைப்பினை மேற்கொள்ளத் தயங்காத  மக்கள், உறவுகளுடன் நெருங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள், பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எதிர் நீச்சல் போட்டு தொழில்களில் ஈடுபடும் தொழில் முனைவோர் என வெவ்வேறு அம்சங்கள் பொருளாதாரத்துக்குச் சாதகமாக உள்ளன.

எனவே உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவான விசயங்களே நமது நாட்டுக்கு அதிகமாக உள்ளன. பெரிய பணக்கார நாடுகளை விடவும்  நமக்கு  வலிமைகள் நிறைந்துள்ளன. வரவுக்கு அதிகமான செலவுகள், கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம், நுகர்வுக் கலாசாரம், குறைவான சேமிப்புகள், தனி நபர் வாழ்க்கை முறை எனப் பலவும் அவர்களை சீரழித்து வருகின்றன. 

மேலும் கடந்த சில வருடங்களாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார அணுகு முறைகள் பெருமளவு தோல்வியைத் தழுவிக் கொண்டு வருகின்றன.  அவர்களின் சந்தைப் பொருளாதார தத்துவங்கள் மக்களின் பிரச்சினைகளை அதிகப்படுத்தி விட்டன. நிதிச் சந்தையை மையப்படுத்தி  அமைந்துள்ள அவர்களின் செயல்பாடுகள் மக்களை மேலும் சிரமத்தில் தள்ளி விட்டுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, அதிக கடன் சுமைகள், பெருகி வரும் வருமான வித்தியாசங்கள் என்பனவெல்லாம் நடைமுறை ஆகி விட்டன. எனவே அங்கு பல நாடுகளில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதிக்கு வந்து போராடுவது அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்துக்கு அப்புறம் துரதிர்ஷ்ட வசமாக மேற்கத்திய சித்தாந்தங்களை மையமாக வைத்தே கொள்கைகள் தீட்டப்பட்டு வருகின்றன. 1980கள் வரை சோசலிச சித்தாந்தமே நமது ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்தது. பின்னர் அது அப்போதைய சோவியத் ரஷ்யாவிலேயே தோல்வியைத் தழுவிய போது இங்கும் கை விடப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உலக மயமாக்கல் சித்தாந்தம்  மைய இடத்தில் உட்கார வைக்கப்பட்டது. எனவே தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய அணுகுமுறைகளை ஒட்டியே நமது நாட்டின்   கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஆகையால்  நமது வலிமைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி தேச நோக்கில் கொள்கைகளைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதன் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. வருடா வருடம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பல இடங்களில் வாழ்வாதரங்களைத் தேடி கிராமங்களை விட்டு மக்கள் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். கைத்தொழில்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டுள்ளன. அதே சமயம் இன்னொரு பக்கம்  குறிப்பிட்ட சில பிரிவினர்களின் கைகளில் சுலபமாகப்  பணம் பெருகுவதும், நுகர்வுக் கலாசாரம் உள்ளிட்ட மேற்கத்திய தாக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தைக் கவனமாகப் பார்க்கும் போது கடந்த அறுபதாண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஒரு விசயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அது என்னவெனில், இங்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அனைத்துமே கொள்கை வகுப்பவர்களின் குழப்பங்களை எல்லாம் மீறி மக்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு அடிப்படையாக நமது வாழ்க்கை முறையும் இந்த தேசத்தின் கலாசாரமும் ஆதார சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசுகளின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பொருத்தமாக இல்லாததால், நாட்டுக்குப் போதுமான பலன்கள் இல்லாதது மட்டுமின்றி வளர்ச்சியின் போக்கும் சரியானதாக இல்லை.

எனவே கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து வந்த போதும், வளர்ச்சி என்பது பரவலாக இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாகவுமே அமைந்துள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட டெண்டுல்கர் குழு 2009 ஆம் வருடத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்  எனக் கணக்கிட்டு சொல்லியுள்ளது. 2009-10ஆம் வருடத்தில் நாட்டில் நிலவிய வேலை வாய்ப்பு நிலைமை சம்பந்தமான தேசிய உத்தேச மாதிரி கணக்கெடுப்பின் 66ஆவது சுற்று  மொத்த வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் 2009-10ல் முடிவுற்ற  ஐந்து வருட காலத்தில் அதற்கு முந்தைய ஐந்து வருடத்தை விட வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத்  தெரிவிக்கிறது.

வேலை உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அதுவும் நம்மைப் போன்ற மக்கள் தொகையை அதிகமாகப் பெற்றுள்ள நாட்டுக்கு அது மிகவும் அவசியம். அதிக மக்கள் தொகை என்பது நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஒரு நல்ல மூலதனமாகத் தற்போது கருதப்படுகிறது. ஏனெனில் உலகின் பல நாடுகளில் குடும்ப கலாசாரத்தைத் தொலைத்து விட்டதால் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதனால் அங்கெல்லாம் வேலை செய்வதற்குத் தேவையானவர்களை விட இள வயதினர் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். எனவே அந்த நாடுகளில் பலவிதமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் நமது நாடு உலகிலேயே அதிக அளவு இளைஞர்களை  பெற்றுள்ளது. எனவே அவர்களின் திறமைகளை முழுமையாகப்  பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவது கொள்கை  வகுப்பவர்களின் தலையாய கடமையாகும். ஆனால் அண்மைக் காலமாக வேலைகளை உருவாக்குவதற்கான  செயல் திட்டங்கள் குறைந்து வருகின்றன. வேலைகளை அதிக அளவில் உருவாக்கும் தன்மையுள்ள விவசாயம், கிராமப் பொருளாதாரம், குறு மற்றும் சிறு தொழில்கள் நசிந்து வருகின்றன. அதற்கான சரியான கொள்கைகள் வகுக்கப்படுவது இல்லை.

மேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 1990 களிலிருந்து பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன. 1991 முதல் 2008 வரையிலுமான  இடைப்பட்ட பதினேழு வருடங்களில்  அமைப்பு சார்ந்த துறைகள் மொத்தமாக எட்டு இலட்சம் புதிய வேலைகளையே உருவாக்கியுள்ளன என்னும் புள்ளி விபரத்தை மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  எனவே கடந்த இருபது வருட கால நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த வேலை வாய்ப்பைக் குறைத்து ஏற்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.

ஆகையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் பொருத்தமான வேலைகள் இல்லாமல் தவிக்கின்றன. நிரந்த வேலைகளை இழந்த பல பேர் தினக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.  அதே சமயம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கை நடத்தி வந்த சிறு விவசாயிகள் மற்றும் சிறிய தொழில்களை நடத்தி வந்தவர்கள் பலர் வேலை தேடிச் செல்லும் அவலம் அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே மக்கள் செய்வதறியாது தவிக்கின்ற சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.

ஆகையால் நமது நாட்டைப் பொறுத்த வரையில் அஸ்திவாரங்கள் வலுவாக இருந்தும் ஒட்டு மொத்த வளர்ச்சி அனைவருக்கும் ஏற்படாத வகையிலும் வேலை வாய்ப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலும் உள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் அரசுகளின் தவறான அணுகு முறைகளும் திட்டங்களும் ஆகும். எனவே அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் காக்க முடியாத கொள்கைகள் தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான திசையில் அரசுகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போது தான் நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்குமான முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ச்சி முழுமையானதாக அமையும்.

(பி.எம்.எஸ்.செய்தி, சென்னை, மார்ச் 2013)


பாலியல் வன்முறைகள்: சில சிந்தனைகள்



 தலை நகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன் பின் சில நாட்கள் கழித்து மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி மரணமடைந்த துயரமான சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்லி மட்டுமன்றி நாட்டின் பல நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர் பாலியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற  நீதியரசர் வர்மா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை  அமைத்தது. விரைவிலேயே குழுவின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதையொட்டி அரசு ஒரு அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அது பற்றி விவதாங்கள் மேற்கொள்ளப் பட்டு முக்கிய  முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 

இதையொட்டி அதிகமாக விவாதிக்கப்படாத சில முக்கியமான கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. மேற்கண்ட விசயத்தை முதல் முறையாக சமூகமே முன்னெடுத்துச் செயல்பட்டது பாராட்டப்பட வேண்டியதாகும். மக்கள் பொதுவாகவே தங்களுடைய வாழ்க்கை, வேலைகள், பொறுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம். பொதுவாக பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வந்து வீதிகளில் இறங்கிப் போராடுவது இல்லை. அதுவும் டெல்லி போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பெரு நகரங்களில் சுத்தமாக இல்லை. அண்மைக் காலங்களில் முதல் முறையாக சென்ற வருடம் தான் அன்னா ஹசாரே தலைமையில் லோக் பால் மசோதா வேண்டி அமைதி வழிப் போராட்டம் நடந்த போது மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

அது டெல்லியில் மட்டுமன்றி நாட்டின் பிற நகரங்களிலும் பரவியது. அவரது உண்ணாவிரதத்தின் போது மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆதரவளித்து வந்தது அப்போதே ஒரு வித மக்களின் எழுச்சியாகத் தெரிந்தது. ஆனால் லோக்பால் சம்பந்தமான போராட்டங்களுக்கு தலைமை இருந்தது. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அவர்களுக்குத் துணை புரிய வெளியில் தெரிந்த பொது வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்த முகங்கள் இருந்தன. அதற்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் தாமாகவே தோன்றின. அவற்றுக்குப் பின்னால் பிரபலமான முகங்கள் இல்லை. அவற்றை நடத்துவதற்குப் பெரிய அமைப்புகள் எதுவும் இல்லை.  ஆயினும் போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது. அதில் குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். அதுவும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சம்பிரதாயத்துக்கு ஒரு நாள் மட்டும் நடத்தப்படாமல்,  உண்மையில் மன வேதனையுடன் மக்களின் ஒன்று பட்ட வேகத்தால் போராட்டம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு சில அவசியமான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாக முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்முறை குறித்து அதிகார மட்டங்களில் நிலவிய  அக்கறையற்ற தன்மை மாறி வருகிறது.

ஆனால் அதே சமயம் இன்னமும் தொடர்ந்து கற்பழிப்புகள் உள்ளிட்ட பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. மக்களின் போராட்டம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பின்னரும் அவை வெகுவாகக் குறைந்ததாகத் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைகள் திடீரென அதிகரித்து விடவில்லை என்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் அது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் சிலர் வாதிடுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கக் கூடும். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2010 ஆம் வருடத்துக்கான ஆய்வுகள், சுவீடனில் ஒரு இலட்சத்துக்கு 63.5 பேரும், அமெரிக்காவில் 27.3 பேரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறது. அதே சமயம் இந்தியாவில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 1.8 பேர் எனத் தெரிவிக்கிறது.

இதை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் குற்றங்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதற்காக அல்ல. பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் நமது கலாசாரத்தில் ஒரு சிறு குற்றமும் கூட நடக்காமல் இருக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும் ஆகும். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தாக்குதல் கூட அந்த  சமூகத்தின் சீரழிவினையே காட்டுகிறது.

ஆனால் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது படிப்பு, சம உரிமை, தனி நபர் சுதந்திரம் ஆகியன அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் தவறுகள் குறைவாக இல்லை என்பதும், மாறாக மிக அதிகமாக உள்ளது என்பதுவும் ஆகும். ஆனால் நமது தேசத்தில் அவை குறைவாக இருப்பதற்குக் காரணம் காரணம்  நம்முடைய குடும்ப, சமூக அமைப்பு முறைகள் மற்றும் நமது கலாசார பாரம்பரியம் ஆகும்.  நமது சிந்தனை முறைகள் பெண்களை தெய்வமாகவும் தாய்மையின் வடிவமாகவும் மதிக்கும் தன்மையுடையவை. அதனால் தான் பெண்களை மிக உயர்வாக மதிக்கக்  கூடிய தன்மை இன்னமும் நாடு முழுவதும் பரவலாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அதே சமயம் இந்த மாதிரி விசயங்களில் நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து விடுவது மிகவும் தவறானதாகும். ஏனெனில் நமக்கென்று ஒரு பெரிய பொறுப்புள்ளது. நாம் நல்ல பின் பலத்தைப் பெற்றுள்ளோம். இங்கு ஒவ்வொரு பெண்ணுக்கு ஏற்படும் தாக்குதலும் நமது தனித் தன்மைக்கும் வாழ்க்கை முறைக்கும்  விடப்படும் சவாலாகும். எனவே இனி மேலும் பாலியல் வன்முறைகளைப் பார்த்து இன்னொரு துரதிர்ஷ்டமான  நிகழ்ச்சி எனக் கருதக் கூடாது. அவற்றைத் தடுப்பதற்கு என்ன முயற்சிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கட்டாயமாக உடனே செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் பெரிய பாரம்பரியத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.. நம்மில் ஒரு பாதியாக உள்ள பெண்களுக்கு அடிப்படையான பாதுகாப்பைக் கூடத் தர முடியவில்லை என்றால், நாம் எந்த விதமான சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம் ?  

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இது குறித்துப் பல போராட்டங்கள் மற்றும் விவாதாங்கள் நடந்து முடியும் சூழ்நிலையில் அதே டெல்லியில் பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளே இருப்பவர்கள் தெரியாத மாதிரி உள்ள கண்ணாடிகளைக் கொண்ட வாகனம் ஒன்று வேகமாகச் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுகிறது. உள்ளே ஒரு பெண் நான்கு ஆண்கள்.  நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி பின்னர் நகரை விட்டு வெளியில் கடத்திக் கொண்டு போகும் போது வாகனத்தை நிறுத்தாமல் போன போதுதான் அந்த நிகழ்வு தெரிய வருகிறது. எந்த தலைநகரில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களாகவும் விவாதாங்களாகவும் நடந்து அதன் விளைவாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அங்கேயே இன்னமும் அதே விதமான  கொடுமை நிகழ்ந்துள்ளது.

பள்ளி மாணவியர், சிறுமியர் என வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமை நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கின்றன. அதிலும் படித்தவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோர்  இந்த மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்னும் போது  நமது கல்வி முறை பற்றியே வருத்தம் ஏற்படுகின்றது. மேலும் அதிகார மட்டத்தின் உயரத்தில் இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவதும் பின்னர் அவை பெரிதாகும் போது அவற்றில் இருந்து தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்க முயல்வதுமாகத் தெரிகின்றது. எனவே எந்த விதமான பேர்வழிகள் அதிகார மையங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்தும் ஐயங்கள் எழுகின்றன.

பாலியல் வன்முறைகள் குறித்து பாராளுமன்றம் முழுமையாக விவாதித்து  தேவையான சட்டங்களை இயற்ற வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தப்பிக்க முடியாமல் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக  வேண்டும். அதனால் அந்த தவறுகளைச் செய்வதற்கு சம்பந்தப் பட்டவர்கள் அச்சப்பட வேண்டும். எனவே இது.உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அவசியமான முயற்சியாகும்.

ஆனால் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாம் இது குறித்துப் பல கோணங்களிலும் முழுமையாக அணுகுவது நல்லது. ஏனெனில் இது நமது இன்றைய சமூகத்தின் முன் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை. சட்டங்கள் என்பவை தண்டனைகளை வைத்து குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும். குற்றங்களைக் குறைக்க இன்னொரு முக்கியமான வழி அந்தக் குற்றங்களே நடைபெறாமல் இருக்கச் செய்வது பற்றியது. எனவே அந்தக் குற்றங்கள் நடை பெறுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்வதும் மிக முக்கியமானதாகும். இன்று நம்முடைய பொது விவாதங்கள் அனைத்தும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியே உள்ளன.

எனவே நாம் அவற்றைத் தவிர பிற வழிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.  அந்த வகையில் பலராலும் முக்கியமாகக் கருதப்படுவது  இன்று நமது குழந்தைகளுக்கு உயர் நெறிகள், ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் குறித்து எந்த வித போதனைகளும் இல்லை என்பது பற்றிய கவலையாகும். இவை பற்றி நமது நாடு சுதந்திரம் பெற்ற பின் மத்திய மத்திய அரசால் அமைக்கப் பட்ட உயர் மட்டக் குழுக்கள் கவலை தெரிவித்து, நமது விழுமியங்கள், உயர் நெறிகள் மற்றும் கலாசாரம் குறித்த போதனைகள் கல்விக்கூடங்களில் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலமுறை  வலியுறுத்தியுள்ளன. உச்ச நீதி மன்றமும் இது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆயினும் இந்த விசயம் குறித்துத் தேவையான  நடவடிக்கைகள்  எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாகும். நம்மிடத்தில் மதிப்பிட முடியாத பெரிய சொத்துக்கள் இருக்கின்றன.. இங்கிருப்பது போல பண்பட்ட இலக்கியங்கள் வேறெங்கும் இல்லை. நாடு முழுவதும் பல மொழிகளிலும்  நீதி நூல்கள் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு பகவத் கீதை பல மேல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்படுகிறது. இராமாயணமும் மகாபாராதமும் உலகம் முழுதும் அறியப்பட்ட அற நெறி இலக்கியங்கள். ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும் அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய உயர் தரமான வழிகாட்டிகள். ஆனால் நாம் அவற்றையெல்லாம் போதிக்கத் தயங்குகிறோம். உயர் தரமான வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கக் கூடிய தமிழ் இலக்கியங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

ஆட்சியாளர்களின் போலிச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் அற நெறிக் கல்வியைக்  கொடுக்கத் தவறுகின்றன. அதனால் நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைச் சூத்திரங்கள் நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு மனிதனின் விழுமியங்கள் சிறு வயது முதற் கொண்டு விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் அவன் வளரும் போது நல்லவனாக தன்னைச் செதுக்கிக் கொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்துக்கான சர்வதேச அமைப்பு பத்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களிடையே ஒரு ஆய்வை நடத்தியது. அது வழக்கமாக மாணவர்களுக்குத் தேவையானவை பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றவர்களும் கருத்துச் சொல்வதாக இல்லாமல் மாணவர்களே தங்களின் உள்ளக் கிடக்கைகளைப் பற்றிச் சொல்வதாக அமைந்தது. அதில் முக்கியமான அம்சம் நாடு முழுவமுதுள்ள மாணவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் கலாசாரக் கல்வி தங்களுக்கு அவசியம் ஒருமித்த குரலில் கூறியிருந்ததுதானாகும்.

எனவே மாணவர்களே வேண்டுமென்று கேட்கக் கூடிய அத்தியாவசியமான ஒன்றை நாம் கொடுக்கத் தவறி வருகிறோம். மகாத்மா காந்தி, தாகூர் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள்  வலியுறுத்திக் கூறிய இந்த விசயத்தை நம்மால் மேலெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் இந்தச் சமயத்தில் கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், சமூக வல்லுநர்கள் எனப் பலரும் இது குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் கல்விக் கூடங்களில் ஒழுக்க நெறிகள், விழுமியங்கள் மற்றும் கலாசாரம் குறித்த அறிவு போதிக்கப்பட வேண்டும். அதற்காக அரசுகள் கட்டாயப் படுத்தப்பட வேண்டும்.  கல்வி என்பது நமது குழந்தைகளைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவிகளாக மட்டுமே மாற்றி வரும் நிலைமை மாற வேண்டும்.

மாறி வரும் உலக மயமாக்கல் சுழ்நிலையால் பொது மதிப்பீடுகளும் விழுமியங்களும் சமூக அளவில் குறையத் துவங்கியுள்ளன. அதனால் பொருளாதாரமே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டு மற்றவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப் படுகின்றன.  நுகர்வு கலாசாரம், பணமே முக்கியமெனக் கருதும் போக்கு, சுலபமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம், அடுத்தவர்களைப் பற்றி அக்கறையில்லாத தன்மை ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே விழுமியங்களைத் தாங்கிப் பிடிக்க உதவும் சமூகக் கட்டமைப்புகளின் தாக்கம் தளர்ந்து கொண்டுள்ளது. ஊடகங்கள், கல்வி முறைகள் எனப் பலவும் நவீனம் என்ற பெயரில் தனி நபர் சித்தாந்தம், குடும்ப மற்றும் சமூக அமைப்புகளின் சீரழிவுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்தும் நாம் விரிவாக சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆகையால் சட்டங்கள்  மூலமாக பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், எந்த விதத் தவறுகளும் உருவாகமால் தடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் எல்லாப் பொறுப்புகளையும் அரசாங்கத்திடம் மட்டுமே விட்டு விடாமல், படித்தவர்களும் சமூகமும் சில அத்தியாவசியமான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்த விசயத்தில் நமக்குப் பெரிய பொறுப்புள்ளது. சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நாடாக இந்தியா மேலெழுந்து வரும் இந்த காலகட்டத்தில் அடிப்படையான மாற்றங்கள் குறித்து சிந்தித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது கடமையாகும். அதற்காக இந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

( ஓம் சக்தி, மார்ச் 2013)